admk

angusam 28/01/2016

அதிமுகவிற்கு எதிராக விமர்சனம் செய்ய சொல்லி வற்புறுத்தியதாக கூறுவது அப்பட்டமான பொய் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். நேற்று சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எர்ணாவூர் நாராயணன் சரத்குமார் அதிமுகவிற்கு எதிராக விமர்சனம் செய்ய சொல்லி வற்புறுத்தியதாக சரத்குமார் மீது குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் இன்று சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை கைப்பற்ற சதி நடப்பதாக குற்றம் சாட்டியதுடன், சென்னை தியாகராய நகரில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி அலுவலகத்தில் அக் […]

johnhatton61986 02/01/2016

அதிமுக துணை கொள்கைப் பரப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து நாஞ்சில் சம்பத் விடுவிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இன்று காலை புதிய தலைமுறை டிவி சேனலில் இன்று ஒளிபரப்பான அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் பேட்டியளித்திருந்த நாஞ்சில் சம்பத் அதிமுக மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு பக்கபலம் சேர்க்கும் வகையில் கருத்துகளைக் கூறியிருந்தார். அதில், சென்னை வெள்ளம் குறித்த கேள்விக்கு, மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியாச்சு. வெள்ள பாதிப்பு என்று ஒன்றும் கிடையாது. அதெல்லாம் 2015. இப்போது […]

angusam 31/12/2015

சென்னை திருவான்மியூரில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா ஸ்டாலினின் நமக்கு நாமே பயணம் குறித்த குட்டிக்கதை ஒன்றை கூறினார். அந்த கதை, ஒரு கிராமத்தில் ஒரு பண்ணையார் வீடு. அந்த பெரிய வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்தான் ஒரு திருடன். வீட்டிற்குள் எல்லா இடங்களிலும் காவலுக்கு ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள். இந்த வீட்டில் திருட முடியாது என்று நினைத்த திருடன் மெதுவாக வந்த வழியே திரும்ப […]

angusam 29/11/2015

திருச்சி ஜீயபுரம் கடைவீதியில் பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் மீது குடி போதையில் கொலைவெறி தாக்குதல் நடத்திய திருச்சி ஆவின் தலைவர் அயிலை பழனியாண்டி மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள். கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகில் உள்ள திம்மாச்சிபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் சதீஷ்குமார்(வயது 31). இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து காரில் திருச்சி நோக்கி தனது நண்பருடன் சென்று கொண்டிருந்தார். காரை சதீஷ்குமார் […]

angusam 27/11/2015

தே.மு.தி.க.வினர் ஊர்வலம் சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் நேற்று காலை மழை வெள்ளத்தால் ரேஷன் கார்டுகளை இழந்தவர்களுக்கு ரேஷன் கார்டு நகல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக மண்டல அலுவலக வாசலில் அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் நின்று கொண்டு இருந்தனர். அப்போது ஆலந்தூரில் மழையால் தண்ணீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மண்டல அலுவலரிடம் மனு கொடுப்பதற்காக தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ஏ.எம்.காமராஜ் தலைமையில் பகுதி செயலாளர் நாராயணன் உள்பட […]

tomscratch20042007 22/11/2015

அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் முதலமைச்சர் ஜெயலலிதா நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் புதிய நிர்வாகிகள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக முதலமைச்சர் ஜெயலலிதா நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக, கழக சட்ட திட்ட விதிமுறைகளின்படி, கழகத்தின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களால், தான் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகளாக இ. […]

angusam 16/11/2015

முத்தரையர் சமூகத்தை இழிவாக பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்காததால் வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்கப்போவதில்லை என்றும் அக்கட்சியை தோற்கடிப்போம் எனவும் முத்தரையர் சமூகத்தினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றிய தலைவர் கெங்கையம்மாள், அவரது கணவரும் கருப்பட்டிப்பட்டி ஊராட்சி தலைவருமான சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கடந்த மாதம் 25-ந் தேதி விராலிமலையில் உள்ள சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். தங்களது பகுதியில் தாய்சேய் நல விடுதி அமைக்க விஜயபாஸ்கரிடம் கோரிக்கை […]

angusam 07/11/2015

கேரள மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் இடுக்கி மாவட்டம் பீர்மேடு 1 வது வார்டில் போட்டியிட்ட அஇஅதிமுக வேட்பாளர் பிரவீணா 172 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடைந்தார் . பதிவான வாக்குகள் 813 ADMK : 416 கம்யூனிஸ்ட் வேட்பாளர் மாலதி பெற்ற வாக்குகள் : 243 காங்கிரஸ் வேட்பாளர் பிரதீபா பெற்ற வாக்குகள் 154 கேரள மாநில உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் 6 பேர் வெற்றி பெற்றிருப்பது அதிமுக வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் […]

angusam 06/11/2015

அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று தமிழக பாஜகவின் மேலிட பார்வையாளர் முரளிதரராவ் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி சேரக் கூடாது என்பது எங்கள் நிலைப்பாடு அல்ல, ஆனால், அதிமுகவுடன் கூட்டணி இல்லை. பாமகவும், தேமுதிகவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து முழுமையாக விலகி செல்லவில்லை. ஆனால், அவர்கள் விடுக்கும் அறிக்கையை வைத்து அவர்களின் நிலைப்பாட்டை கணிக்க முடியவில்லை. எப்போதுமே எதிர்மறையான கொள்கையுடன் அறிக்கை வெளியிடுகிறார்கள். அதைவைத்து இறுதி முடிவு எடுத்துவிட […]

angusam 07/10/2015

அமைச்சர் பதவி பறிபோனாலும்  தனக்காவது தனது ஆதரவாளர்களுக்காவது  மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என நம்பிக்கையோடு காத்திருந்த செந்தில்பாலாஜிக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.புதிய கரூர் மாவட்ட, அ.தி.மு.க., செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் எம்.ஆர். விஜயபாஸ்கர். அமைச்சராக செந்தில்பாலாஜி வலம் வந்த கடந்த ஏப்ரல் மாதம் கரூர் மாவட்ட செயலாளர் பதவி மற்றும் பொறுப்பாளர்கள் பதவிக்கான வேட்பு மனுக்கள்  பெறப்பட்டது. அப்போது மாவட்ட செயலாளராக இருந்த செந்தில்பாலாஜியை எதிர்த்து, இளம்பெண்கள் பாசறை முன்னாள் செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் மாவட்ட செயலாளர் சாகுல் […]

angusam 23/09/2015

சுறுப்பாக விடியல் மீட்பு பயணத்தில் வலம் வரும் ஸ்டாலின் – பதிலடி கொடுக்க தயாராகும் அதிமுக 2016 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதற்கு அச்சாரமாக அனைத்து கட்சிகளும் இப்போது கோதாவில் இறங்கிவிட்டார்கள். அதில் முதன்முதலாக  திமுக பொருளாளர் ஸ்டாலின்  தமிழகத்தின் பலபகுதிகளிலும் பேரணி பொதுக்கூட்டங்கள் நடத்தினார். இதில் கடைசியாக கடந்த நான்கு நாட்களாக `நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் எனும் பெயரில் கன்னியக்குமரியில் பயணம் தொடக்கியுள்ளார். கன்னியாக்குமாரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆட்டோவில் போவது, ஸ்கூட்டரில் போவது, டீக்கடையில் […]