தேமுதிக

johnhatton61986 28/07/2016

தேமுதிகவின் கொள்கை பரப்பு செயலராக மனைவி பிரேமலதாவை நியமிக்க அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். சட்டசபை தேர்தலின் போதிருந்தே தேமுதிக நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியைவிட்டு தப்பி ஓடுகின்றனர். இவர்கள் அனைவரும் முன்வைக்கும் ஒரே குற்றச்சாட்டு தேர்தல் தோல்விக்கு பிரேமலதாதான் காரணம்; அவரது யோசனைப்படி மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்தது மாபெரும் தவறு என்பதுமட்டுமே. இதனால் கட்சி நடவடிக்கையில் இனி பிரேமலதா ஈடுபடமாட்டார் என்று விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளிடம் உறுதியளித்திருந்தார். ஆனால் பிரேமலதாவோ, தம்முடைய இறுதி மூச்சு […]

johnhatton61986 16/07/2016

சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்த பின்னர் பல்வேறு கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். 3 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். தேமுதிக , தமாகாவைச் சேர்ந்த பலரும் அதிமுகவில் இணைந்தனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவை த.மா.கா. மாநில மகளிர் அணி முன்னாள் தலைவரும், கோவை மேற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மகேஷ்வரி, முன்னாள் மாநில பொதுச்செயலாளரும், பேராவூரணி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான […]

johnhatton61986 15/07/2016

தமிழக சட்டசபைத் தேர்தலி்ல படித்தவர், படிக்காதவர் என அனைவருமே காசு வாங்கிக் கொண்டுதான் ஓட்டுப் போட்டனர். இதனால்தான் நாங்கள் தோற்க நேரிட்டது. நேர்மையாக தேர்தலை எதிர்கொண்ட எங்களுக்கு மக்கள் கொடுத்த பரிசு தோல்விதான் என்று விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா விஜயகா்த் கூறியுள்ளார். சட்டசபைத் தேர்தல் படு தோல்விக்குப் பிறகு தேமுதிக சத்தமே இல்லாமல் இருக்கிறது. சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு கட்சியிலிருந்து முக்கியத் தலைவர்கள் வெளியேறத் தொடங்கினர்.. இன்னும் நிற்காமல் அது தொடர்கிறது. இந்தகத் தேர்தல் படு தோல்விக்கு […]

johnhatton61986 15/07/2016

நிச்சயமாக அப்படி நினைக்கவில்லை. தேமுதிக ஆரம்பிக்கப்பட்ட நோக்கமே திமுக, அதிமுக. இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக வரணும் என்கிறதுதான். 2011-ல் அதிமுகவுடன் ஏன் கூட்டணி வைத்தோம். திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகி மக்களின் எதிர்ப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது. ஊழல் ஆட்சியை மறுபடியும் வராம தடுக்கத்தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம். மிகப்பெரிய கட்சியான திமுக கடைசி வரை உங்களை கூட்டணிக்கு அழைச்சிக்கிட்டே இருந்தாங்க. கூட்டணிக்குப் போகாததுக்கு காரணம் என்ன? உங்களோட முடிவாலதான் தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியில் இணைந்தது என்று […]

johnhatton61986 28/06/2016

திமுகவில் கூண்டோடு இணைப்பு இந்த கூட்டத்தில் மக்கள் தேமுதிகவை கலைத்துவிட்டு கூண்டோடு திமுகவுடன் இணைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் சந்திரகுமார் கூறியதாவது: 60 லட்சம் தொண்டர்கள் வாழ்வு சீரழிவு எங்களை விஜயகாந்த் கடனாளியாக்கி விட்டு தன்னை வளமாக்கி விட்டார். 60 லட்சம் தொண்டர்களின் வாழ்வை சீரழித்துவிட்டார். விஜயகாந்தின் சுயநலத்திற்காக தொண்டர்கள் வீட்டையும் இழந்து, நடுத் தெருவுக்கு வந்து விட்டார்கள். தேமுதிக இருக்காது தமிழகத்தில் அதிமுக, திமுகவை தவிர வேறு கட்சிகளை மக்கள் ஏற்கவில்லை. இதை இந்த […]

johnhatton61986 28/06/2016

எல்லாம் தெரிந்தும் அதிமுக வெற்றிக்கு விஜயகாந்த் வழி வகுத்தது ஏன்? அவருக்கும் 700 கோடி ரூபாய் கிடைத்து இருக்கிறது. அதனால் கட்சியை கைக்கழுவிவிட்டார் என்று மக்கள் தேமுதிக கட்சி நிர்வாகி சந்திரகுமார் புதிய புகாரை கிளப்பியுள்ளார். கடந்த சட்டப்பேரவை தேர்லில் தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்எல்ஏக்கள் வி.சி.சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர் உள்ளிட்டவர்கள் கட்சியில் இருந்து விலகி ‘மக்கள் தேமுதிக’ என்ற புதிய கட்சியை தொடங்கியதோடு, திமுகவுடன் கூட்டணி அமைத்து 3 தொகுதிகளில் […]

angusam 03/04/2016

ஏன் இப்படி தொடர்ச்சியாக TIMES NOW பொய்களை கூற வேண்டும் இதனால் இவர்களின் Credibilty பாதிக்கும் என்று அவர்கள் அறிய மாட்டார்களா… .. மனு வேதத்தை மட்டுமே நம்புவர்கள் மனிதனில் வேற்றுமையை ஏற்படுத்தி கொள்கையை உள்ளவர்கள் மட்டுமே எப்படியாவது அதிகார பீடத்தில் இருக்க வேண்டும் என்ற நப்பாசை தான் இவர்களுக்கு காரணம் .. இந்த சிந்தானந்ததை தூக்கி நிறுத்தும் Rashtriya Swayamsevak Sangh : RSS ஆதரவு நிலைபாட்டை Rangaraj Pandey Dinamalar – World’s No […]

angusam 02/01/2016

தமிழக சட்டசபை தேர்தலுக்கான பணிகளை தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் சுறுசுறுப்பாக களமிறங்கி திட்டம் தீட்டி வருகின்றன. ஏற்கனவே மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மக்கள் கூட்டணியை அமைத்துள்ளனர். இந்நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணி சாத்தியமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2011 சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெற்றிருந்தது. ஆனால் அடுத்து நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறாமல் […]

tomscratch20042007 31/12/2015

சென்னை விருகம்பாக்கத்தில்  விஜயகாந்த் வீட்டை முற்றுகையிட முயன்ற பத்திரிகையாளர்கள் மீது தே.மு.தி.க எம்.எல்.ஏ பார்த்தசாரதியும் தொண்டர்களும் தாக்குதல் நடத்தினர். இதில் பத்திரிகையாளர் சங்க தலைவர் அன்பழகன் காயம் அடைந்தார் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.மேலும் 3 பத்திரிகையாளர்கள் காயம் அடைந்து உள்ளனர். பத்திரிகையாளர்கள் மீது கல்வீசித் தாக்கியதாக  பார்த்த சாரதி எம்.எல்.ஏ உள்பட 18 தேமுதிகவினர் கைது செய்யபட்டு உள்ளனர்.மேலும் பலர் மீது  வழக்குபதிவு செய்யபட்டு உள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அங்குள்ள ஒரு […]

angusam 28/12/2015

வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்டபகுதிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தஞ்சாவூர் ரயிலடியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு விஜயகாந்த் பேசியபோது, டெல்டா மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் தூர் வாரப் படாததால்தான், மழை நீர் வீணாக கடலில் சென்று கலக்கும் நிலை உருவாகியுள்ளது. டெல்டா பகுதி விவசாயிகளை அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது.  டெல்டா மாவட்ட விவசாயிகளை அதிமுக […]

angusam 04/12/2015

நிருபருக்கே பதில் சொல்ல திராணியற்ற இவர்களா! தமிழக மக்களுக்கு பதில்சொல்ல போகிறார்கள் : விஜயகாந்த் முதலமைச்சர் ஜெயலலிதா இரண்டு மணிநேரம்  ஹெலிகாப்டரில் வெள்ள சேதத்தை பார்வை யிட்டது குறித்து  தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை: ’’சென்னையில் பெய்த கனமழையால் ஏழை, பணக்காரன், குடிசைவீடு, மாடிவீடு என எவ்வித வேறுபாடும் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் வீடுகளை இழந்து முகாம்களிலும், சாலைகளிலும் நிர்க்கதியாக நிற்கிறார்கள். பலபேர் அவரவர் வீடுகளில் வீட்டுச்சிறையில் இருப்பதைப் போன்ற நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. […]

tomscratch20042007 30/11/2015

அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சியை 20-வது இடத்திற்கு பின்னோக்கி கொண்டு சென்றது தான் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கடந்த காலங்களில் தமக்கு சாதகமான ஆய்வுகள் ஊடகங்களில் வெளியான போதெல்லாம் சட்டமன்றத்தில் பெருமை பேசியவர் ஜெயலலிதா என்று கூறியுள்ளார். ஆனால் தமிழகம் அனைத்து துறைகளிலும் பின்தங்கி உள்ளதாக தற்போது வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகளை அவர் ஏற்க மறுப்பது ஏன் என்று விஜயகாந்த கேள்வி எழுப்பியுள்ளார். துறைவாரியான ஆய்வில் […]

angusam 17/11/2015

வில்லிவாக்கத்தில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சியில் விருகம்பாக்கம் எம்எல்ஏ பார்த்தசாரதி வட சென்னை மாவட்ட. செயலாளர் யுவராஜ் மற்றும் பொதுமக்கள்  இரண்டு  பேரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் அடி உதை கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு

angusam 15/11/2015

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்க சென்றிருந்தார். பெரிய காட்டுப்பாளையம் என்ற இடத்தில் விஜயகாந்த் வந்த வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த விஜயகாந்த் சரியான ஏற்பாடுகளை செய்யவில்லை என்ற ஆத்திரத்தில் பண்ருட்டி எம்.எல்.ஏ சிவகொழுந்துவின் தலையில் பளார் பளாரென்று 4 முறை அடித்தார். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், எம்.எல்.ஏக்களை அடிப்பது இது முதல் முறையல்ல.ஏற்கெனவே தருமபுரி எம்.எல்.ஏ பாஸ்கரை அடித்துள்ளார். இதே சிவக்கொழுந்துவை கடந்த […]

angusam 15/09/2015

 தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சியை கலைத்துவிட்டு அதிமுகவில் சேர தயார் என முதல்வர் ஜெயலலிதாவுக்கு விஜயகாந்த் பகிரங்க சவால் விடுத்துள்ளார். தே.மு.தி.க. 11-ம் ஆண்டு தொடக்கவிழா, விஜயகாந்தின் பிறந்தநாளான வறுமை ஒழிப்பு தினவிழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா பொதுக்கூட்டம் கோவை கொடிசியா வளாகத்தில் நேற்று இரவு நடைபெற்றது. விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு ரூ.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். பிரேமலதா விஜயகாந்த், மற்றும் முன்னனி […]