action

johnhatton61986 07/08/2016

விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கிய ‘சாமி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மிக விரைவில் தொடங்கவுள்ளதாக ‘இருமுகன்’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஹரி அறிவித்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் ‘சாமி’ படத்திற்கும் ‘சாமி 2′ படத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.’சாமி’ படத்தில் விக்ரம், ஆறுச்சாமி’ என்ற நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். திருநெல்வேலி நகரமே ஆறுச்சாமியின் அதிரடி நடவடிக்கையால் முற்றிலும் மாறியிருக்கும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில் […]

johnhatton61986 31/07/2016

கருணாநிதியுடன் கலந்து பேசிய பின்னர் அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பா மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா கூறினார். திருச்சி சிவா டெல்லி விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவை, அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பா கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திருச்சி சிவா  காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– […]

johnhatton61986 30/07/2016

கபாலி படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் பெரிய பிரச்சனை எழும்பியுள்ளது. அதாவது தேசிய விருதுகளை பெறுபவர்கள் அந்தப் பட்டங்களை திரைப்பட விளம்பரத்திலோ, படங்களின் டைட்டிலிலோ பயன்படுத்தவே கூடாது என்று சட்டம் இருக்கிறது. ஆனால் ரஜினியின் கபாலி படத்தின் டைட்டில் கார்டில் பத்ம விபூஷண் ரஜினி என்று இருக்கிறது. இதனை எதிர்த்து தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரஷின வேதிகே அமைப்பு இதுகுறித்து சென்சார் போர்டிடம் புகார் தெரிவித்துள்ளார்கள். தேசிய விருதை அவமதித்ததற்காக அதைப் பயன்படுத்தியவர்கள் […]

johnhatton61986 28/07/2016

மதுராந்தகம் சர்க்கரை ஆலையில் பாம்புகளை பிடித்த 8 பேரை கைது செய்த கிண்டி வனத்துறையினர், அவர்களிடம் இருந்து 360 பாம்புகளை பறிமுதல் செய்தனர். பாம்புகள் பிடிபட்டன காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே படாளத்தில் உள்ள மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஏராளமான பாம்புகள் நடமாடுவதாக ஊழியர்கள் புகார் கூறினர். இதையடுத்து ஆலை நிர்வாகம் சார்பில் பாம்பு பிடிப்பவர்களை அழைத்து வந்து சர்க்கரை ஆலையில் இருந்து ஏராளமான பாம்புகளை பிடித்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் சென்னை வனஉயிரின […]

angusam 13/06/2016

சட்டசபை தேர்தலில் கிடைத்த அனுபவங்கள் அடிப்படையில், கள ஆய்வு நடத்தி, அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என, லட்சிய இந்தியா கட்சியின் தலைமை வழிகாட்டி பொன்ராஜ் கூறினார். அவர் அளித்த பேட்டி: தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட பா.ம.க., 700 கோடி ரூபாய் வரை செலவு செய்தது. ஆனால், அக்கட்சி வேட்பாளர்கள் அதிகபட்சமாக, 5,000 ஓட்டுகள் தான் பெற்றனர். தேசிய கட்சியான பா.ஜ., 125 கோடி ரூபாய் செலவு செய்தது. அக்கட்சி வேட்பாளர்கள், தொகுதிக்கு, 3,000 ஓட்டுகளைத் […]

angusam 01/03/2016

மாணவியரை தொட்டு சோதிக்காதீங்க! தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவு பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும், 4ல் துவங்குகிறது. 2,420 தேர்வு மையங்களில், ஒன்பது லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வின் போது, 30 ஆயிரம் ஆசிரியர்கள், 5,000 அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு, கல்வித்துறை சார்பில் சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன; அதன் விவரம் வருமாறு: மாணவியர் உள்ள தேர்வு அறைகளில், […]

angusam 19/02/2016

ஹாலிவுட்டில் Resident evil, Warm Bodies , Dawn of the dead எண்ண முடியாத அளவிற்கு சோம்பி வகை படங்கள் வந்து விட்டது. முதலில் சோம்பி என்றால் என்ன? வேறு ஒன்றும் இல்லை, ஊரில் எங்காவது ஒரு வைரஸ் பரவும், அந்த வைரஸ் ஒருவர் உடலுக்கு புகுந்துவிட்டால், மிருக குணம் வந்து அனைவரையும் கடித்து கொன்றுவிடுவோம். இது தான் சோம்பி கான்செப்ட். இவை பாலிவுட்டில் கூட சையிப் அலிகான் நடிப்பில் go goa gone என்று […]

angusam 27/01/2016

அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அ.தி.மு.க.வைச் சேர்ந்த பழ.கருப்பையா துறைமுகம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இந்நிலையில், அவரை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பழ.கருப்பையா நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், பழ.கருப்பையா கட்சியின் கொள்கை-குறிக்கோள், கோட்பாட்டிற்கு முரணான வகையில் பழ.கருப்பையா செயல்பட்டதால் அவர் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில், ஆளும் அ.தி.மு.க. அமைச்சர்கள் அவதூறாக பேசியதால் பழ.கருப்பையா […]