bus

johnhatton61986 02/09/2016

ஈரோடு அருகே உள்ள குமாரபாளையம் காளி அண்ணாநகரைச் சேர்ந்தவர் கேசவன். இவருடைய மகன் மாரியப்பன் (வயது 36). வியாபாரி. நேற்று இவரும், அதே பகுதியைச் சேர்ந்த காமராஜ் (50) என்பவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் பழனியில் சண்முகநதி பாலத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது தூத்துக்குடியிலிருந்து கோவை நோக்கி சென்ற அரசு பஸ் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த காமராஜை சிகிச்சைக்காக பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். […]

johnhatton61986 01/09/2016

ஆட்டோ மீது தனியார் கல்லூரி பஸ் மோதியதில் ஆட்டோவில் சென்ற 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்து போனார்கள். பட்டு சங்கம் காஞ்சீபுரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் காஞ்சி வரதராஜப் பெருமாள் கூட்டுறவு பட்டு சங்கத்தின் கிளை, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செயல்படுகிறது. இங்கு கணக்கு தணிக்கை செய்வதற்காக சங்கத்தின் தலைவரான காஞ்சீபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது 56) நேற்று சிவகாசி வந்தார். அவருடன் சங்க ஊழியர் தாமோதரன்(57), விற்பனையாளர் சீனிவாசன்(47) ஆகியோரும் வந்திருந்தனர். கணக்கு […]

johnhatton61986 29/08/2016

மோட்டார் சைக்கிளில் சென்றபோது அரசு பஸ் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். வாலிபர்கள் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மேலபச்சேரி பகுதியை சேர்ந்தவர் சந்திரன் மகன் காளிதாஸ்(வயது 27). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். திருப்பரங்குன்றம் கூடல்மலை தெரு முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் கார்த்திக்(25). அரசு பஸ் மோதல் இவர்கள் இருவரும், நேற்று மோட்டார் சைக்கிளில் திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதை வழியாக நிலையூர் கைத்தறிநகருக்கு சென்று […]

jefferywinneke 13/08/2016

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் வெள்ளிக்கிழணை காலை நடந்த சாலை விபத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 20 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில், வளநாடு கைகாட்டி என்ற இடத்தில் திருச்சியை நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, தனக்கு முன்னால் ஆட்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது மோதியது. இதில் சரக்கு வாகனம் நொறுங்கி, சாலையோரமாக உருண்டது. இந்த விபத்தில் அந்த சரக்கு வாகனத்தில் பயணம் […]

johnhatton61986 10/08/2016

அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். பஸ்சில் நடனம் சென்னை கோயம்பேட்டில் இருந்து கடலூருக்கு அரசு பஸ் ஒன்று சென்றது. பஸ்சை முஸ்தபா என்பவர் ஓட்டிச்சென்றார். அந்த பஸ் திருவான்மியூர் பஸ் நிலையத்திற்கு சென்றபோது, அங்கு 5 வாலிபர்கள் புதுச்சேரிக்கு செல்வதற்காக ஏறினார்கள். பின்னர் அவர்கள் 5 பேரும் பஸ்சில் சத்தம் போட்டு நடனமாடிக் கொண்டு சென்றனர். இதற்கு பஸ்சில் […]

johnhatton61986 08/08/2016

அறந்தாங்கியில் இருந்து ஒரு டவுன்பஸ் சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூருக்கு சென்றுவிட்டு அறந்தாங்கிக்கு பயணிகளை ஏற்றி கொண்டு வந்து கொண்டிருந்தது. பஸ்சை குளமங்கலத்தை சேர்ந்த செல்வம் (வயது38). என்பவர் ஓட்டியுள்ளார். பஸ் ஆளப்பிறந்தான் அருகே வந்தபோது, பஸ் டிவைரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருக்கும் புளியமரத்தில் மோதியது.  இதில் பஸ்சின் முன்பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் தஞ்சாவூர் மாவட்டம் பூக்கொல்லையை சேர்ந்த பாண்டியம்மாள்(49), பேராவூரணியை சேர்ந்த உலகம்மாள்(50), புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தை சேர்ந்த கலைச்செல்வி(28), ஆளப்பிறந்தானை சேர்ந்த […]

johnhatton61986 31/07/2016

மதுரையில் இருந்து நெல்லைக்கு அரசு பஸ் நேற்று மாலையில் புறப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த மாயி மகன் ஜெயக்கொடி (வயது 35) என்பவர் பஸ்சை ஓட்டிச் சென்றார். பஸ்சில் 50–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். மாலை 5 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பைபாஸ் ரோடு வழியாக பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது கடம்பூரில் இருந்து கயத்தாறு வழியாக கங்கை கொண்டான் சிப்காட் பகுதிக்கு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி கயத்தாறு இணைப்பு […]

johnhatton61986 19/07/2016

தமிழகத்தில் 31.11 லட்சம் மாணவ-மாணவியருக்கு கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை அட்டை (இலவச பஸ் பாஸ்) வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார். பள்ளி மாணவ-மாணவிகளின் கல்வி மேம்பாட்டுக்காகவும், குழந்தைகள் இடைநிற்றல் இன்றி கல்வி கற்கும் வகையிலும் சத்தான உணவு, விலையில்லா சீருடைகள், மடிக்கணினிகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், மிதிவண்டிகள் போன்ற திட்டங்களை தமிழக அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. இதன்படி, நிகழாண்டில் அனைத்து பள்ளிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளிகள், அரசு […]

jefferywinneke 28/06/2016

சிக்னலில் இருந்து அவசரத்தில் இருசக்கர வாகனத்தில் கடந்து சென்றவர்கள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலி திருச்சி சஞ்சீவி நகர் பகுதியை சேர்ந்தவர் வெஸ்லிகாந்த் (32) மற்றும் அவரது அக்காவின் கணவர் ரவி(40). இருவரும் சஞ்சீவிநகர் பகுதியில் இருந்து வெஸ்லிகாந்தின் அம்மாவிற்க்கு 17ஆம் ஆண்டு நினைவு அஞ்சலியை அனுசரிக்க புத்தூர் மார்கெட்டில் உணவிற்க்கு தேவையான கறி, மீன் உள்ளிட்டவற்றை வாங்கி கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்த நிலையில் ஜங்சனில் இருந்து சத்திரம் நோக்கி சென்ற […]

tomscratch20042007 19/12/2015

வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மாரடைப்பால் மரணமடைந்தவரின் சடலத்தை ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும் போது இருங்காட்டுக்கோட்டை பகுதியில் தனியார் நிறுவனத்தின் பேருந்து மீது ஆம்புலன்ஸ் மோதியதில் மூவர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். ஸ்ரீபெரும்புதூர் ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(55). தொழிலதிபரான ராஜேந்திரன், ரியல் எஸ்டேட் மற்றும் பைனாஸ்சியராக செயல்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ராஜேந்திரனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மார்பு வலியால் துடித்துள்ளார். இதையடுத்து ராஜேந்திரனின் மனைவி விஜயலட்சுமி, மகன் சத்தியநாராயணா ஆகியோர் தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் மூலமாக […]

angusam 14/12/2015

இந்தியாவின் முதல் பெண் டிரைவருக்கு நேர்ந்த அநீதி ஆசியாவிலேயே முதல் பெண் வாகன ஓட்டுநர் வசந்தகுமாரியை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. தமிழகத்துக்கு மட்டுமல்ல; இந்தியாவுக்கே பெருமை தேடித் தந்த வசந்தகுமாரியை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடியது எல்லாம் ஒரு காலம். ஆனால், இன்றைக்கு? அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக 23 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த வசந்தகுமாரிக்கு இப்போது ஓட்டுவதற்கு பஸ் தராமல் டார்ச்சர் கொடுக்கிறார்கள். சம்பளம் இன்றி கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருக்கிறார் அந்தப் புதுமைப்பெண் வசந்தகுமாரி. […]

samaraiqi4273 25/11/2015

தமிழகத்திலேயே அதிகளவில் நகர பேருந்துகள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது திருச்சியில் மட்டும் தான். தற்போது  இங்குள்ள தனியார் பேருந்துகள் தினமும் அரசு பேருந்துகளை விட அதிகளவில் வருமானம் ஈட்ட வேண்டும் என்ற தனியார் பேருந்து முதலாளிகளின் கட்டளையின் அடிப்படையில் இயங்கி வருகிறது. இதில் முக்கிய பங்கு காவல்துறைக்கும் உண்டு காரணம் ஒவ்வொரு முதலாளிகளும் அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்பதால் தனியார் பேருந்துகளை கட்டுப்படுத்துவதில் போக்குவரத்து காவல்துறை தவறி விடுகின்றன. அதிலும் நகரத்திற்க்குள் பேருந்து குறைவான வேகத்தில் செல்ல […]

angusam 15/11/2015

விருதுநகரில் மழைக்கு அரசு பஸ் ஒழுகியதால் டிரைவருக்கு, கண்டக்டர் மற்றும் பயணிகள் மாறி மாறி குடை பிடித்த கொடுமையான காட்சி இன்று அரங்கேறியது. தனியார் பஸ்கள் அனைத்தும் நவீனமாக ஓடும் நிலையில், தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களில் 70 சதவீத பஸ்கள் ஓட்டை, உடைசலாக உள்ளன. திருநெல்வேலி கோட்டத்தைச் சேர்ந்த அரசு பஸ் கேரளா மாநிலம் சென்றபோது பெண் பயணி பஸ்சில் இருந்த ஓட்டையில் இருந்து கீழே விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த நிலையில், விருதுநகரில் […]