போலீஸ்

johnhatton61986 04/09/2016

திருப்பூரில் தனியார் பள்ளி வேன் மோதி படுகாயமடைந்த 1–ம் வகுப்பு மாணவிக்கு கோவை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– பள்ளி மாணவி திருப்பூர் பலவஞ்சிபாளையம் மூகாம்பிகைநகரை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் வீடுகளில் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார். இவருடைய 2–வது மகள் லட்சுமி (வயது 6). இவள் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1–ம் வகுப்பு படித்து வருகிறாள். மாணவி லட்சுமி தினமும் […]

johnhatton61986 03/09/2016

ஜெயங்கொண்டம் என்.ஏ.ஜி காலனியை சேர்ந்தவர் பஞ்சநாதன் (வயது60). ஓய்வுபெற்ற வனத்துறை அலுவலர். இவர் ஜெயங்கொண்டம்– சிதம்பரம் சாலையில் உள்ள வங்கியில் நகையை அடகு வைத்து பெற்ற ரூபாய்.1.78 லட்சத்தை தனது மோட்டார் சைக்கிளில் பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு அருகில் இருந்த கடையில் டீக்குடித்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் பெட்டி திறந்து கிடந்தது. அதில் இருந்த பணம் மற்றும் ஒரு தங்க மோதிரம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து பஞ்சநாதன் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் […]

johnhatton61986 01/09/2016

விருத்தாசலத்தில் இளைஞர் ஒருவர் கேலி, கிண்டல் செய்ததால் அவமானம் தாங்கமுடியாமல் செவிலியர் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து, பெண்ணின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– செவிலியர் விருத்தாசலம் ஏனாதிமேடு பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இளம்பெண், செவிலியராக ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இவர் தினமும் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு சைக்கிளில் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில், நேற்று இரவு […]

johnhatton61986 01/09/2016

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாண்டகப்பாடியை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 65). அதே பகுதியில் வசித்து வருபவர் அசோதை (50). இந்நிலையில் நேற்று கலியமூர்த்தி குடிபோதையில் வந்து அசோதையிடம் தகாத வார்த்தைகளை கூறி தகராறு செய்துள்ளார். இதுகுறித்து அசோதை வி.களத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலியமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

johnhatton61986 25/08/2016

திருப்பரங்குன்றம் போலீஸ் நிலையத்தில் நிலைய எழுத்தராக பணி செய்பவர் மகேந்திரன். அதே போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றுபவர் அங்குசாமி. நேற்று இவர்கள் இருவரும் பணியில் இருந்தனர். அப்போது மகேந்திரனிடம் அங்குசாமி விடுமுறை எடுப்பது குறித்து பேசியுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றிய நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்புரண்டு சண்டை போட்டு கொண்டனர். அதன்பின்னர் அங்கு வந்த சக போலீஸ்காரர்கள் அவர்களை சமாதானப்படுத்தினார்கள். இந்த சம்பவம் குறித்து மாநகர […]

johnhatton61986 24/08/2016

சிறுவன் கடத்தல் சம்பவத்தில் விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார். சிறுவன் கடத்தல் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஊர்புறம் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் மகன் பூபதி (வயது 4). கடந்த 18–ந்தேதி வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த பூபதி திடீரென மாயமானான். அவனது பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடினர். இதற்கிடையே பாலமுருகனின் செல்போனுக்கு பேசிய மர்ம நபர் சிறுவனை கடத்தி வைத்து இருப்பதாகவும், ரூ.5 லட்சம் தந்தால் விட்டு விடுவதாகவும் மிரட்டி விட்டு போன் இணைப்பை துண்டித்து […]

johnhatton61986 22/08/2016

புதுக்கடை அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:– கல்லூரி மாணவர் புதுக்கடை அருகே கீழ்குளத்தை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மகன் ஆலன் மனோ சாமுவேல் (வயது 19). இவர் தக்கலை அருகே உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக ஆலன் மனோ சாமுவேல் வாழ்க்கையில் வெறுப்புற்று யாருடனும் அதிகம் பேசாமல் […]

johnhatton61986 21/08/2016

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்தவர் வினோத். இவர், கடந்த 2009–ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த எழில் என்ற எழிலரசன்(வயது 28) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆனால் கடந்த 1½ ஆண்டுகளாக எழில், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைக்க கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதையடுத்து கண்ணகி நகர் போலீஸ் […]

johnhatton61986 20/08/2016

புதுக்கோட்டை மரக்கடை தெருவை சேர்ந்தவர் குணசீலன். இவர் பிருந்தாவனத்தில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை கடையை திறக்க வந்த போது கடையின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கடையின் கல்லாவில் இருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் சோப்பு, பவுடர் உள்பட பல பொருட்களை மர்மமநபர்கள் கொள்ளையடித்து […]

johnhatton61986 16/08/2016

கொருக்குப்பேட்டை, போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் சாய் சரவணன். நேற்று மாலை அவர் கொருக்குப்பேட்டை அம்மை அப்பன் தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது நடுரோட்டில் நிறுத்தப்பட்ட ஆட்டோவில் சிலர் அமர்ந்து மது அருந்தினர். இதனை போலீஸ்காரர் சாய் சரவணன் கண்டித்தார். இதில் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஆட்டோவில் இருந்தவர்கள் போலீஸ்காரர் சாய் சரவணனின் செல்போனை பறித்து தாக்கினர். இது குறித்து அவர் கொருக்குப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் […]

jefferywinneke 16/08/2016

திருச்சியில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் பழனிசாமி தேசிய கொடி ஏற்றி வைத்து ரூ.18 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. கலெக்டர் கொடி ஏற்றினார் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக நடந்தது. மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். வண்ண பலூன்கள், வெண் புறாக்களையும பறக்க […]

johnhatton61986 15/08/2016

செஞ்சி கோட்டையில் பிணமாக கிடந்த இளம் பெண் யார் என்பது அடையாளம் தெரிந்தது. ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்தவரை அழைத்து வந்து பலாத்காரம் செய்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– இளம் பெண் பிணம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டையில் உள்ள கல்யாண மகாலுக்கு பின்னால் இருக்கும் பாறைக்கு பின்புறம் கடந்த மாதம் 23–ந்தேதி மாலையில் சுமார் 19 வயதுடைய இளம் பெண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக […]

jefferywinneke 13/08/2016

திருச்சியில் போலி ஓட்டுனர் உரிமம் தயாரித்து விற்பனை செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மடிக்கணினி, போலி ஓட்டுனர் உரிமங்களை பறிமுதல் செய்தனர். போலி ஓட்டுனர் உரிமம் தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் ஷேக்ஸ்பியர். இவர் ஓட்டிச்சென்ற வேன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்துக்குள்ளானது. இது தொடர்பாக அவர் காப்பீட்டு நிறுவனத்தில் இழப்பீடு கேட்டு விண்ணப்பித்தார். அப்போது அவருடைய ஓட்டுனர் உரிமம், காப்பீடு செய்ததற்கான ஆவணங்கள் ஆகியவற்றை காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் […]

johnhatton61986 12/08/2016

ஆம்பூர் அருகே பள்ளிக்கூடம் செல்ல சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி அக்காள்– தம்பி பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– அக்காள் – தம்பி வேலூர் மாவட்டம், மாதனூர் அருகே உள்ள பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ், கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் பிரியா (வயது 7), மகன் அன்பரசன் (5). இவர்கள் 2 பேரும் தேவிகாபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1–ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று […]

johnhatton61986 12/08/2016

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் போலீஸ் காவலில் இருந்த வாலிபர் இறந்த சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணைய அதிகாரி நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளார். வாலிபர் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள மாயாகுளம் பகுதியை சேர்ந்த ஹாஜாநஜ்முதீன் என்பவருடைய மகன் சேக்அலாவுதீன்(வயது38) என்பவர் கடந்த சில நாட்களுக்குமுன் வழிப்பறி வழக்கு ஒன்றில் போலீசார் கைது செய்ய முயன்றபோது தப்பிப்பதற்காக பாலத்தில் இருந்து குதித்து படுகாயமடைந்தார். அதன்பின்னர் போலீசாரின் காவலில் இருந்தபோது உடல்நிலை மோசமாகி ஆஸ்பத்திரிக்கு கொண்டு […]