திருமணம்

johnhatton61986 28/07/2016

ஜெய் மற்றும் அஞ்சலி எங்கேயும் எப்போதும் படத்தில் இணைந்து நடித்தனர். இப்படத்தை தொடர்ந்து அடுத்து தற்போது பலூன் என்ற படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் உண்மையாகவே திருமணம் செய்துக்கொள்ள இருக்கிறார்களாம், இதை தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது. இந்த செய்தி கோலிவுட்டையே பரபரப்பிற்கு உள்ளாக்கியுள்ளது, பல முறை ஜெய், அஞ்சலி இருவருக்குமிடையே காதல் கிசுகிசு வந்தது குறிப்பிடத்தக்கது.

tomscratch20042007 30/06/2016

ஜார்கண்ட் மாநில பாரதீய ஜனதா தலைவர் தலா மரந்தியின் மகன் முன்னா மரந்தி 11 வயது சிறுமியை திருமணம் செய்துக் கொண்டு உள்ளார். இதற்கிடையே தன்னை திருமணம் செய்வதாக கூறி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துவந்தார் என்று மற்றொரு சிறுமி முன்னாவின் மீது புகார் கொடுத்து உள்ளது. கோட்டா பகுதியில் பாரதீய ஜனதா தலைவர் தலா மரந்தியின் மகன் முன்னா மரந்தி கடந்த 27-ம் தேதி 11 வயது சிறுமியை திருமணம் செய்து உள்ளார். திருமண வரவேற்பு […]

angusam 14/11/2015

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த ‘பாய்ஸ்’ படத்தில் அறிமுகமானாலும் நடிகர் நகுலை அடையாளம் காட்டிய திரைப்படம் ‘காதலில் விழுந்தேன்’ என்பதை யாராலும் மறுக்க முடியாது. இருப்பினும் இன்னொரு ஹிட் படத்தை எதிர்நோக்கியிருந்த நகுலுக்கு சமீபத்தில் வெளியான ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ திரைப்படத்தின் வெற்றியால் பெரும் உற்சாகத்தில் உள்ளார். இதே உற்சாகத்தோடு அவர் தனது திருமணம் குறித்த தகவலையும் மகிழ்ச்சியுடன் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துள்ளார். கடந்த ஐந்து வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும் தன்னுடைய வாழ்க்கையின் […]