நடிகர் சங்கம்

angusam 02/05/2017

100 சவரன் தங்கம் கொடுத்து மகிழ்ச்சி கண்ணீல் மூழ்க வைத்த நடிகர் விஜய்சேதுபதி 100 சவரன் தங்கம் வழங்கியது தமிழ் சினிமாவுக்கு நான் செய்யும் நன்றிக்கடன் ‘- மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.   தமிழ்த்தேசிய சலனப்பட 100ஆம் ஆண்டு விழா, இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் நிறுவனராக இருக்கும் ‘உலகாயுதா’ அமைப்பின் சார்பில் கொண்டாடப்பட்டது. திரையுலகு சார்ந்த 100 மூத்த கலைஞர்களுக்கு தலா ஒரு பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. அதற்கான பொருள் உதவியை ‘மக்கள் செல்வன்’ விஜய சேதுபதி […]

angusam 05/03/2016

நடிகர் விமலின் “மாப்பிள்ளை சிங்கம்’’வெள்ளித்திரைக்கு முன்னமே இணைய தளத்தில் லீக் ஆகி அவருடைய எதிர் காலத்தையே கேள்விக்குறியாக்கிவிட்டது. நடிகர் விமல் நடிக்கும் படம். எழுத்தாளர் டான் அசோக் கதை-வசனத்தில், மதன் தயாரிப்பில், என்.ராஜசேகர் இயக்கத்தில் வெளிவரப்போகும் படம் “மாப்பிள்ளை சிங்கம்.’ 2014-ல் பூஜை போட்டு 2016 மார்ச் 11-ஆம் தேதி வெளிவர தேதி குறித்திருக் கிறார்கள். விமல் நீண்ட நாட்களுக்குப் பிறகு அஞ்சலியுடன் நடித்து வெளிவர தயாராக இருக்கும் படம். இந்த படத்தில் அனிருத், சிவகார்த்தி கேயன் […]

angusam 30/12/2015

சரத்குமார், ராதாரவி மீது நடவடிக்கை பாயும் நடிகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நடிகர் சங்க கணக்கு வழக்குகளை திருப்பி ஒப்படைக்கும் விவகாரத்தில் சரத்குமார் பொய்யான தகவலை பரப்பி வருவதாக தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக நடிகர் சங்கம்  வெளியிடப்பட்ட அறிக்கையில், நடிகர் சங்க அறக்கட்டளைக்கு இரண்டரை வருட கணக்கு வழக்குகளை ஒப்படைக்க வேண்டியுள்ளது. கணக்குகளை ஒப்படைத்த 21 நாட்களில் நடிகர் சங்க பொதுக்குழுவை கூட்ட நடிகர் சங்கம் தயாராகி வருகிறது. சரத்குமார் பொறுப்பற்ற செயலால், […]

angusam 19/12/2015

பீப் பாடல் தவறானது என்று கூறியுள்ள சரத்குமார், இந்த விவகாரத்தில் நடிகர் சங்கம் ஏன் தலையிடவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். சிம்பு பாடிய பாடல் ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியானது. பீப் பாடல் என்கிற பெயரில் வெளியான அந்தப் பாடல் ஆபாச அர்த்தங்களுடன் இருந்ததால், கடும் எதிர்ப்பைச் சம்பாதித்தது. சிம்பு, அனிருத் மீது வழக்குகள் பாய்ந்துள்ளன. இது குறித்து விளக்கம் அளிக்குமாறு இருவருக்கும் கோவை போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், […]

angusam 30/11/2015

சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு டிசம்பர் 13ம் தேதி மீண்டும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   இதற்கான வேட்பாளர் பட்டியல் நேற்று இறுதி செய்யப்பட்டது. சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம்.   தலைவராக இருந்த ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து 2014-2017ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது.   1,300 உறுப்பினர்கள் கொண்ட இந்த சங்கத்தில், 700க்கு மேற்பட்ட […]

angusam 16/11/2015

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடன் நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் நேரில் சந்தித்து பேசி நன்றி தெரிவித்தனர். நடிகர் சங்கத்திற்கு கடந்த அக்டோபர் 18ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் சரத்குமார் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான அணியும் மோதின. இதில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. விஷால் பொதுச்செயலாளராகவும், கார்த்தி பொருளாளராகவும், பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் துணைத்தலைவர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற உடனேயே முதல்வர் ஜெயலலிதாவிற்கு […]

angusam 09/11/2015

தீபாவளி அன்று வெளியாகும் நடிகர் அஜித் நடித்த வேதாளம் திரைப்படத்துக்கு மதுரையில் உள்ள திரையங்குகளில் ஒரு டிக்கெட் விலை ரூ.500 வரை விற்கப்படுவதாக, அவரது ரசிகர்கள் நகர் முழுவதும் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் வேதாளம் படத்துக்கான டிக்கெட்டுகள், தற்போதே திரையரங்குகளில் முன்பதிவு செய்து விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஒரு டிக்கெட் ரூ.500-க்கு விற்கப்படுவதாகவும், மாவட்ட ஆட்சியர், காவல் துறை நடவடிக்கை எடுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட வேண்டும் என்று நகர் முழுவதும் அஜித் ரசிகர்கள் […]

angusam 20/10/2015

தென்னிந்திய நடிக சங்க பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள விஷாலை கைது செய்யக்கோரி தமிழர் முன்னேற்ற கழகத்தின் சார்பில்  காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் 19-10-2015 திங்கள்கிழமை புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.  அந்த மனுவில் கடந்த 17-10-15 அன்று தொலைக்காட்சியில் பேட்டியளித்த  நடிகர் விசால் ரெட்டி, தமிழகத்தை சார்ந்த வெட்டியான் என்ற தொழில் செய்பவர்களை இழிவு படுத்தும் வகையில் பேசியுள்ளார். அதனால் நடிகர் விஷாலை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக  தமிழர் […]

angusam 19/10/2015

மூத்த நடிகர்களுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் அறிவித்தார்.  ரஜினிகாந்த்–கமல்ஹாசனுக்கு அழைப்பு தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியினர் வென்றுள்ளனர். நாசர் தலைவராகவும், விஷால் பொதுச் செயலாளராகவும், பொன்வண்ணன், கருணாஸ் ஆகிய இருவரும் துணைத்தலைவர்களாகவும் தேர்வாகியுள்ளார்கள். பொருளாளராக கார்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.24 பேரை கொண்ட செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு விஷால் அணியை சேர்ந்த 20 பேர் வெற்றி பெற்றுள்ளனர். புதிய நிர்வாகிகளிடம் ஏற்கனவே பதவியில் இருந்த சரத்குமார், ராதாரவி […]

angusam 19/10/2015

நடிகர் ரஜினிகாந்தை நடிகர் சங்கத்தின் சமூக வலைதளத்தில் கடுமையான விமர்சனங்கள் வெளியிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த வேலையில் ரஜினியின் மீதான விமர்சனங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஷால் அணி, சரத்குமார் அணி என தனித்தனியே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தலில் போட்டிட்டது ஊரறிந்த விசயம், இதில் நேற்று நடந்த தேர்தலில் வாக்களிக்க வந்த ரஜினிகாந்த், தென்னிந்திய நடிகர் சங்கப் பெயரை ”தமிழ்நாடு நடிகர் சங்கம்” என மாற்றுங்கள்!” – […]

angusam 19/10/2015

நடிகர் சங்கத் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தினால் முன்னேற்றம் காணலாம் என தமிழக நடிகர், நடிகைகள் நம்பியதன் விளைவே நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் இளைய தலைமுறை முறையினர் வெற்றி பெற்றுள்ளார்கள் என்கிறார்  பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்களை வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ள அன்புமணி, சென்னையில் நேற்று நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் புதிய தலைவராக நடிகர் நாசர் அவர்களும், பொதுச்செயலாளராக நடிகர் விஷால் […]

angusam 19/10/2015

நடிகர்  ரஜினிகாந்த் தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், கமல்ஹாசன் இந்திய நடிகர் சங்கம் என பெயர் மாற்ற வேண்டும்  என்றும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளனர். இதுகுறித்து ‘நாம் தமிழர் கட்சி’ ஒருங்கிணைப்பாளர் சீமானிடம்,என நிருபர்கள் கேட்டகேள்விக்கு பதிலளித்த சீமான், ‘‘பல கோடி தமிழ் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ரஜினிகாந்த் சொல்லியிருக்கும் கருத்தை நான்வரவேற்கிறேன். அவரது மதிப்பு மிக்க கருத்துக்கு நன்றி. கமல்ஹாசன் இந்திய நடிகர் சங்கம் […]

angusam 19/10/2015

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தேர்தலில், நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் அமோக வெற்றி பெற்று சரித்திரம் படைத்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் சரத்குமார் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான அணியும் போட்டியிட்டது. இதற்காக சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. நேற்று மாலை 6 மணியளவில் வாக்குகள் என்னும் பணி […]

angusam 18/10/2015

நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணியான விஷால் அணிக்கும், தற்போதைய தலைவர் சரத்குமார் அணிக்குமான யுத்தத்தின் இறுதி நாள் இன்று.  நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வாக்களிக்கிறார்கள். மோதலை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பாகவே காட்சியளிக்கிறது நடிக சங்க வளாகம். பல வருடங்களுக்கு பிறகு நடக்கும் நடிகர் சங்க தேர்தல் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சரத்குமார் அணியும், விஷால் அணியும் […]

angusam 05/10/2015

நாம் 14 நாட்களுக்கு முன்பாகவே வெளியிட்ட கட்டுரையை இப்போது அப்படியே தருகிறோம். தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தேர்தல் என்பது.. தமிழ்நாட்டின் சட்டசபை தேர்தலை விட  பெரும் பரபரப்பை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் எங்காவது இரண்டு மூன்று பேர் கூடி நின்று பேசினால் ஜெயிக்க போவது யார் விஷாலா ? சரத்குமாரா ? என்கிற கேள்விகளோடு தான் விஷால் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும், செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணை தலைவர்கள் பதவிக்கு […]