விருதுநகர்

johnhatton61986 01/09/2016

விருதுநகரில் 9–ம் வகுப்பு மாணவன் அவனது அண்ணன் கண் எதிரே வாகனம் மோதி பலியானான். 9–ம் வகுப்பு மாணவன் விருதுநகர் அருகேயுள்ள கருப்பம்பட்டியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் நாகராஜன்(வயது 14). இவன் விருதுநகர் டி.டி.கே. சாலையில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தான். இவனது அண்ணன் மாரிமுத்து(17). பாலிடெக்னிக் மாணவரான இவர் தினசரி விருதுநகர் பை–பாஸ் ரோட்டில் அதிகாலையில் ஓட்டப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அப்போது நாகராஜனும் ஓட்டப்பயிற்சி மேற்கொள்ளும் அண்ணனுக்கு பின்னால் […]

johnhatton61986 25/08/2016

விருதுநகரில் 2 பெண்களிடம் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாகக் கூறி ரூ.40 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மோசடி விருதுநகர் அய்யனார்நகரை சேர்ந்தவர் ஆனந்தி (வயது 29). இவர் நேற்று விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதற்காக வந்தார். அவருக்கு ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க தெரியாததால், அருகில் நின்று கொண்டிருந்த வாலிபரிடம் கார்டை கொடுத்து பணம் எடுத்துத் தருமாறு கூறிவிட்டு […]

jefferywinneke 11/07/2016

ராணுவத்தில் தமிழகப் பிரிவுக்கு 2 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. இதில், சேரும் இளைஞர்களுக்கு மாத ஊதியமாக ரூ.35 ஆயிரம் வரை கிடைக்கும் என தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி, அந்தமான்-நிக்கோபார் மாநிலங்களுக்கான ராணுவ ஆள்சேர்ப்புப் பிரிவின் துணை இயக்குநர் ஜெனரல் எஸ்.என்.தால்வி தெரிவித்தார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களுக்கான ஆள் சேர்ப்பு முகாம் திருவண்ணாமலையில் ஆகஸ்ட் 19 முதல் 31 வரையில் முகாம் நடைபெறுகிறது. பெரம்பலூர், அரியலூர், […]

jefferywinneke 07/07/2016

சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. திருச்சி-சென்னை ரயில் எண் 06024: ஜூலை 9-இல் திருச்சியில் இருந்து பிற்பகல் 3.35 மணிக்குப் புறப்பட்டு, இரவு 9 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். ரயில் எண் 06023: ஜூலை 13-இல் எழும்பூரில் இருந்து காலை 8.30 மணிக்குப் புறப்பட்டு, பிற்பகல் 2 மணிக்கு திருச்சி சென்றடையும். இந்த ரயில் அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சென்னை-திருநெல்வேலி […]

angusam 30/11/2015

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தீபாவளி முதல் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர் கனமழை பெய்தது. தமிழகத்தில் தீபாவளி முதல் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர் கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. கடந்த சில நாட்களாக மழை குறைந்ததால் பள்ளி, கல்லூரிகள் சுமார் 19 நாட்களுக்கு பின் […]

angusam 15/11/2015

விருதுநகரில் மழைக்கு அரசு பஸ் ஒழுகியதால் டிரைவருக்கு, கண்டக்டர் மற்றும் பயணிகள் மாறி மாறி குடை பிடித்த கொடுமையான காட்சி இன்று அரங்கேறியது. தனியார் பஸ்கள் அனைத்தும் நவீனமாக ஓடும் நிலையில், தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களில் 70 சதவீத பஸ்கள் ஓட்டை, உடைசலாக உள்ளன. திருநெல்வேலி கோட்டத்தைச் சேர்ந்த அரசு பஸ் கேரளா மாநிலம் சென்றபோது பெண் பயணி பஸ்சில் இருந்த ஓட்டையில் இருந்து கீழே விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த நிலையில், விருதுநகரில் […]