விஜயகாந்த்

johnhatton61986 16/08/2016

சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்து தே.மு.தி.க கூட்டணி அமைத்து 104 இடங்களில் போட்டியிட்டு அனைத்து தொகுதியிலும் தோல்வியை தழுவியது. தேர்தல் முடிவுக்கு பிறகு முக்கிய நிர்வாகிகள் பலர் தே.மு.தி.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க, தி.மு.க வில் சேர்ந்தனர். மாவட்ட செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் என பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்கள் விலகி சென்றதால் கட்சியை பலப்படுத்த விஜயகாந்த் தீவிர நடவடிக்கை மேற் கொண்டார். கட்சியில் இருந்து யாரும் விலக வேண்டாம். உங்களுக்கு வளமான எதிர்காலம் இருக்கிறது […]

johnhatton61986 08/08/2016

உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து விஜயகாந்த் அறிவிப்பார் என புதுக்கோட்டையில் நேற்று தே.மு.தி.க. மாநில பொருளாளர் இளங்கோவன் கூறினார். பேட்டி புதுக்கோட்டையில் தே.மு.தி.க செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்ள இக்கட்சியின் மாநில பொருளாளர் இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– தொண்டர்களின் கருத்து ஒவ்வொரு மாவட்டமாக சென்று நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு வருகிறோம். அனைத்து இடங்களிலும் உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க தனித்து நிற்க வேண்டும் என்பதே நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் […]

johnhatton61986 28/07/2016

தேமுதிகவின் கொள்கை பரப்பு செயலராக மனைவி பிரேமலதாவை நியமிக்க அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். சட்டசபை தேர்தலின் போதிருந்தே தேமுதிக நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியைவிட்டு தப்பி ஓடுகின்றனர். இவர்கள் அனைவரும் முன்வைக்கும் ஒரே குற்றச்சாட்டு தேர்தல் தோல்விக்கு பிரேமலதாதான் காரணம்; அவரது யோசனைப்படி மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்தது மாபெரும் தவறு என்பதுமட்டுமே. இதனால் கட்சி நடவடிக்கையில் இனி பிரேமலதா ஈடுபடமாட்டார் என்று விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளிடம் உறுதியளித்திருந்தார். ஆனால் பிரேமலதாவோ, தம்முடைய இறுதி மூச்சு […]

johnhatton61986 26/07/2016

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தே.மு.தி.க. சார்பில் கடந்த 6-11-2015 அன்று பொதுக்கூட்டம் நடந்தது.இதில் தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜய காந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் தமிழக முதல்-அமைச்சரை பற்றி அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதுபற்றி தமிழக அரசு  உத்தரவின் பேரில் மாவட்ட அரசு வக்கீல் சுப்பிரமணியன் என்பவர் திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 24-3-2016 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய காந்த் , பிரேமலதா ஆகி […]

johnhatton61986 19/07/2016

எதிர்கட்சிகள் மக்கள் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி, ஆளும் கட்சியை கேள்வி கேட்கும் போது பதில் கூறுவதை விட்டுவிட்டு அவர்கள் மீது அவதூறு வழக்குகளை போடுவதை ஜெயலலிதா இனியாவது நிறுத்தி கொள்ள வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: வெறும் அறிவிக்கை: பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஏற்கனவே தென்னைமர காப்பீட்டு திட்டம், கொப்பரை தேங்காய் அரசால் நேரடி கொள்முதல், டெல்டா மாவட்டங்களில் […]

johnhatton61986 16/07/2016

சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்த பின்னர் பல்வேறு கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். 3 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். தேமுதிக , தமாகாவைச் சேர்ந்த பலரும் அதிமுகவில் இணைந்தனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவை த.மா.கா. மாநில மகளிர் அணி முன்னாள் தலைவரும், கோவை மேற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மகேஷ்வரி, முன்னாள் மாநில பொதுச்செயலாளரும், பேராவூரணி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான […]

johnhatton61986 15/07/2016

தமிழக சட்டசபைத் தேர்தலி்ல படித்தவர், படிக்காதவர் என அனைவருமே காசு வாங்கிக் கொண்டுதான் ஓட்டுப் போட்டனர். இதனால்தான் நாங்கள் தோற்க நேரிட்டது. நேர்மையாக தேர்தலை எதிர்கொண்ட எங்களுக்கு மக்கள் கொடுத்த பரிசு தோல்விதான் என்று விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா விஜயகா்த் கூறியுள்ளார். சட்டசபைத் தேர்தல் படு தோல்விக்குப் பிறகு தேமுதிக சத்தமே இல்லாமல் இருக்கிறது. சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு கட்சியிலிருந்து முக்கியத் தலைவர்கள் வெளியேறத் தொடங்கினர்.. இன்னும் நிற்காமல் அது தொடர்கிறது. இந்தகத் தேர்தல் படு தோல்விக்கு […]

johnhatton61986 15/07/2016

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில், இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொள்ளும் மாநில கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. 10 ஆண்டு இடைவெளிக்கு பிறகு 11-வது கூட்டமாக மோடி தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், தமிழக அரசின் பங்காக முதல்வர் ஜெயலலிதாவே நேரில் கலந்து கொண்டு தமிழக பிரச்சனைகளை அந்த அவையில் எடுத்துரைத்து, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளையும் கேட்டுப்பெற வேண்டும். எப்போதும் போல் ஒ.பன்னீர்செல்வமோ அல்லது அரசு சார்பாக ஒரு நபரையோ […]

johnhatton61986 28/06/2016

திமுகவில் கூண்டோடு இணைப்பு இந்த கூட்டத்தில் மக்கள் தேமுதிகவை கலைத்துவிட்டு கூண்டோடு திமுகவுடன் இணைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் சந்திரகுமார் கூறியதாவது: 60 லட்சம் தொண்டர்கள் வாழ்வு சீரழிவு எங்களை விஜயகாந்த் கடனாளியாக்கி விட்டு தன்னை வளமாக்கி விட்டார். 60 லட்சம் தொண்டர்களின் வாழ்வை சீரழித்துவிட்டார். விஜயகாந்தின் சுயநலத்திற்காக தொண்டர்கள் வீட்டையும் இழந்து, நடுத் தெருவுக்கு வந்து விட்டார்கள். தேமுதிக இருக்காது தமிழகத்தில் அதிமுக, திமுகவை தவிர வேறு கட்சிகளை மக்கள் ஏற்கவில்லை. இதை இந்த […]

angusam 22/06/2016

பணம்.. பணம்னு கேட்டுகிட்டே இருந்தீங்க… கட்சியையே கலைச்சுடுவேன்…. நிர்வாகிகளை மிரட்டிய விஜயகாந்த் தேர்தலின் போது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ரூ.10 லட்சம் தேர்தல் நிதியாக வழங்கப்படும் என்று விஜயகாந்த் கூறியிருந்தாராம். ஆனாலும் தேர்தல் செலவுக்கு பணம் கொடுக்கவில்லையாம். தேர்தல் தோல்விக்குப் பிறகும் விஜயகாந்திடம் நிர்வாகிகள் பணம் கேட்டு தொந்தரவு செய்ய கடந்த 5-ந் தேதி பணம் தரப்படும் எனக் கூறினார். இருந்தபோதும் சிலருக்குத்தான் இந்த பணம் கிடைத்திருக்கிறது. தற்போது விஜயகாந்த் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட […]

angusam 26/03/2016

கேப்டன் கட்சியின் நிர்வாகி கட்டிய பணத்தை திரும்ப கேட்டு வருகிறார்கள்கள்… சட்டசபை தேர்தலில் தி.மு.க – தே.மு.தி.க. இடையே கூட்டணி ஏற்படும் என்று முதலில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதனால் தி.மு.க. – தே.மு.தி.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் தே.மு.தி.க.வும் இணைந்தால் ஆட்சி மாற்றம் உறுதி என்று நம்பிய இரு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கேட்டு மனு கொடுத்தனர். தே.மு.தி.க. 234 தொகுதிக்கும் நேர்காணல் நடத்தியது. மாவட்ட செயலாளர்கள், […]

angusam 11/03/2016

பழம் கனிந்து கொண்டிருக்கிறது பாலில் எப்போது விழும் என்று இன்னும் முடிவாகவில்லை என்று கருணாநிதி, கடந்த சிலநாட்களுக்கு முன் சொன்ன அந்த வார்த்தை தான் இப்போது படாதபாடு படுகிறது. கருணாநிதியின் அந்த வார்த்தை எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு கடுமையாக நையாண்டில் செய்யப்படுகிறது.  கருணாநிதிக்கு இந்த வயசில் தேவையா? இந்த வயசான காலத்தில் விஜயகாந்துகிட்டே போய் தொங்கிட்டுயிருக்காரே என்று கருணாநிதியின் மீது கிண்டல்கள், மீம்ஸ்கள் பறந்துகொண்டு இருக்கின்றன. அதுவும் கருணாநிதி இந்த  வார்த்தைக்கு  பிறகு 2 நாட்களுக்குள் […]

angusam 02/01/2016

தமிழக சட்டசபை தேர்தலுக்கான பணிகளை தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் சுறுசுறுப்பாக களமிறங்கி திட்டம் தீட்டி வருகின்றன. ஏற்கனவே மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மக்கள் கூட்டணியை அமைத்துள்ளனர். இந்நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணி சாத்தியமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2011 சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெற்றிருந்தது. ஆனால் அடுத்து நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறாமல் […]

tomscratch20042007 31/12/2015

சென்னை விருகம்பாக்கத்தில்  விஜயகாந்த் வீட்டை முற்றுகையிட முயன்ற பத்திரிகையாளர்கள் மீது தே.மு.தி.க எம்.எல்.ஏ பார்த்தசாரதியும் தொண்டர்களும் தாக்குதல் நடத்தினர். இதில் பத்திரிகையாளர் சங்க தலைவர் அன்பழகன் காயம் அடைந்தார் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.மேலும் 3 பத்திரிகையாளர்கள் காயம் அடைந்து உள்ளனர். பத்திரிகையாளர்கள் மீது கல்வீசித் தாக்கியதாக  பார்த்த சாரதி எம்.எல்.ஏ உள்பட 18 தேமுதிகவினர் கைது செய்யபட்டு உள்ளனர்.மேலும் பலர் மீது  வழக்குபதிவு செய்யபட்டு உள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அங்குள்ள ஒரு […]

angusam 30/12/2015

பாரதிய ஜனதா கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் இன்று மாலை திடீரென்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினார். வளசரவாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் உடன் இருந்தார். சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றதாகத் தெரிகிறது. வரவிருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில், பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதற்கு முரளிதர் ராவ், விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்ததாகத் தெரிகிறது. முன்னதாக இன்று காலை தமிழக பாஜக தலைவர் […]