விபத்து

johnhatton61986 04/09/2016

ஆலங்குளம் அருகே பஸ்–மோட்டார்சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் பலியானார். இந்த விபத்து தொடர்பாக பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர். பஸ் மோதியது நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அண்ணாநகர் ஏ.ஜி சர்ச் தெருவை சேர்ந்தவர் குழந்தை வேல். அவருடைய மகன் ஜோசப் ராஜா (வயது 28). இவர் அம்பை ரோட்டில் கம்ப்யூட்டர் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். நேற்று காலை 11 மணி அளவில் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் வாங்குவதற்காக, ஜோசப் ராஜா […]

johnhatton61986 04/09/2016

விழுப்புரம் அருகே தனித்தனி சாலை விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள். பஸ் மோதி பெண் பலி விழுப்புரம் அருகே உள்ள வெங்கந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி கிருஷ்ணவேணி (வயது 45). இவர் தனது உறவினரான அதே கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன் (24) என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக நேற்று முன்தினம் மாலை விழுப்புரம் வந்தனர். பின்னர் விழுப்புரத்தில் இருந்து மீண்டும் வெங்கந்தூருக்கு இரவு புறப்பட்டனர். விழுப்புரம் […]

johnhatton61986 27/08/2016

தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் விஜயவரதன் (வயது 22), இவர் நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே வரும் போது பின்னால் வந்த லாரி கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த விஜயவரதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை […]

johnhatton61986 24/08/2016

கோவை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பிளஸ்–2 மாணவர் பரிதாபமாக பலியானார். இது தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். பிளஸ்–2 மாணவர் கோவை அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம் மாணிக்கவாசகர் நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மனைவி சித்ரா. இவர்களது மகன் இளங்கோ(வயது 17). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை இளங்கோ மோட்டார் சைக்கிளில் சித்தி திலகாவை அழைத்து கொண்டு அவர் வேலை பார்க்கும் பெரியநாயக்கன்பாளையத்தில் […]

johnhatton61986 22/08/2016

ஏற்காடு மலைப்பாதையில் உள்ள 17 மற்றும் 18–வது கொண்டை ஊசி வளைவில் நேற்று சேலத்தில் இருந்து ஏற்காடு நோக்கி வந்த லாரி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஏற்காடு வாழவந்தி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் கந்தையன் (வயது 32) என்பவர் காயமடைந்தார். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் ஏற்காடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் கந்தையனை மீட்டு சிகிச்சைக்காக […]

johnhatton61986 22/08/2016

காரைக்காலை அடுத்துள்ள நாகப்பட்டினம் அக்கரைபேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (வயது 48). அவர் சம்பவத்தன்று தனது மனைவி பவுனம்மாளுடன் காரைக்காலுக்கு வந்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். திரு–பட்டினம் பைபாஸ் சாலையில் இருந்து காரைக்கால்–நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே நாகப்பட்டினத்தில் இருந்து திருநள்ளாறு நோக்கி வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்தவிபத்தில் சாமிக்கண்ணு, பவுனம்மாள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அவர்கள் 2 பேரையும் சிகிச்சைக்காக காரைக்கால் பொது […]

johnhatton61986 15/08/2016

அருப்புக்கோட்டை அருகே வேன் மரத்தில் மோதிய விபத்தில் தலைமை ஆசிரியை உள்பட 3 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். தலைமை ஆசிரியை ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றுபவர் தங்கப்பாண்டியன் (வயது 50). இவரது மனைவி சரளாதேவி (48). இவர் கமுதி அருகே பூமாவிலங்கை பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார். பள்ளி விடுமுறையையொட்டி சரளாதேவி தனது உறவினர்களுடன் குற்றாலம் செல்ல முடிவு செய்தார். அதன்படி தனது தாயார் முத்துநாச்சியார்(64), மகாலிங்கம் […]

johnhatton61986 15/08/2016

திண்டிவனம் அருகே கார் மீது மோதி லாரிக்கு அடியில் சிக்கிய மோட்டார் சைக்கிள் தீ பிடித்து எரிந்தது. இதில் மாணவர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். அரசு கல்லூரி மாணவர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா தேவனந்தல் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பழனி. இவரது மகன் ராஜதுரை(வயது 19). இவர் நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2–ம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி மகன் மணிகண்டன்(20) சென்னை– வேளச்சேரியில் உள்ள […]

johnhatton61986 05/08/2016

சென்னை வில்லிவாக்கம்-பட்டினப்பாக்கம் இடையே செல்லும் மாநகர பஸ் (தடம் எண் 27-டி) நேற்று காலை வில்லிவாக்கத்தில் இருந்து பட்டினப்பாக்கம் நோக்கி புறப்பட்டது. மெரினா காமராஜர் சாலையில் பஸ் சென்று கொண்டிருக்கும்போது, பஸ்சின் முன்பக்கம் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். இதையடுத்து மயிலாப்பூர் தீயணைப்பு நிலையம் அருகே பஸ் நிறுத்தப்பட்டது. பஸ் நின்றதும் பயணிகள் பதற்றத்துடன் வேகவேகமாக இறங்கி ஓட்டம் பிடித்தனர். அப்போது திடீரென பஸ்சின் என்ஜின் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து […]

johnhatton61986 03/08/2016

நாமக்கல் மாவட்டம் குமார பாளையத்தை சேர்ந்தவர் செங்கோட கவுண்டர். இவருடைய மகன் ராஜவேல் (வயது 39). இவர் தனது நண்பர்கள் 3 பேருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு நேற்று காலை காரில் வந்தார். கோவிலில் சாமி கும்பிட்ட பிறகு, குமாரபாளையம் நோக்கி கார் புறப்பட்டது. கார், முள்ளக்காட்டை தாண்டி, அங்கு உள்ள தனியார் வங்கி அருகில் சென்ற போது, திடீரென்று காரின் பின்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரத்தில் […]

jefferywinneke 07/07/2016

சென்னை விமான நிலையத்தில் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் புதன்கிழமை (ஜூலை 6) இரவு தரையிறங்கும்போது திடீரென டயர் வெடித்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 6 பேரும் அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினர். பெங்களூரில் இருந்து புதன்கிழமை இரவு 8 மணிக்கு தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று சென்னை வந்தது. அந்த விமானத்தில் அந்த தனியார் நிறுவன அதிகாரிகள் 4 பேர், விமானப் பணியாளர்கள் 2 பேர் என மொத்தம் 6 பேர் பயணம் […]

angusam 29/04/2016

#தமிழ்நாடு_காவல்துறை #தேனி மாவட்ட #ஆயுதப்படை முதல்நிலைக் காவலர் திரு. #எம்_ராஜேஷ்வரன் கடந்த 27.04.16 அன்று (முந்தாநாள்) #மதுரையில் தமிழக #முதல்வர் தேர்தல் #பிரச்சாரம் பாதுகாப்பு பணி முடித்து #அன்று_இரவே தேனி திரும்பும் வழியில் உசிலம்பட்டி அருகில் #சாலை_விபத்தில் அகால மரணம் அடைந்து விட்டார். இவரது இந்த அகால மரணத்திற்கு காரணம் யார்..???? வெறும் இரண்டு மணிநேரம் மட்டுமே பிரச்சாரம் செய்ய மதுரை வந்த தமிழக முதல்வருக்கு பாதுகாப்பு வழங்க 24 மணிநேரத்திற்கு முன்பே தேனியிலிருந்து மதுரைக்கு சுமார் […]

angusam 28/01/2016

அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்ட பிறகும் சாதுர்யமாக ஓட்டி 80 பயணிகளின் உயிரை காப்பற்றிய நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கீழ்முதலம்பேடு கிராமத்தை சேர்ந்த சிவகுமார் என்பவர், அரசு பேருந்து ஓட்டுனராக இருந்தார். இவர், திருப்பதியில் இ ருந்து சென்னை நோக்கி அரசு பேருந்தை ஓட்டி வந்தார். அப்போது ஆந்திர மாநிலம் தடாவிற்கு பேருந்து வந்தபோது ஓட்டுனர் சிவக்குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. வலியால் துடித்தபோதும், சாதுர்யமாக பேருந்தை இயக்கி சாலையோரம் நிறுத்தியுள்ளார். […]

tomscratch20042007 06/12/2015

ஆண்டிபட்டி அருகே பயங்கர விபத்து: சம்பவ இடத்திலே 5 பேர் பலி ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் விளக்கு பகுதியில் தேனியிலிருந்து சென்ற அரசு பேருந்து, ஆட்டோ மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலே 5 பேர் உயிரிழந்துள்ளனர். தேனியில் இருந்து நேற்று இரவு அரசு பேருந்து மதுரை நோக்கி சென்றுக்கொண்டு இருந்த போது ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரம் விளக்கு பகுதி அருகே வந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ பஸ்சுக்கு அடியில் சிக்கி நசுங்கியதால் […]

angusam 21/11/2015

ஒகேனக்கல் சோகம்! சுற்றுலாவின் போது படகுப் பயணம் என்றால்… சமீபத்தில் ஒகேனக்கலில் நிகழ்ந்த படகு விபத்து நிச்சயமாக ஒவ்வொருவருடைய நெஞ்சிலும் எச்சரிக்கை அலாரம் அடிக்காமல் இருக்காது! மாமனார், மாமியார், மச்சான், மச்சானின் மனைவி, அவர்களுடைய மகள் மற்றும் தன்னுடைய மகன் என்று குடும்பத்தினர் ஆறு பேரை நொடிகளில் மொத்தமாகப் பறிகொடுத்துவிட்ட சென்னையைச் சேர்ந்த ராஜேஷ், அந்த `திக்திக்’ நொடியின் பிடியிலிருந்து இன்னமும் மீளவில்லை. இந்தக் கோரவிபத்தில் தன்னுடன் சேர்ந்து உயிர் தப்பிய மனைவி கோமதி, மகன் சச்சின் […]