தே.மு.தி.க

johnhatton61986 16/08/2016

சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்து தே.மு.தி.க கூட்டணி அமைத்து 104 இடங்களில் போட்டியிட்டு அனைத்து தொகுதியிலும் தோல்வியை தழுவியது. தேர்தல் முடிவுக்கு பிறகு முக்கிய நிர்வாகிகள் பலர் தே.மு.தி.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க, தி.மு.க வில் சேர்ந்தனர். மாவட்ட செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் என பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்கள் விலகி சென்றதால் கட்சியை பலப்படுத்த விஜயகாந்த் தீவிர நடவடிக்கை மேற் கொண்டார். கட்சியில் இருந்து யாரும் விலக வேண்டாம். உங்களுக்கு வளமான எதிர்காலம் இருக்கிறது […]

johnhatton61986 11/08/2016

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மாவட்ட செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அவதூறு வழக்கு தே.மு.தி.க. சார்பில் வறுமை ஒழிப்பு தினம் மற்றும் நரிக்குறவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 2012–ம் ஆண்டு ஆகஸ்டு 14–ந் தேதி பெரம்பலூரில் நடந்தது. இதில் கலந்துகொண்ட தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் பேசும்போது, முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், தமிழக அரசை விமர்சித்து பேசியதாகவும் அவர் மீது அரசு […]

angusam 30/05/2016

தேர்தல் முடிவு வெளியாகி 10 நாட்களாகி, புதிய அரசும் பதவி ஏற்றுக் கொண்டு விட்டது. ஆனால் ஒரு விஷயம் மட்டும் நின்ற பாடு இல்லை. அது வேறு ஒன்றும் இல்லை.. சமூக வலைதளங்களில் ‘வைகோ’ என்ற தனிமனிதன் விமர்சகர்களால் பெரிதும் ‘கழுவி கழுவி’ ஊற்றப்படும் செயல்;. வைகோவால் தேமுதிக, கம்யூனிஸ்ட் இயக்கங்கள், விடுதலை சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அழிந்து விட்டன என்பதே விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. அவர்களின் விமர்சனம் சரி தானா.? சற்றே […]

angusam 26/03/2016

கேப்டன் கட்சியின் நிர்வாகி கட்டிய பணத்தை திரும்ப கேட்டு வருகிறார்கள்கள்… சட்டசபை தேர்தலில் தி.மு.க – தே.மு.தி.க. இடையே கூட்டணி ஏற்படும் என்று முதலில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதனால் தி.மு.க. – தே.மு.தி.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் தே.மு.தி.க.வும் இணைந்தால் ஆட்சி மாற்றம் உறுதி என்று நம்பிய இரு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கேட்டு மனு கொடுத்தனர். தே.மு.தி.க. 234 தொகுதிக்கும் நேர்காணல் நடத்தியது. மாவட்ட செயலாளர்கள், […]

angusam 26/03/2016

வைகோ வாங்கிக் குவித்த சொத்துக்கள் எப்படி வந்தது? விவாதிக்க தயாரா? : சி.பி.ராதாகிருஷ்ணன் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை கூட்டணிக்கு இழுக்க பேரம் பேசியதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளதற்கு, பாஜக முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், ’’வைகோவை போல சுய நலமிக்க தலைவர் தமிழகத்தில் யாரும் கிடையாது. தனது நலனுக்காக எந்த நிலைப்பாட்டையும் மாற்றிக் கொள்ளும் ஒரு தலைவர்தான் வைகோ.   விஜயகாந்தை பாஜக மயக்க பார்த்ததாக கூறும் வைகோ கடந்த சில மாதங்களுக்கு […]

angusam 11/01/2016

அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரபோகிறது. மக்களை விலைக்கு வாங்குவதற்கு அரசியல்கட்சிகள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு மக்களை சரி பண்ணுவதற்கு அலைவர்கள், இப்படிப்பட்ட சூழ்நிலையில் கடந்த ஸ்ரீரங்க இடைத்தேர்தில் அரசியல் சக்திகளால், அதிகாரிகளால், ஊடகத்தினரால் செய்ய முடியாததை அல்லது செய்வதற்குப் பயப்படுவதை தனி ஒரு மனிதராக நின்று சாதித்திருக்கிறார் அந்த சாமானியக் குடிமகன். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் கரன்சி விளையாட்டு ஆடிய ஆளுங்கட்சி கொடுத்த பணத்தை வாங்கின கையோடு இந்திய தேர்தல் ஆணையம் பெயரில் டி.டி.யாக எடுத்து […]

angusam 27/11/2015

தே.மு.தி.க.வினர் ஊர்வலம் சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் நேற்று காலை மழை வெள்ளத்தால் ரேஷன் கார்டுகளை இழந்தவர்களுக்கு ரேஷன் கார்டு நகல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக மண்டல அலுவலக வாசலில் அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் நின்று கொண்டு இருந்தனர். அப்போது ஆலந்தூரில் மழையால் தண்ணீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மண்டல அலுவலரிடம் மனு கொடுப்பதற்காக தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ஏ.எம்.காமராஜ் தலைமையில் பகுதி செயலாளர் நாராயணன் உள்பட […]

angusam 15/11/2015

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்க சென்றிருந்தார். பெரிய காட்டுப்பாளையம் என்ற இடத்தில் விஜயகாந்த் வந்த வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த விஜயகாந்த் சரியான ஏற்பாடுகளை செய்யவில்லை என்ற ஆத்திரத்தில் பண்ருட்டி எம்.எல்.ஏ சிவகொழுந்துவின் தலையில் பளார் பளாரென்று 4 முறை அடித்தார். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், எம்.எல்.ஏக்களை அடிப்பது இது முதல் முறையல்ல.ஏற்கெனவே தருமபுரி எம்.எல்.ஏ பாஸ்கரை அடித்துள்ளார். இதே சிவக்கொழுந்துவை கடந்த […]