டிரைவர்

johnhatton61986 04/09/2016

ஆலங்குளம் அருகே பஸ்–மோட்டார்சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் பலியானார். இந்த விபத்து தொடர்பாக பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர். பஸ் மோதியது நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அண்ணாநகர் ஏ.ஜி சர்ச் தெருவை சேர்ந்தவர் குழந்தை வேல். அவருடைய மகன் ஜோசப் ராஜா (வயது 28). இவர் அம்பை ரோட்டில் கம்ப்யூட்டர் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். நேற்று காலை 11 மணி அளவில் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் வாங்குவதற்காக, ஜோசப் ராஜா […]

johnhatton61986 04/09/2016

நாமக்கல் அருகே லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. லாரி டிரைவர் தற்கொலை நாமக்கல் அருகே உள்ள செம்பாளிக்கரடு பகுதியை சேர்ந்தவர் சுப்பன். இவரது மகன் சின்னத்துரை (வயது 25), லாரி டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் உறவினர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற விசேஷ நிகழ்ச்சிக்கு சுப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்று விட்டனர். சின்னத்துரை மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் இரவு […]

johnhatton61986 28/08/2016

மதுரை ஜெய்ஹிந்துபுரம், ஜீவாநகர் 1–வது தெருவை சேர்ந்தவர் சந்திரன் மகன் சுரேஷ்(வயது 39), ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் ஜெய்ஹிந்துபுரம் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டினார். பின்னர் சுரேசிடமிருந்து ரூ.350–ஐ பறித்து கொண்டு தப்பியோடி விட்டார். இதுகுறித்து சுரேஷ் ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்ஹிந்துபுரம், சோலையழகுபுரம் 1–வது தெருவை சேர்ந்த சுரேஷ் என்ற கீரி சுரேஷ்(25) என்பவரை கைது […]

johnhatton61986 24/08/2016

அம்பத்தூரில் வீடு புகுந்து நகை திருடிய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 பவுன் தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. நகை திருட்டு சென்னை அம்பத்தூர் சிவானந்தம் நகர் 2–வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வைஜெயந்தி (வயது 40). அதே பகுதியில் உள்ள கேட்டரிங் சென்டர் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் காலை வீட்டின் பீரோவில் இருந்த நகைகளை வைஜெயந்தி சரிபார்த்தார். அப்போது அதில் 6 பவுன் தங்கநகைகள் திருட்டு போனது […]

johnhatton61986 31/07/2016

மதுரையில் இருந்து நெல்லைக்கு அரசு பஸ் நேற்று மாலையில் புறப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த மாயி மகன் ஜெயக்கொடி (வயது 35) என்பவர் பஸ்சை ஓட்டிச் சென்றார். பஸ்சில் 50–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். மாலை 5 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பைபாஸ் ரோடு வழியாக பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது கடம்பூரில் இருந்து கயத்தாறு வழியாக கங்கை கொண்டான் சிப்காட் பகுதிக்கு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி கயத்தாறு இணைப்பு […]

tomscratch20042007 22/12/2015

திருச்சி முள்ளிகரும்பூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 70). இவரது பேரன் மகேஸ்வரன் (22). நேற்று இருவரும் மோட்டார் சைக்கிளில் லால்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். உய்யக்கொண்டான் திருமலை சோதனை சாவடி அருகே செல்லும் போது, அந்த வழியாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த கிருஷ்ணசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். மகேஸ்வரன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து திருச்சி […]

tomscratch20042007 22/12/2015

தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் பல்விந்தர் சிங் என்ற பப்லூ. இவர் பெங்களூருவில் உள்ள மின்னணு உபகரணங்கள் தயாரிக்க கூடிய தொழிற்சாலையில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி அதில் தோல்வி அடைந்தால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் அதிகாலையில் அவர் தனது பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த பப்லூ திடீரென அருகில் இருந்த வாளை எடுத்து இருவரையும் […]

angusam 15/11/2015

விருதுநகரில் மழைக்கு அரசு பஸ் ஒழுகியதால் டிரைவருக்கு, கண்டக்டர் மற்றும் பயணிகள் மாறி மாறி குடை பிடித்த கொடுமையான காட்சி இன்று அரங்கேறியது. தனியார் பஸ்கள் அனைத்தும் நவீனமாக ஓடும் நிலையில், தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களில் 70 சதவீத பஸ்கள் ஓட்டை, உடைசலாக உள்ளன. திருநெல்வேலி கோட்டத்தைச் சேர்ந்த அரசு பஸ் கேரளா மாநிலம் சென்றபோது பெண் பயணி பஸ்சில் இருந்த ஓட்டையில் இருந்து கீழே விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த நிலையில், விருதுநகரில் […]