ஜெயலலிதா

angusam 08/02/2017

சொன்ன வார்த்தையை மறந்திட்டீங்களே சின்னம்மா – சசிகலா எழுதிய கடிதத்தோடு நீதி கேட்கும் ஓபிஎஸ் போயஸ்கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு ஜெயலலிதாவுக்கு சசிகலா ஒரு மன்னிப்பு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தை ஓ.பன்னீர் செல்வம் இன்று  வெளியிட்டார். ‘‘என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர், நான் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததை அடிப்படையாக வைத்து, எனது பெயரை தவறாகப் பயன்படுத்தி, சில விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டனர் என்பதையும், அதனால் கட்சிக்கு பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டன என்பதையும், […]

johnhatton61986 05/08/2016

சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விதி 110-ன் கீழ் பேசியதாவது:- அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பு அளித்திடும் வகையில் விலையில்லா அரிசி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முன்னோடித் திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.  உணவுப் பாதுகாப்பின் அங்கங்களாக உள்ள உற்பத்தி, சேமிப்பு, விற்பனை ஆகியவற்றில் ஈடுபட்டு வரும் நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம், கூட்டுறவுத் துறை ஆகியவற்றின் செயலாக்கத்தை மேம்படுத்தும் வகையில் புதிய கிடங்குகள் கட்டுதல், கொள்முதல் நிலையங்கள் ஏற்படுத்துதல், நவீன […]

johnhatton61986 31/07/2016

டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவா எம்.பி.க்கும், அ.தி.மு.க. பெண் எம்.பி.க்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. தாக்குதல் டெல்லி மேல்–சபை தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா, டெல்லியில் இருந்து சென்னை வருவதற்காக நேற்று பிற்பகல் 2.45 மணி அளவில் விமான நிலையத்துக்கு சென்றார். விமானத்தில் ஏறுவதற்கான வழக்கமான நடைமுறைகள் முடிந்த பின்னர், அவர் திடீரென்று தனது சென்னை பயணத்தை ரத்து செய்து விட்டு வெளியே வந்தார். அப்போது, சென்னை வருவதற்காக விமான நிலையத்துக்கு வந்த […]

johnhatton61986 27/07/2016

‘‘பா.ஜனதா உடன் கூட்டணி அமைத்து 25 ஆண்டுகளை வீணடித்து விட்டோம்’’ என்று உத்தவ் தாக்கரே பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே 3–வது நாளாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– 25 ஆண்டை வீணடித்துவிட்டோம் கடந்த ஜூன் மாதம் சிவசேனா அதன் 50–வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியது. கட்சி தொடங்கி பாதி காலம், அதாவது 25 ஆண்டு காலம் பாரதீய ஜனதா உடன் கூட்டணியில் இருந்தோம். 25 ஆண்டுகள் […]

johnhatton61986 27/07/2016

ஜெயலலிதா முயற்சி காரணமாக தமிழக மீனவர்கள் 77 பேரையும் விடுதலை செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டு இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சரின் நடவடிக்கை நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பாக் வளைகுடா பகுதியினைச் சேர்ந்த மீனவர்கள், தங்களது பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபடும் போது இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது கைது செய்யப்படுகின்றனர். இவ்வாறு தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் போது, […]

johnhatton61986 26/07/2016

அ.தி.மு.க தலைமைக்கழகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், ஜெயல்லைதாவை  இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும்,வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சி..ஞானசேகரன்  தலைமையில், அக்கட்சியைச் சேர்ந்த வேலூர் மாநகராட்சி 34-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர்  மு. சீனிவாசகாந்தி, தென் சென்னை மேற்கு மாவட்டத் தலைவர்  சேகர் உள்ளிட்ட வேலூர், சென்னை, திருவள்ளூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய […]

johnhatton61986 22/07/2016

வீடுகளுக்கு 100 யூனிட்டுகள் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படுவதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,607 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:– மின்சாரம் மாநில மற்றும் மத்திய அரசுகளின் மின்சார உற்பத்தி முகமைகளின் மூலமாகவும், நீண்டகால, குறுகியகால மின் கொள்முதல் ஒப்பந்தங்களின் மூலமாகவும், சூரிய ஒளி மின் கொள்முதல் மூலமாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளில், 8,432.50 மெகாவாட் கூடுதல் மின்சாரம் பெறப்பட்டுள்ளது. பல்வேறு அனல் […]

johnhatton61986 16/07/2016

சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்த பின்னர் பல்வேறு கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். 3 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். தேமுதிக , தமாகாவைச் சேர்ந்த பலரும் அதிமுகவில் இணைந்தனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவை த.மா.கா. மாநில மகளிர் அணி முன்னாள் தலைவரும், கோவை மேற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மகேஷ்வரி, முன்னாள் மாநில பொதுச்செயலாளரும், பேராவூரணி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான […]

johnhatton61986 15/07/2016

நிச்சயமாக அப்படி நினைக்கவில்லை. தேமுதிக ஆரம்பிக்கப்பட்ட நோக்கமே திமுக, அதிமுக. இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக வரணும் என்கிறதுதான். 2011-ல் அதிமுகவுடன் ஏன் கூட்டணி வைத்தோம். திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகி மக்களின் எதிர்ப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது. ஊழல் ஆட்சியை மறுபடியும் வராம தடுக்கத்தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம். மிகப்பெரிய கட்சியான திமுக கடைசி வரை உங்களை கூட்டணிக்கு அழைச்சிக்கிட்டே இருந்தாங்க. கூட்டணிக்குப் போகாததுக்கு காரணம் என்ன? உங்களோட முடிவாலதான் தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியில் இணைந்தது என்று […]

johnhatton61986 15/07/2016

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில், இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொள்ளும் மாநில கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. 10 ஆண்டு இடைவெளிக்கு பிறகு 11-வது கூட்டமாக மோடி தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், தமிழக அரசின் பங்காக முதல்வர் ஜெயலலிதாவே நேரில் கலந்து கொண்டு தமிழக பிரச்சனைகளை அந்த அவையில் எடுத்துரைத்து, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளையும் கேட்டுப்பெற வேண்டும். எப்போதும் போல் ஒ.பன்னீர்செல்வமோ அல்லது அரசு சார்பாக ஒரு நபரையோ […]

johnhatton61986 01/07/2016

தி.மு.க. பொருளாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைமை கழகமான அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சரியாக உள்ளதா? பதில்:- முதல்-அமைச்சர் கோட்டையில் இருந்தாலோ அல்லது போயஸ் தோட்டத்தில் இருந்தாலோ அங்கு சென்று நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி இது. காரணம் அவர்தான் சட்டம்-ஒழுங்கை கையில் வைத்துள்ளார். அவர்தான் உள்துறை அமைச்சராகவும், காவல்துறையின் அமைச்சராகவும் […]

johnhatton61986 30/06/2016

சென்னையில் ரோந்துப் பணிக்காக போலீசாருக்கு 250 சைக்கிள்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று வழங்குகிறார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றியவர் முனுசாமி. கடந்த 15.6.16 அன்று கொள்ளையர்களை பிடிக்கச்சென்றபோது, அவர்களால் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். தனது மகள் ரக்ஷனாவை டாக்டராக்க வேண்டும் என்று முனுசாமி மிகுந்த ஆசை கொண்டிருந்தார். அவரது ஆசைக்கு ஏற்ப ரக்ஷனாவும் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தார். ஆனால் முனுசாமியின் திடீர் மறைவால் அந்தக் குடும்பம் மிகவும் தத்தளித்தது. இதை உணர்ந்த […]

angusam 18/03/2016

டீக்கடையில் வேலை பார்த்த மோடி இந்தியாவின் பிரதமர் ஆனார். அதே போல டீ மாஸ்டர் பன்னீர் தமிழகத்தின் இரண்டு முறை முதல்வர் ஆனார். கடந்த 20 வருடங்களில் இந்த அபார வளர்ச்சிக்கு என்ன காரணம் என்பதை உணர்த்தவே இந்த மினி தொடர். மிஸ்டர் பணிவு ஓபிஎஸ், சிக்கலில் உள்ளார் என்பதுதான் இன்றைய அரசியலில் அனல் செய்தி. வேட்பாளர் தேர்வு, ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றிருந்த ஐவரணியில் இருந்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட மூவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் அறிக்கை, கூட்டணி… என […]

angusam 12/03/2016

இடது பக்கத்தில் பாலமுருகன் பழனி கோலத்தில் ., வலது புறத்தில் திமுக தலைவரை வைத்து அதன் மேல பழத்தால் பதிக்க பட்டவர்கள் என்ற கிண்டல் பதிவு காண நேர்ந்தது .. பாதிப்பு திமுகவுக்கு என்று கீறல் விழுந்த ரெகார்ட் மாதிரி சொல்பவர்கள் சிலர் அடிப்படையை தவறாக புரிந்து கொண்டவர்கள் . அல்லது திமுகவை கிளறி காயம் காண வைக்கும் எண்ணம் மட்டுமே கொண்டவர்கள் . பழம் கிடைக்காமல் ஆண்டி கோலம் பூண்டது யார் .. பழம் பாலில் […]

angusam 11/03/2016

பழம் கனிந்து கொண்டிருக்கிறது பாலில் எப்போது விழும் என்று இன்னும் முடிவாகவில்லை என்று கருணாநிதி, கடந்த சிலநாட்களுக்கு முன் சொன்ன அந்த வார்த்தை தான் இப்போது படாதபாடு படுகிறது. கருணாநிதியின் அந்த வார்த்தை எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு கடுமையாக நையாண்டில் செய்யப்படுகிறது.  கருணாநிதிக்கு இந்த வயசில் தேவையா? இந்த வயசான காலத்தில் விஜயகாந்துகிட்டே போய் தொங்கிட்டுயிருக்காரே என்று கருணாநிதியின் மீது கிண்டல்கள், மீம்ஸ்கள் பறந்துகொண்டு இருக்கின்றன. அதுவும் கருணாநிதி இந்த  வார்த்தைக்கு  பிறகு 2 நாட்களுக்குள் […]