சினிமா

johnhatton61986 11/08/2016

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க பல முன்னணி நடிகைகள் வெயிட்டிங். இந்நிலையில் இவரின் ஆரம்ப காலத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர்களில் ஒருவர் ரெஜினா. இன்று இவரும் முன்னணி நடிகையாக தெலுங்கு சினிமாவில் வலம் வருகிறார். இவர் தமிழில் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து செல்வராகவன் அடுத்து சந்தானம் நடிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளார், இப்படத்திலும் ரெஜினா நடிப்பார் என கிசுகிசுக்கப்படுகின்றது.

jefferywinneke 08/07/2016

சிவா, பவர் ஸ்டார், சென்ராயன், சிங்க முத்து, மன்ஸுர் அலி கான், ஜாங்கிரி மதுமிதா என காமெடி ராணுவத்தையே இறக்கி இருக்கும் ‘அட்ரா மச்சான் விசிலு’ படத்திற்கு நாம் விசில் அடிக்க முடியுமா என பார்ப்போம். கதை படத்தின் கதையில் பவர் ஸ்டார் கிட்டத்தட்ட ஒரு சூப்பர் ஸ்டார், அவரின் அதி தீவிர ரசிகர்கள் என்பதையும் தாண்டி வெறியர்கள் என்று சொல்லும் அளவிற்கு 3 ரசிகர்கள் சிவா, சென்ராயன், மற்றும் அவர்களின் நண்பர். பவர் ஸ்டாரை கடவுளாக […]

jefferywinneke 08/07/2016

தமிழ் சினிமாவில் ஒரு வழக்கம் உண்டு, ஒவ்வொரு ஹீரோவும் கட்டாயம் ஒரு படத்திலாவது போலீசாக நடிப்பார்கள். அது போல இப்போது இருக்கும் trend ஓரு பேய் படத்திலாவது நடிக்க வேண்டும், இந்த வரிசையில் தற்போது சந்தானம் நடித்து வந்திருக்கும் பேய் படம் தில்லுக்கு துட்டு. கதை  சிவன் கொண்டை மலை என்ற ஒரு மலையில் ஒரு அமானுஷ்ய பேய் பங்களா அங்கு பேய் எப்படி வந்தது என்பதற்கு ஒரு flash back. பின் சென்னையில் சந்தானத்துக்கும் ஷனாயாவிற்கும் […]

jefferywinneke 01/07/2016

தமிழ் சினிமாவில் அவ்வப்போதுதான் குழந்தைகளுக்கான படங்கள் வருகின்றது. அதுவும் குறிப்பாக சமீபகாலமாக பேய் படங்களின் வரிசையில் இருந்து கொஞ்சம் இடைவேளை விட்டு இந்த வாரம் குழந்தைகள் ஸ்பெஷலாக அப்பா படம் வந்துள்ளது. எதையோ நோக்கி ஓடும் மிஷின் வாழ்க்கையை பெற்றோர்கள் மட்டுமில்லாமல் குழந்தைகள் LKG சேரும் போதே அவர்கள் தலையிலும் ப்ரஷரை ஏற்றிவிடுகிறார்கள், இதனால் ஏற்படும் விளைவை சமுத்திரக்கனி சாட்டை எடுத்து விலாசியுள்ளார். கதைக்களம் ஒவ்வொரு அப்பாவிற்கும் தன்னுடைய பிள்ளைகளை எதிர்காலத்தில் எப்படி வளர்க்க வேண்டும் என்பது […]

johnhatton61986 30/06/2016

நெடுஞ்சாலை’, ‘மாயா’ போன்ற படங்கள் மூலம் புகழ் பெற்ற ஆரி, இளைஞர்களுக்காக குறும்படம் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். ‘நெடுஞ்சாலை’, ‘மாயா’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆரி. இவர் தற்போது குறும்படம் எடுக்கும் இயக்குனர்களுக்காக புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதுகுறித்து சமீபத்தில் தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆரி, இந்த தயாரிப்பு நிறுவனத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். ‘ஆரிமுகம்’ என்று பெயர் வைத்துள்ள இவரது தயாரிப்பு நிறுவனத்தை அறிமுகப்படுத்திவிட்டு ஆரி பேசும்போது, ஆரி முகம் நிறுவனத்தில் நானும் […]

angusam 04/06/2016

கணவன் எவ்வளவு தவறுகளைச் செய்தாலும் விட்டு விலக முடியாத, உதறமுடியாத பெண்களின் மனப்போராட்டங்களின் வடிவம், இறைவி. ஆண்களின் பொறுப்பற்ற  வழியே இந்தத் தலைமுறைப் பெண்களின் அவஸ்தைகளை உணர்வுபூர்வமாகவும் அப்பட்டமாகவும் வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். எடுத்த படத்தை வெளியிடமுடியாமல் போராடும் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, அதனால் உண்டாகும் விளைவுகள் என இந்த ஒருவரிக்கதையில்தான் எத்தனை எத்தனை முடிச்சுகள்! எத்தனை எத்தனை அலைக்கழிப்புக்கள்! படம் வெளிவராததால் குடித்தே சீரழியும் எஸ்.ஜே. சூர்யா, அவரைச் சரியான வழிக்குக் கொண்டுவர பாடுபடும் அவருடைய […]

angusam 25/12/2015

படத்தின் ட்ரெய்லரை பார்த்த போதே தெரிந்து விட்டது. இது தாரே ஜமீன் பர் படத்தின் மறுஉருவாக்கமாக தான் இருக்கும் என்று. படமும் அந்த அளவுக்கு இருந்தால் கூட போதும் என்ற மனநிலையில் தான் படத்துக்கு போனேன். இப்பவும் தாரே ஜமீன் பர் படம் பார்த்தால் இறுதிக்காட்சியில் தேம்பித் தேம்பி அழுவேன். அந்த அளவுக்கு அந்த பையனின் இயலாமையை நமக்குள் கடத்தி அவனுடனே பயணிக்க வைத்திருப்பார்கள்.   நான் எதிர்பார்த்த மாதிரியே தாரே ஜமீன் பர் படத்தை கொஞ்சம் […]

angusam 22/12/2015

ரேப் என்று கத்தினால் கூட போலீஸ் அமைதியாகிவிடும் ஆனால் பீப் என்று சொன்னாலே அரஸ்ட் வாரண்ட் வீடு  தேடி வரும். அந்த அளவுக்கு நீதிமன்றமே கைது செய்ய தடையில்லை என்று பிறப்பித்த உத்தரவு நடிகர்களை அலர வைத்துயிருக்கிறது. அந்த அளவுக்கு நாளுக்கு நாள் பிரச்சனை வெடித்துக் கொண்டிருக்கிறது. நீதிமன்றத்தில் ரேஷன் கடையில் நிற்பதுபோல   தமிழகம் முழுவதும் வரிசையில் நின்று வழக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள் சிம்பு மீது. இன்னொரு பக்கம் கண்ணீரால் உங்க கால்களை கழுவுகிறேன் என்று […]

angusam 16/12/2015

சிம்பு பாடியதாக கூறி வெளியான ‘பீப் சாங்’தான் தற்போதைய தலைப்பு செய்தி.  இதுமட்டுமல்லாமல்  இதுதான் கடந்த சில தினங்களாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த பாடலுக்கு எதிராக கொதித்துள்ள பெண்கள் அமைப்பினரும், மாணவர்களும் சிம்புவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். கூடவே தமிழகம் முழுவதும் சிம்பு, அனிருத் இருவர் மீதும் காவல்துறையில் பல்வேறு புகார்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகார்களின் அடிப்படையில் சிம்பு மீது நடவடிக்கை எடுக்க போலீசாரும்  தீவிரமாக உள்ளனர். இந்நிலையில், இந்த பாடல் விவகாரம் குறித்து […]

angusam 15/11/2015

ஐஸ்வர்யாராயுடன் காதல் மோதல் வந்து பிரிந்ததும் ஐஸ் போன்ற தோற்றத்தில் இருந்த துபாய் பெண் சிநேகா உல்லாலை தனக்கு ஜோடியாக அறிமுகம் செய்தார் சல்மான்கான். அதன்பிறகு அவரை கண்டுகொள்ளவில்லை. கத்ரினா கைஃப்புடன் காதல் மோதல் வந்து பிரிந்ததும் கத்ரி போன்ற தோற்றமுடைய மும்பைப் பெண் ஜரீன்கானை தனக்கு ஜோடியாக அறிமுகப்படுத்தினார் சல்மான்கான். ஆசைகாட்டி அறிமுகப்படுத்தியதுடன் சரி… பிறகு அவர் களைக் கண்டுகொள்ளவில்லை. இருவரும் சல்மான் கண்டு கொள்ளாதது குறித்து வெளிப்படையாகவே தெரிவித்தும் பிரயோஜனமில்லை. டோலிவுட்டுக்கு வந்தார் சிநேகா. […]

angusam 10/11/2015

சென்னையில் இருந்து தங்கை லட்சுமி மேனனை கல்லூரியில் சேர்க்க கொல்கத்தா செல்கிறார் அஜித். அங்கு கால்டாக்சி டிரைவராக இருக்கும் மயில்சாமி உதவியுடன் வீடு எடுத்து தங்குகிறார். மேலும் அவர் பணி புரியும் கால்டாக்சியின் ஓனரான சூரியுடன் பேசி அஜித்துக்கு கால்டாக்சி டிரைவர் வேலையை வாங்கித் தருகிறார். வக்கீலான ஸ்ருதிஹாசன் ஒரு நாள் அஜித்தின் கால்டாக்சியில் ஏறுகிறார். அப்போது அஜித்தின் வெகுளி தனத்தை பார்த்து கோர்ட்டில் பொய் சாட்சி சொல்ல வைக்கிறார். ஆனால், எதிர்பாராத விதமாக இவர் பொய் […]

angusam 27/10/2015

ப்ளஸ் டூ பாஸ் பண்ணிட்டு, வீட்டுக்குப் பக்கத்துலயே ஒரு காலேஜ்ல சேர்ந்து ‘English copy editing’ கோர்ஸ் படிச்சிட்டிருக்கேன். இது கிட்டத்தட்ட ஜர்னலிஸம் மாதிரி. புராஜெக்ட் கொடுக்கிறப்ப யாரையாவது பேட்டி எடுக்கச் சொல்வாங்க. இன்னும் மூணு வருஷத்துல ‘ஜர்னலிஸ்ட் லட்சுமி மேனன்’னு எல்லாரும் சொல்ற மாதிரி கலக்குவேன்!” நான் அப்போ இந்தி ஹீரோயின் கங்கணா ரனாவத் பேட்டி எடுக்க ஆசை. அவங்ககிட்ட நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கணும். செம சூப்பர் டேலன்ட் பொண்ணு அவங்க” – இதுதான் லட்சுமி […]

angusam 19/10/2015

தோரோட்டம் துவங்கிவிட்டது. யெஸ்… பல மாதங்களாகவே இழுபறியாக இருந்த சேரனின் C2H திட்டம் வெகு விமரிசையாக துவங்கப்பட்டிருக்கிறது. நேரு உள் விளையாட்டரங்கத்தில் ஆயிரக்கணக்கான முகவர்கள், அவர்களின் குடும்பங்கள் புடைசூழ இந்த திட்டத்தை துவங்கிவிட்டார் சேரன். முக்கியமாக திரையுலகத்தின் மூத்த கலைஞர்கள் வாழ்த்துக்களுடன்… அவரது முதல் படமான ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ திரைப்படம் இந்நேரம் தமிழர்களின் வீடுகளில் தேய தேய பார்க்கப்பட்டிருக்கும். அதற்கப்புறமும் வரிசையாக நல்ல படங்களை கையில் வைத்திருக்கிறார் சேரன். ஒரே நாளில் திரையரங்குகளிலும் இந்த […]

angusam 15/10/2015

நடிகர் சங்க தேர்தலில், நாடக நடிகர்கள் 934 பேர் தபாலில் வாக்களித்துள்ளனர்.நடிகர் சங்க தேர்தல்தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் சரத்குமார் அணியும், விஷால் அணியும் மோதுகின்றன. இரு அணி சார்பிலும் தலைவர், பொதுச்செயலாளர், 2 துணைத்தலைவர்கள், ஒரு பொருளாளர் மற்றும் 24 செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 58 பேர் போட்டியிடுகின்றனர். ஒரு சுயேட்சை வேட்பாளர் தலைவர் பதவிக்கும் பொதுச்செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார். இன்னொரு சுயேட்சை வேட்பாளர் துணைத்தலைவர் பதவிக்கு […]

angusam 30/09/2015

கடந்த 20ம் தேதி சிலை திறப்பு விழாவிற்காக கமலஹாசனும், சிவகார்த்திகேயனும் மதுரைக்கு விமானத்தில் ஒன்றாக சென்றுள்ளனர். அப்போது கமல் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை தாக்கியுள்ளனர். இதை சிலர் தங்களது செல்போனில் எடுத்து சமூகவலைதளங்களில் பரவவிட..திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதல் நிகழ்ச்சி பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “அப்படி ஏதும் நடக்கவே இல்லை” என்று கமல் மறுத்தார். சிவகார்த்திகேயனோ, “நடந்துவிட்டது.. விட்டுவிடுங்கள்” என்று கூறினார். கமல் பற்றி அவதூறாக சிவகார்த்திகேயன் பேசியதாகவும், கமல் மகள் ஸ்ருதிஹானை கிண்டல் செய்ததாகவும் இருவேறு […]