சூர்யா

johnhatton61986 08/08/2016

பெருங்குடியில் தம்பியை கேலி செய்ததை தட்டிக்கேட்ட வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர். தம்பியை கேலி சென்னையை அடுத்த பெருங்குடி திரு.வி.க. தெருவில் வசிப்பவர் சத்யா (வயது 27). பட்டதாரி. இவருடைய தம்பிகள் சரவணன் (25), முகந்தன் (23). இவர்கள் 3 பேரும் ஒன்றாக தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர்கள். முகந்தன் வேலைக்கு சென்றபோது அங்கிருந்த சிலர் அவரை […]

johnhatton61986 02/08/2016

விக்ரம், ஆனந்த் ஷங்கர் இயக்கிய இருமுகன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று (ஆகஸ்ட் 2) நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் ஹரி பேசும்போது, சூர்யாவின் S3 படத்தை தொடர்ந்து தன்னுடைய அடுத்த படம் விக்ரமுடன் தான் என்றும் சாமி 2ம் பாகம் என்று உறுதிபடுத்தியுள்ளார். அதோடு இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளர் என்றும் கூறினார்.

johnhatton61986 31/07/2016

தமிழ் சினிமாவின் உச்ச நட்ச்சத்திரங்கள் விஜய், சூர்யா. இவர்களை எப்படியாவது ஒரு படத்திலாவது இயக்க வேண்டும் என்பது பலரின் கனவு. இந்நிலையில் முருகதாஸின் உதவி இயக்குனராக இருந்து, அரிமா நம்பி என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் ஆனந்த் ஷங்கர். இவர் இயக்கத்தில் விரைவில் இருமுகன் படம் வெளிவரவுள்ளது, இவர் சமீபத்தில் ஒரு ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். இதில் துப்பாக்கி, 7ம் அறிவு படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினீர்கள், எப்போது விஜய், சூர்யா அவர்களை வைத்து […]

johnhatton61986 23/07/2016

தமிழ் சினிமாவில் எப்போதும் ரசிகர்களுக்கு என்று விருப்பமான நடிகர்கள் இருப்பார்கள். அவர்கள் பெருபாலும் இரண்டு கூட்டணிகளாக பிரிந்து சண்டைப்போட்டு கொண்டே இருப்பார்கள், இவர்கள் சண்டையில் அவர்கள் உயரம் வளர்ந்து கொண்டே இருக்கும். அந்த வரிசையில் ரஜினி-கமல், விஜய்-அஜித் என்று கூறலாம், ஆனால், இவர்களை போல் இல்லாமல் தனக்கென்று ஒரு கோடு போட்டு அதில் சிறப்பாக நடந்தவர் தான் சூர்யா. ரசிகர்களிடம் மற்ற நடிகர் ரசிகர்களுடன் சண்டைப்போட வேண்டாம், நாங்கள் அனைவரும் நண்பர்களே என வெளிப்படையாக கூறிய ஒரு […]

johnhatton61986 17/07/2016

விஜய் ஆண்டனி வளர்ந்து வரும் நடிகர்களில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கிவிட்டார். இவர் படம் வந்தால் நம்பி போகலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. இந்நிலையில் இவர் நடிப்பில் தமிழில் சூப்பர் ஹிட் ஆன பிச்சைக்காரன் படம் தெலுங்கில் டப் செய்து ரிலிஸ் செய்தனர். இந்த படம் தமிழை விட தெலுங்கில் மெகா ஹிட் அடித்துள்ளது. கிட்டத்தட்ட தற்போது வரை ரூ 25 கோடி வரை வசூல் செய்துவிட்டது, இதன் மூலம் ரஜினி, கமல், விஜய், அஜித், […]

johnhatton61986 16/07/2016

சூர்யா 24 படத்தை தொடர்ந்து இனி கமர்ஷியல் படங்களுக்கு தான் முக்கியத்துவம் என்று முடிவு செய்துவிட்டார். இதனால், அடுத்து பிரமாண்டமாக சிங்கம்-3 தயாராகி வருகின்றது. இப்படத்தின் டீசர், ட்ரைலர் என ஏதும் வராத நிலையில் வியாபாரம் மட்டும் நடந்து விட்டதாம், ஒரு புதிய நிறுவனம் இந்த படத்தை தமிழகத்தில் வெளியிடவுள்ளதாம். மேலும், இப்படம் விஜய், அஜித் படங்களை விட அதிக தொகைக்கு வியாபாரம் ஆனதாக கிசுகிசுக்கப்படுகின்றது. இதன் மூலம் சூர்யாவின் மார்க்கெட் மீண்டும் தமிழகத்தில் தலை தூக்கியுள்ளது […]

johnhatton61986 14/07/2016

அட்டக்கத்தி, மெட்ராஸ் என தரமான படைப்புக்களை கொடுத்தவர் ரஞ்சித். இவர் இயக்கத்தில் கபாலி படம் அடுத்த வாரம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலிஸாகவுள்ளது. இப்படம் குறித்து ரஞ்சித் ஒரு பத்திரிக்கையில் பேட்டியளிக்கையில் ‘ரஜினி சாருக்காக நான் இரண்டு விதமான கதைகளை கூறினேன், இதில் ஒன்று கபாலி மற்றொரும் சயின்ஸ்பிக்ஸன் கதையம்சம் கொண்டது. சாருக்கு கபாலி தான் மிகவும் பிடித்திருந்தது, அதேபோல் அடுத்து சூர்யாவுடன் கைக்கோர்க்கவுள்ளேன், இப்படம் ட்ராவல் சம்மந்தப்பட்ட கதை, ஒரு நிலத்தின் முக்கியத்துவம் குறித்து இந்த […]

johnhatton61986 13/07/2016

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் S3 படத்திற்காக தற்போது விஷாகபட்டினத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தற்போது இந்த படத்தின் தெலுங்கு உரிமையை தயாரிப்பாளர் Malkapuram Shivakumar 18 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொகை இதுவரை வெளிவந்துள்ள சூர்யா படங்களிலேயே இதுதான் மிக அதிகம். தமிழ்நாடு தவிர ஆந்திராவிலும் சூர்யாவிற்கு பெரிய அளவில ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

johnhatton61986 28/06/2016

‘கபாலி’ படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கவிருக்கும் படத்தை இயக்கவிருப்பதாக இயக்குநர் ரஞ்சித் தெரிவித்திருக்கிறார். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தினேஷ், கலையரசன், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கபாலி’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார். சமீபத்தில் ‘கபாலி’ படத்தின் தமிழ் பதிப்பின் இசை இணையத்தில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று (ஜூன் 26) தெலுங்குப் பதிப்பின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டார்கள். அந்நிகழ்ச்சியில் […]

tomscratch20042007 19/11/2015

கிருஷ்ணகிரியில் போலி ஐ.பி.எஸ்., அதிகாரி மற்றும் அவருக்கு உதவிய ஏட்டை, போலீசார் கைது செய்தனர்.  கிருஷ்ணகிரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், பையனப்பள்ளி டோல்கேட் அருகே, எஸ்.பி., திருநாவுக்கரசு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக பல்சர் பைக்கில் வந்த, இருவர் சாலையோரம் நின்று டீ குடித்துகொண்டிருந்தனர். இதில், ஒருவர் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அணியும் சீருடையில் இருந்ததால், சந்தேகமடைந்த, எஸ்.பி., திருநாவுக்கரசு, அவர்களிடம் விசாரணை நடத்தினார். ‘ஐ.பி.எஸ்., தேர்வு பெற்று, நேஷனல் […]

angusam 17/11/2015

இயக்குனர் பாலா, ’சேது’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படத்திலேயே பலரின் கவனத்தை ஈர்த்தவர். அதன் பின், ’நந்தா’, ‘பிதாமகன்’, ‘நான் கடவுள்’ போன்ற முக்கியமான படங்களை இயக்கினார். நான் கடவுள் படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்றார். அதிலிருந்து பாலாவின் படங்கள் என்றாலே மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால், அதர்வா போன்ற நாயகர்கள் அனைவருமே இவருடைய பட்டறையில் இருந்து தான் பெரிய நாயகர்களாக வளர்ந்திருக்கிறார்கள். தற்போது […]

angusam 17/11/2015

தீபாவளிக்கு அடுத்து தமிழ் திரையுலகின் கொண்டாட்டமான திருவிழா, பொங்கல். பொங்கல் அன்று வழக்கமாக பெரிய படங்கள் இரண்டு மூன்றாவது வெளியாகும். இந்தமுறை பொங்கல் ரேஸில் விஷால், ஜெயம் ரவியின் படங்கள் இணைந்துள்ளன. பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம், கதகளி. ஆக்ஷ்ன் படமாக தயாராகியிருக்கும் இப்படம், இறுதிகட்டத்தில் உள்ளது. பொங்கலுக்கு கதகளியை வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதேபோல் ஜெயம் ரவியின் மிருதன் படத்தையும் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர். அத்துடன் சூர்யாவின் 24, பாலாவின் தாரை தப்பட்டை, சுந்தர் சி.யின் […]