சென்னை

angusam 22/04/2017

ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள்  தடகளபோட்டிகளில் சென்னை அணி  சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது 28–வது மண்டலங்களுக்கு இடையே ரெயில்வே பாதுகாப்புபடை வீரர்களுக்கான தடகள போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை, திருச்சி, மதுரை, ஐ.சி.எப்., சேலம், பாலக்காடு ஆகிய 6 மண்டலங்களை சேர்ந்த ரெயில்வே பாதுகாப்புபடை வீரர்கள் 82 பேர் பங்கேற்றனர்.   திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஆனிவிஜயா போட்டிகளை தொடங்கி […]

angusam 18/01/2017

தமிழகம் முழுவதும் பற்றி எரியும் கல்லூரி மாணவர்களின் உணர்வு சென்னை வண்ணாரப் பேட்டை தியாகராயர் கலைக் கல்லூரி மாணவர்கள் 200 பேர் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து மெரீனா கடற்கரையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்றனர். வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரி மாணவ- மாணவிகள் 2000 பேர் இன்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு திரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத் தினார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்து மெரீனா கடற்கரைக்கு புறப்பட்டு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

johnhatton61986 04/09/2016

சென்னையை சேர்ந்தவர் வீரா. இவருடைய மனைவி திவ்யா(வயது 25). இவர் திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விபட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று மதியம் உறவினர் பிரேமாவுடன் அந்த பகுதியில் உள்ள மார்க்கெட்டிற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, அவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் திவ்யா கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றனர். இதை கண்ட பிரேமா, துணிச்சலுடன் அவர்களின் முகத்தில் ஓங்கி குத்தினார். […]

johnhatton61986 04/09/2016

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அவரது கணவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். கம்ப்யூட்டர் என்ஜினீயர் சென்னை வேளச்சேரி பத்மாவதி நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் நாகார்ஜூனன்(வயது 27). இவர், தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஸ்ரீவாணி(21). இருவரும் ஆந்திராவை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. தூக்கில் பிணமாக தொங்கினார் நாகார்ஜூனன் நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்றுவிட்டு நேற்று காலை […]

johnhatton61986 03/09/2016

சுதந்திர போராட்ட தியாகி வீட்டில் 20 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சுதந்திர போராட்ட தியாகி சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகர், 9–வது தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 85). சுதந்திர போராட்ட தியாகி. இவருடைய மனைவி அற்புதமேரி. இவர்கள் வீட்டின் மாடியில் வசித்து வருகிறார்கள். இவர்களது மகன் செல்வராஜ், கீழ் தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை ஆரோக்கியசாமி வீட்டை […]

johnhatton61986 01/09/2016

சென்னை கொளத்தூர் காவேரி நகரைச் சேர்ந்தவர் நிர்மல்குமார் (வயது 32). இவர், மாநகர பஸ் (தடம் எண்:57) கண்டக்டராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இந்த பஸ் சென்னை வள்ளலார் நகரில் இருந்து செங்குன்றம் நோக்கி வந்து கொண்டிருந்தது. சென்னை மூலக்கடை அருகே வந்த போது ஒரு வாலிபர் பஸ்சின் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்தார். பஸ் கண்டக்டர் நிர்மல்குமார், அந்த வாலிபரிடம், ‘‘பஸ் காலியாகத்தானே உள்ளது. உள்ளே வாருங்கள்’’ என்றார். இதனால் அவர்களுக்குள் […]

johnhatton61986 31/08/2016

சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் இறந்தார். கல்லூரி மாணவர் சென்னையை அடுத்த குரோம்பேட்டை நெமிலிச்சேரி ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் துரைபாபு. இவரது மகன் ஹரிஷ்பாபு (வயது 18). வேளச்சேரியில் உள்ள கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஹரிஷ்பாபு நேற்று முன்தினம் இரவு சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயிலில் கிண்டியில் இருந்து பல்லாவரத்திற்கு சென்று கொண்டிருந்தார். ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. […]

johnhatton61986 31/08/2016

சேலையூரில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் பள்ளி மாணவ–மாணவிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பள்ளியில் சுகாதார பொருட்கள் சென்னையை அடுத்த சேலையூரில் தாம்பரம் நகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 10 ஆசிரியைகளும் 250 மாணவ– மாணவிகளும் உள்ளனர். 5–ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் போதிய மாணவ–மாணவிகள் இல்லாததால் புதிதாக கட்டப்பட்ட 2 வகுப்பறைகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் நகராட்சி துப்புரவு பணிக்கு கொண்டுவரப்பட்ட பிளீச்சிங் […]

johnhatton61986 28/08/2016

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு ரூ.42 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். பணம் பறிமுதல் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு விமானம் செல்ல இருந்தது. இதில் பயணம் செய்ய வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த அபுபக்கர் (வயது 40), காசிம் (28), சென்னையை சேர்ந்த முகமது (38) ஆகியோர் சுற்றுலா விசாவில் செல்வதற்காக வந்திருந்தனர். இவர்கள் மீது சந்தேகம் […]

johnhatton61986 27/08/2016

முதலாளியின் காரை திருடி மறைத்து வைத்துக்கொண்டு நாடகமாடிய கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். கார் மாயம் சென்னை ராயபுரம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் நவீன்தாஜ் (வயது 38). இவர், போலீஸ் மற்றும் ராணுவத்துக்கு சீருடை மற்றும் பல பொருட்களை சப்ளை செய்யும் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தண்டையார்பேட்டையை சேர்ந்த புருஷோத்தமன்(20) என்பவர் கார் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார். புருஷோத்தமன் தனது சொந்த வேலை காரணமாக முதலாளியிடம் […]

johnhatton61986 26/08/2016

வருமான வரித்துறை ஊழியர் மீது திராவகம் வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டார். காதல் போட்டி காரணமாக பழிவாங்கும் நோக்கில் அந்த நபர் திராவகம் வீசியதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. திராவகம் வீச்சு சென்னை அண்ணாநகர் 15–வது மெயின் ரோட்டில் மத்திய வருவாய் அலுவலகர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் மோகித் (23) என்பவர் வசித்து வருகிறார். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். […]

johnhatton61986 25/08/2016

கோவில்பட்டி அருகே உள்ள சென்னையம்பட்டியைச் சேர்ந்தவர் சிங்கராஜ் (வயது 48). இவருடைய மனைவி பேச்சியம்மாள் (44). இவர் லிங்கம்பட்டி பஞ்சாயத்து தலைவியாக உள்ளார். அந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட சமத்துவபுரம் பகுதியில் வசிப்பவர் மாடசாமி மகன் சண்முகராஜ் (25). கூலி தொழிலாளி. அப்பகுதியில் தெருக்குழாய் மூலம் தண்ணீர் வினியோகம் செய்தபோது, சண்முகராஜ் வீட்டின் அருகில் உள்ள தெருக்குழாயில் மட்டும் தண்ணீர் வரவில்லை. இதுகுறித்து சண்முகராஜ், பேச்சியம்மாளிடம் முறையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை சிங்கராஜ் தட்டி கேட்டார். அப்போது பேச்சியம்மாள், […]

johnhatton61986 25/08/2016

நந்தம்பாக்கத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயரிடம் சங்கிலி பறித்த வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஆலந்தூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. சங்கிலி பறிப்பு சென்னையை அடுத்த பரங்கிமலையைச் சேர்ந்தவர் பெர்னட்ஜோன்சால்வெஜ்(வயது 30). கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவர், கடந்த 2009–ம் ஆண்டு மணப்பாக்கத்தில் உள்ள தனது நிறுவனத்தில் இருந்து வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பினார். நந்தம்பாக்கம் மேம்பாலத்தில் வந்தபோது 2 மர்மநபர்கள் அவரிடம் முகவரி கேட்பது போல் அருகில் சென்று திடீரென பெர்னட்ஜோன்சால்வெஜ் கழுத்தில் கிடந்த சங்கிலியை […]

johnhatton61986 25/08/2016

சென்னையை அடுத்த பரங்கிமலை, கத்திப்பாரா பகுதிகளில் சமூக விரோதிகள் நடமாடுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து பரங்கிமலை துணை கமிஷனர் கல்யாண் உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் ரவிசேகரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர் செல்வமணி, ஏட்டு முருகதாஸ் ஆகியோர் கத்திப்பாரா மேம்பாலம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பரங்கிமலை நசரத்புரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் தனது கையில் பையுடன் அந்த வழியாக நடந்து சென்றான். ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரை […]

johnhatton61986 24/08/2016

ஒட்டியம்பாக்கத்தில் குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் இறந்தனர். பள்ளி மாணவர்கள் சென்னையை அடுத்த ஒட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவருடைய மகன் சபரி தர்சன் (வயது 7). அதே பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரின் மகன் அஸ்வின் கணேஷ் (7). சிறுவர்கள் இருவரும் ஒட்டியம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 3–ம் வகுப்பு படித்து வந்தனர். இருவரும் நேற்று முன்தினம் மாலை பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும் விளையாட சென்றனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் […]