இளைஞர்கள்

johnhatton61986 19/07/2016

டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு குறைவாக உள்ளவர்களுக்கு சரக்கு விற்க கூடாது. வயது குறித்த சந்தேகம் எழுந்தால் ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அட்டையை வாங்கி வயதை உறுதிசெய்து கொண்டு, மதுபாட்டில் வழங்க வேண்டும் என கடை ஊழியர்களை டாஸ்மாக் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். தமிழகத்தில், அரசு சார்பில் டாஸ்மாக் கடை நடத்தப்படுகிறது. இளைஞர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவர்கள் என பலர் இன்று குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வரும் நிலைமை உருவாகிக்கொண்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளை மூடவும், […]

angusam 05/12/2015

கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை நகரம் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. மீட்புப்பணிகளில் ராணுவம் உள்ளிட்ட முப்படையினரும் இயங்கி வருகின்றனர். பால், ரொட்டி உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு,  தமிழகத் தலைநகர் இத்தகைய இடர்பாட்டினை எதிர்கொண்டுள்ளது.  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல்விட்ட அரசு,  நிவாரணப்பணிகளை மேற்கொள்வதிலும் சுணக்கம் காட்டியது பொதுமக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களும், தன்னார்வத் தொண்டர்களும் தங்களால் இயன்ற உதவிகளையும், உணவு பொருட்களையும் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு […]

angusam 30/11/2015

சீமை கருவேலம் மரங்கள் அடர்ந்து கிடந்த ஏரி இப்போது குளம் போல தண்ணீர் நிரம்பி நிற்பதை பார்த்து சந்தோசத்தில் துள்ளிக்குதிக்கிறார்கள் ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடி கிராமவாசிகள். முந்திரிக்காடுகள் அடந்து காணப்படும் இந்த பகுதிகளில் சிலவருடங்களாக  மழையில்லாமல் வறண்ட பூமியாகிப்போனது. அதில் ஜெயங்கொண்டம் அருகிலுள்ள புதுக்குடி கிராமத்தில் உள்ள தண்ணீர் பந்தல் ஏரி சில வருடங்களாக வறண்டு மேடேறி, சீமைக்கருவை மண்டி தூர்ந்துபோய் கிடந்தது. இதைபார்த்து அமைதியாய் வேடிக்கைபார்க்காமல் அந்த ஊர் இளைஞர்கள் ஏரியை மீட்டெடுக்க முடிவு செய்து […]

angusam 20/11/2015

 இந்தியா இளைஞர்கள், தினந்தோறும் 2.2 மணி நேரத்தை தங்களது செல்போனில் செலவிடுவதாக டி.என்.எஸ்., நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.”டி.என்.எஸ்.,’ என்ற சர்வதேச ஆய்வு நிறுவனம், சர்வதேச அளவில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் நடத்திய ஆய்வு முடிவில், இந்தியாவிலுள்ள 16-30 வயதுடைய இளம் வயதினர்கள் தினமும் சராசரியாக 2.2 மணி நேரத்தை தங்களது செல்போனில் செலவிடுகின்றனர். இவ்வாறாக ஆண்டுக்கு 34 நாட்கள் தங்கள் செல்போனுக்காக நேரத்தை செலவழிக்கின்றனர். இதுவே சர்வதேச இளைஞர்கள் நாளொன்றுக்கு 3.2 மணி நேரம், அதாவது […]