டெல்லி

johnhatton61986 03/09/2016

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில் 27½ பவுன் நகைகள் திருட்டுபோன வழக்கில் என்ஜினீயர் கைது செய்யப்பட்டார். நகைகள் திருட்டு ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் அருகே உள்ள தெற்கு ஆண்டாவூரணி பகுதியை சேர்ந்தவர் ஜான்பிரிட்டோ. இவர் கேரளாவில் உள்ள டயர் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி தனமேரி(வயது 40). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த மாதம் 6–ந்தேதி தனமேரி தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்று திருச்சிக்கு சென்றுள்ளார். அப்போது தனது 3 குழந்தைகளையும் அருகில் […]

johnhatton61986 14/08/2016

ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஒரு பதக்கத்தை கூட இந்திய அணியினர் வெல்லவில்லையே.., என்ற வருத்தத்தில் இந்திய மக்கள் இருக்கும் நிலையில் ஒலிம்பிக் பதக்க வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு மோடி ஆறுதல் கூறும் விதமாக வெற்றியும் தோல்வியும் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் நாளை நடைபெறும் சுதந்திர விழாவின்போது என்ன பேசலாம்? என்று ஆலோசனை கூறுமாறு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி சமீபத்தில் கேட்டிருந்தார். ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணியினருக்கு ஊக்கம் அளிக்கும் […]

johnhatton61986 31/07/2016

டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவா எம்.பி.க்கும், அ.தி.மு.க. பெண் எம்.பி.க்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. தாக்குதல் டெல்லி மேல்–சபை தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா, டெல்லியில் இருந்து சென்னை வருவதற்காக நேற்று பிற்பகல் 2.45 மணி அளவில் விமான நிலையத்துக்கு சென்றார். விமானத்தில் ஏறுவதற்கான வழக்கமான நடைமுறைகள் முடிந்த பின்னர், அவர் திடீரென்று தனது சென்னை பயணத்தை ரத்து செய்து விட்டு வெளியே வந்தார். அப்போது, சென்னை வருவதற்காக விமான நிலையத்துக்கு வந்த […]

johnhatton61986 22/07/2016

கடந்த ஜூலை 11 ஆம் தேதி குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள உனா என்ற இடத்தில் கடந்த வாரம் தலித் இளைஞர்கள் 4 பேர் பசுவை கொன்று அதன் தோலை எடுத்து சென்றதாக புகார் கூறப்பட்டது. இதையொட்டி பசுவதை தடுப்பு ஆர்வலர்கள் அந்த 4 இளைஞர்களையும் நடுவீதியில் நிற்கவைத்து சரமாரியாக தாக்கியதோடு, அதனை வீடியோ பதிவு செய்தும் வெளியிட்டனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று […]

johnhatton61986 20/07/2016

தலித் அமைப்பினர் அழைப்பு விடுத்த முழு அடைப்பு போராட்டத்துக்கு ஓரளவு ஆதரவு கிடைத்துள்ள நிலையில், குஜராத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இறந்த பசு மாடுகளின் தோலை உரித்த தலித் இளைஞர்கள் மீதான கடுமையான தாக்குதலைக் கண்டித்தும், இந்தச் சம்பவத்தில் நீதிகோரியும் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) 8 பேரும், திங்கள்கிழமை 7 பேரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். தலித் அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்துக்கு இன்று (புதன்கிழமை) அழைப்பு விடுத்திருந்த நிலையில், சவுராஷ்டிராவில் பள்ளிகள் […]

johnhatton61986 15/07/2016

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில், இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொள்ளும் மாநில கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. 10 ஆண்டு இடைவெளிக்கு பிறகு 11-வது கூட்டமாக மோடி தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், தமிழக அரசின் பங்காக முதல்வர் ஜெயலலிதாவே நேரில் கலந்து கொண்டு தமிழக பிரச்சனைகளை அந்த அவையில் எடுத்துரைத்து, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளையும் கேட்டுப்பெற வேண்டும். எப்போதும் போல் ஒ.பன்னீர்செல்வமோ அல்லது அரசு சார்பாக ஒரு நபரையோ […]

angusam 17/03/2016

அதிமுக பெண் எம்.பி. சசிகலா புஷ்பா, தனது ஆண் நண்பருடன் பேசிய கிளு கிளு பேச்சு வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப்பில் வெளியான அவர்களின் பேச்சு: அதிமுக எம்.பி.: ஹலோ டேய். இப்பதான் பாத்தேன் மெசேஜ் (பலமாக சிரிக்கிறார்). ஆண் நண்பர்: நேத்து நைட் போனை டக்குனு வச்சுட்ட. அதிமுக எம்பி: உனக்கு தெரியுமா விஷயம்… நேற்று நைட்டு புல் மப்பு (சிரிக்கிறார்). நண்பர்: அடிச்சு புரண்டு, பயந்த மாதிரி வச்சிட்டு ஓடியே […]

angusam 29/01/2016

பொருட்காட்சிகளுக்கு போனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாங்கி ருசிப்பது டெல்லி அப்பளம். என்னதான் வீட்டில் அப்பளம் சுட்டு சாப்பிட்டாலும்,  டெல்லி அப்பளத்தை வாங்கி சாப்பிட்டால்தான் பொருட்காட்சிக்கு போன நிறைவு கிடைக்கும். அந்தளவுக்கு சுடச்சுட பொரித்து கொஞ்சம் மிளகாய் தூள் , உப்பு கலந்த கலவையை தூவி கொடுக்கும் அந்த அப்பளத்தை கடித்தபடியே நடந்தே பொருட்காட்சியை வலம் வருபவர்கள் ஏராளம். இப்படி எல்லோருடைய நாக்கையும் நம நமக்க வைக்கும் டெல்லி அப்பளம், திருச்சியில் நடந்துவரும் பொருட்காட்சியில் […]

tomscratch20042007 26/12/2015

 விரைவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் ஒன்று சேர்ந்து அகண்ட பாரதம் அல்லது பிரியாத இந்தியாவாக உருவெடுக்கும் என பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ் கூறியுள்ளார். இது தொடர்பாக டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இது சண்டையில்லாமல் ஒரு மித்த கருத்துடன் நடக்கும். 60 வருடங்களுக்கு முன்னர் பிரிந்த நாடுகள், தற்போது நல்லெண்ணத்திற்காக ஒன்று சேரும் என ஆர் எஸ் எஸ் நம்புகிறது. நாங்கள் எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்க மாட்டோம். […]

tomscratch20042007 18/12/2015

டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்ற ஊழலில்  மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு தொடர்பு இருப்பதாக ஆம் ஆத்மி குற்றம் சுமத்தி வரும் நிலையில், இன்று மேலும், அவருக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக  அருண் ஜெட்லிக்கு 5 கேள்விகளை ஆம் ஆத்மி முன்வைத்துள்ளது. இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆஸ்தோஷ்   கூறியதாவது:-  டெல்லி பெரஷோ கோட்லா மைதானத்தில் உள்ள கார்பரேட் பாக்ஸை துணை குத்தகைகக்கு ”21 பர்ஸ்ட் […]

tomscratch20042007 17/12/2015

காற்றை விலை கொடுத்து வாங்கும் இன்றைய சீனா… நாளைய இந்தியா? காற்று மாசால் திணறி வரும் சீன நகரங்களில் சுத்தமான ஆக்ஸிஜன் விற்பனைதான் இப்போது சக்கைப் போடு போடுகிறது. கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுத்தமான காற்று  சுமார் 100 யென் அதாவது இந்திய மதிப்பில் 850 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சீனத் தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் போன்ற நகரங்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதனால் சுவாசம் தொடர்பான பல்வேறுநோய்கள் மக்களை தாக்கும் அபாயத்தில் சீனர்கள் […]

tomscratch20042007 06/12/2015

டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்திக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: பிடிஐ டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்திக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: பிடிஐ பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தொழிலாளர் நலன் தொடர்பான சட்டங்களை திட்டமிட்டு பலவீனப் படுத்துவதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி […]

tomscratch20042007 25/11/2015

மதசகிப்பின்மையை  நானும்  எதிர்கொள்ள  நேர்ந்தது  என்று  ஆஸ்கர்  விருது பெற்ற  இசையமைப்பாளர்  ஏ.ஆர்.ரஹ்மான்  கருத்து  தெரிவித்துள்ளார்.  கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், கடந்த சில மாதங்களுக்கு முன் ஈரானிய திரைப்படமான ‘முகம்மது மெஸேஞ்சர் ஆப் காட்’ என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததற்காக எனக்கு எதிராக பத்வா விதிக்கப்பட்டது. அந்த நேரத்தில், நான் பங்கேற்க இருந்த இசை நிகழ்ச்சியை டெல்லி, உத்தரபிரதேச மாநில முதல்வர்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்தனர். எதுவும் வன்முறையாக […]

angusam 14/11/2015

தன் சொந்த ஆட்சியை நடத்துவதற்குத்தான் மோடி, வளர்ச்சி பற்றி பேசுகிறார் என மன்மோகன் சிங் சாடினார். நாட்டின் முதல் பிரதமர் நேருஜியின் 125–வது பிறந்த தினம் ஓராண்டு காலமாக கொண்டாடப்பட்டு வந்தது. இதன் நிறைவு விழா, டெல்லியில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டுபேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங், பிரதமர் மோடி வளர்ச்சிபற்றி பேசுகிறார். அவர் தனது சொந்தக்கடையை (சொந்த ஆட்சியை) நடத்துவதற்காகத்தான் இப்படி பேசுகிறார். நாட்டில் வளர்ச்சி இருக்கவா செய்கிறது? தாழ்த்தப்பட்ட […]