விஷால்

johnhatton61986 11/08/2016

விஷால், வரலட்சுமி இருவரும் காதலிக்கிறார்கள் என்று செய்திகள் மட்டும் வந்துகொண்டிருக்கிறது. ஆனால் இதுகுறித்து விஷால், வரலட்சுமி இதுவரை பேசியதே இல்லை. இந்நிலையில் ஒரு பேட்டியில் விஷால், வரலட்சுமி என்னுடைய பள்ளித்தோழி. எங்கள் திருமணம் நடிகர் சங்க கட்டடத்தில் தான் நடக்கும். கார்த்தியிடம் டேட்டுக்கு இப்போதே சொல்லி விட்டேன் என்று விஷால் கூறியிருப்பதாக ஒரு முன்னணி தளத்தில் கூறியுள்ளனர்.

johnhatton61986 04/08/2016

விக்ரம், விஜய் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இவர்கள் இருவருமே அடுத்தடுத்து தயாரிப்பாளர் சிபு தமின்ஸ் தயாரித்த படத்தில் நடித்தனர். இதில் புலி தோல்வியடைந்தாலும், இருமுகனை மிகவும் நம்பியுள்ளார் சிபு, இந்நிலையில் அடுத்து இவர் தயாரிக்கப்போவது விஷால் படத்தை தானாம். இந்த படத்திற்கு யார் இயக்குனர், நடிகர், நடிகை, டெக்னிஷியன் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

angusam 05/03/2016

நடிகர் விமலின் “மாப்பிள்ளை சிங்கம்’’வெள்ளித்திரைக்கு முன்னமே இணைய தளத்தில் லீக் ஆகி அவருடைய எதிர் காலத்தையே கேள்விக்குறியாக்கிவிட்டது. நடிகர் விமல் நடிக்கும் படம். எழுத்தாளர் டான் அசோக் கதை-வசனத்தில், மதன் தயாரிப்பில், என்.ராஜசேகர் இயக்கத்தில் வெளிவரப்போகும் படம் “மாப்பிள்ளை சிங்கம்.’ 2014-ல் பூஜை போட்டு 2016 மார்ச் 11-ஆம் தேதி வெளிவர தேதி குறித்திருக் கிறார்கள். விமல் நீண்ட நாட்களுக்குப் பிறகு அஞ்சலியுடன் நடித்து வெளிவர தயாராக இருக்கும் படம். இந்த படத்தில் அனிருத், சிவகார்த்தி கேயன் […]

angusam 19/12/2015

பீப் பாடல் தவறானது என்று கூறியுள்ள சரத்குமார், இந்த விவகாரத்தில் நடிகர் சங்கம் ஏன் தலையிடவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். சிம்பு பாடிய பாடல் ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியானது. பீப் பாடல் என்கிற பெயரில் வெளியான அந்தப் பாடல் ஆபாச அர்த்தங்களுடன் இருந்ததால், கடும் எதிர்ப்பைச் சம்பாதித்தது. சிம்பு, அனிருத் மீது வழக்குகள் பாய்ந்துள்ளன. இது குறித்து விளக்கம் அளிக்குமாறு இருவருக்கும் கோவை போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், […]

angusam 17/11/2015

இயக்குனர் பாலா, ’சேது’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படத்திலேயே பலரின் கவனத்தை ஈர்த்தவர். அதன் பின், ’நந்தா’, ‘பிதாமகன்’, ‘நான் கடவுள்’ போன்ற முக்கியமான படங்களை இயக்கினார். நான் கடவுள் படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்றார். அதிலிருந்து பாலாவின் படங்கள் என்றாலே மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால், அதர்வா போன்ற நாயகர்கள் அனைவருமே இவருடைய பட்டறையில் இருந்து தான் பெரிய நாயகர்களாக வளர்ந்திருக்கிறார்கள். தற்போது […]

angusam 17/11/2015

தீபாவளிக்கு அடுத்து தமிழ் திரையுலகின் கொண்டாட்டமான திருவிழா, பொங்கல். பொங்கல் அன்று வழக்கமாக பெரிய படங்கள் இரண்டு மூன்றாவது வெளியாகும். இந்தமுறை பொங்கல் ரேஸில் விஷால், ஜெயம் ரவியின் படங்கள் இணைந்துள்ளன. பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம், கதகளி. ஆக்ஷ்ன் படமாக தயாராகியிருக்கும் இப்படம், இறுதிகட்டத்தில் உள்ளது. பொங்கலுக்கு கதகளியை வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதேபோல் ஜெயம் ரவியின் மிருதன் படத்தையும் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர். அத்துடன் சூர்யாவின் 24, பாலாவின் தாரை தப்பட்டை, சுந்தர் சி.யின் […]

angusam 16/11/2015

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடன் நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் நேரில் சந்தித்து பேசி நன்றி தெரிவித்தனர். நடிகர் சங்கத்திற்கு கடந்த அக்டோபர் 18ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் சரத்குமார் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான அணியும் மோதின. இதில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. விஷால் பொதுச்செயலாளராகவும், கார்த்தி பொருளாளராகவும், பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் துணைத்தலைவர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற உடனேயே முதல்வர் ஜெயலலிதாவிற்கு […]

angusam 06/11/2015

நடிகர் விஷாலின் உருவபொம்மை எரித்த 50 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கையான தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை உதாசீனப்படுத்தி பேசியதற்கு நடிகர் விஷால் மன்னிப்பு கேட்க வேண்டும், மேலும், உடனடியாக தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும், காவிரி நதி நீர் பிரசனைக்கு தென்னிந்திய […]

angusam 18/10/2015

”தென்னிந்திய நடிகர் சங்கப் பெயரை ”தமிழ்நாடு நடிகர் சங்கம்” என மாற்றுங்கள்!” – ரஜினிகாந்த் இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், முதல் வேலையாக தென்னிந்திய நடிகர்கள் சங்கம் என்பதை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்றுங்கள் என்று ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். நடிகர் சங்கத் தேர்தலில் காலையிலேயே வாக்களித்த ரஜினிகாந்த், நடிகர் சங்கத்தினருக்கு சில அறிவுரைகளை வழங்கினார். அதில், அனைவருக்கும் வணக்கம். நடிகர்கள் ஒரே குடும்பம், ஒரே இனம், ஒரே ஜாதி… தேர்தலில் யார் வென்றாலும் […]

angusam 18/10/2015

”தென்னிந்திய நடிகர் சங்கப் பெயரை ”தமிழ்நாடு நடிகர் சங்கம்” என மாற்றுங்கள்!” – ரஜினிகாந்த் இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், முதல் வேலையாக தென்னிந்திய நடிகர்கள் சங்கம் என்பதை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்றுங்கள் என்று ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். நடிகர் சங்கத் தேர்தலில் காலையிலேயே வாக்களித்த ரஜினிகாந்த், நடிகர் சங்கத்தினருக்கு சில அறிவுரைகளை வழங்கினார். அதில், அனைவருக்கும் வணக்கம். நடிகர்கள் ஒரே குடும்பம், ஒரே இனம், ஒரே ஜாதி… தேர்தலில் யார் வென்றாலும் […]

angusam 15/10/2015

நடிகர் சங்க தேர்தலில், நாடக நடிகர்கள் 934 பேர் தபாலில் வாக்களித்துள்ளனர்.நடிகர் சங்க தேர்தல்தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் சரத்குமார் அணியும், விஷால் அணியும் மோதுகின்றன. இரு அணி சார்பிலும் தலைவர், பொதுச்செயலாளர், 2 துணைத்தலைவர்கள், ஒரு பொருளாளர் மற்றும் 24 செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 58 பேர் போட்டியிடுகின்றனர். ஒரு சுயேட்சை வேட்பாளர் தலைவர் பதவிக்கும் பொதுச்செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார். இன்னொரு சுயேட்சை வேட்பாளர் துணைத்தலைவர் பதவிக்கு […]