jayalalitha

angusam 05/01/2016

மழை, வெள்ளத்திலிருந்து மக்களை காப்பாற்றக் கூடிய வழி இருந்தும், காப்பாற்றக் கூடிய பொறுப்பு இருந்தும், அந்தப் பொறுப்புகளை நிறைவேற்றாத அதிமுக ஆட்சியை உடனடியாக அகற்ற வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களுக்கு வலியுறுத்தினார். செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரம் நீதி விசாரணை கோரி சென்னை சேப்பாக்கத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கருணாநிதி பேசும்போது, “தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி எப்போது நடைபெற்றாலும், அப்போதெல்லாம் எத்தகைய கேடுகள், தீமைகள், வெள்ளப் பாழ்கள், […]

angusam 03/01/2016

நான் கேட்கிறேன், என் கட்சிக்காரர் அப்படி என்ன தவறு செய்தார்?”. அப்புடி என்ன தாங்க தப்பு பண்ணாரு?. அம்மா நெனச்சத சொன்னாரு நம்ம அண்ணன் நாஞ்சில் சம்பத்து. அதுல்ல என்ன தப்பு?. இப்பவா சொன்னாரு? அப்பவே சொல்லிட்டாரு. அதுக்கு இப்படியா? ” எறும்புகள் சாகிறது என்பதற்காக யானை நடக்காமல் இருக்க முடியுமா ?”. இந்த பதிலில் என்ன தப்பு கண்டு பிடிச்சீங்க?. மக்களை எறும்புன்னு சொன்னது தப்பா?. அவங்களை யானைன்னு சொன்னது தப்பா? இது போல பதிலை […]

angusam 31/12/2015

சென்னை திருவான்மியூரில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா ஸ்டாலினின் நமக்கு நாமே பயணம் குறித்த குட்டிக்கதை ஒன்றை கூறினார். அந்த கதை, ஒரு கிராமத்தில் ஒரு பண்ணையார் வீடு. அந்த பெரிய வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்தான் ஒரு திருடன். வீட்டிற்குள் எல்லா இடங்களிலும் காவலுக்கு ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள். இந்த வீட்டில் திருட முடியாது என்று நினைத்த திருடன் மெதுவாக வந்த வழியே திரும்ப […]

angusam 28/12/2015

வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்டபகுதிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தஞ்சாவூர் ரயிலடியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு விஜயகாந்த் பேசியபோது, டெல்டா மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் தூர் வாரப் படாததால்தான், மழை நீர் வீணாக கடலில் சென்று கலக்கும் நிலை உருவாகியுள்ளது. டெல்டா பகுதி விவசாயிகளை அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது.  டெல்டா மாவட்ட விவசாயிகளை அதிமுக […]

angusam 16/12/2015

தம்மை இயேசுநாதராகவே நினைத்துக் கொண்டு வசனங்களை வாரி இறைத்திருக்கிறார் ஜெயலலிதா என்றும்,  இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் இப்படியே வசனம் பேசியும், கிளிசரின் போடாமல் கண்ணீர் வடித்தும் மக்களை ஏமாற்றி விடலாம் என ஜெயலலிதா நினைத்துக் கொண்டிருக்கிறார் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்  காட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சென்னை மற்றும் புறநகர் பகுதிகளையும், கடலூர் மாவட்டத்தையும் மூழ்கடித்த மழை வெள்ளத்தில் சிக்கி அனைத்தையும் இழந்து மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் […]

angusam 08/12/2015

ஆதித்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் ஆ.நாகராசன் வெளியிட்டுள்ள சென்னை மழை  குறித்த  அறிக்கை ஒன்று  இணையத்தில் உலாவருகிறது. மழை வெள்ள பாதிப்புக்குள்ளான சென்னையை மீட்க வர்ணசாதி முறையில் நடவடிக்கை மேற்கொள்ளும் தமிழக அரசின் சாதிய ஆணவப்போக்கை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது. கடந்த 8.11.2015 முதல் தமிழகத்தில் தொடங்கிய கனமழை மூன்று கட்டங்களாக சென்னை, கடலூர் டெல்டா உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கொட்டித் தீர்த்ததன் விளைவாக, இன்று தமிழகமே, நிலைகுலைந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உயிர்கள் சிலவற்றையும், உடைமைகள் பலவற்றையும் […]

angusam 04/12/2015

நிருபருக்கே பதில் சொல்ல திராணியற்ற இவர்களா! தமிழக மக்களுக்கு பதில்சொல்ல போகிறார்கள் : விஜயகாந்த் முதலமைச்சர் ஜெயலலிதா இரண்டு மணிநேரம்  ஹெலிகாப்டரில் வெள்ள சேதத்தை பார்வை யிட்டது குறித்து  தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை: ’’சென்னையில் பெய்த கனமழையால் ஏழை, பணக்காரன், குடிசைவீடு, மாடிவீடு என எவ்வித வேறுபாடும் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் வீடுகளை இழந்து முகாம்களிலும், சாலைகளிலும் நிர்க்கதியாக நிற்கிறார்கள். பலபேர் அவரவர் வீடுகளில் வீட்டுச்சிறையில் இருப்பதைப் போன்ற நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. […]

tomscratch20042007 01/12/2015

பள்ளிக்கூட அரையாண்டு தேர்வுகளை ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இது தொடர்பாக, தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாகவே அனைத்து துறை அதிகாரிகளும் எனது ஆணையின் பேரில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். எனினும், ஒரு சில தினங்களில் மிக அதிக அளவு மழைப் பொழிவு ஏற்பட்டதால், சில மாவட்டங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் நிவாரணம் […]

tomscratch20042007 30/11/2015

அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சியை 20-வது இடத்திற்கு பின்னோக்கி கொண்டு சென்றது தான் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கடந்த காலங்களில் தமக்கு சாதகமான ஆய்வுகள் ஊடகங்களில் வெளியான போதெல்லாம் சட்டமன்றத்தில் பெருமை பேசியவர் ஜெயலலிதா என்று கூறியுள்ளார். ஆனால் தமிழகம் அனைத்து துறைகளிலும் பின்தங்கி உள்ளதாக தற்போது வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகளை அவர் ஏற்க மறுப்பது ஏன் என்று விஜயகாந்த கேள்வி எழுப்பியுள்ளார். துறைவாரியான ஆய்வில் […]

angusam 26/11/2015

   ஈரோடு மாவட்டம் பவானி அதிமுக எம்எல்ஏ நாராயணனால் பாதிக்கப்பட்டவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வேன் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஈரோடு மாவட்டம் பவானி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் வாசுதேவன். இவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், பவானி  அண்ணாநகரில் எனக்கு சொந்தமான வீடு மற்றும் ஜமக்காள பேக்டரி விரிவாக்கத்திற்கு பணம் தேவைப்பட்டதால் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் கடந்த […]

angusam 23/11/2015

அதிமுக நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் அதிமுக எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக எம்பிக்களுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வரும் 26 ந்தேதி தொடங்க […]

tomscratch20042007 22/11/2015

அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் முதலமைச்சர் ஜெயலலிதா நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் புதிய நிர்வாகிகள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக முதலமைச்சர் ஜெயலலிதா நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக, கழக சட்ட திட்ட விதிமுறைகளின்படி, கழகத்தின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களால், தான் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகளாக இ. […]

tomscratch20042007 16/11/2015

பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து அவர் வெளியிட்ட அறிக்கையில்: எண்ணெய் நிறுவனங்கள் நவம்பர் 15 நள்ளிரவு முதல் டீசல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 90 காசுகள் வீதமும், பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 36 காசுகள் வீதமும் உயர்த்தியுள்ளன. உலகச் சந்தையில் தற்போது உள்ள விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இயதிய ரூபாயின் தற்போதைய மதிப்பு ஆகியவை இந்த விலை உயர்வுக்கான காரணங்கள் […]

angusam 15/11/2015

இ-சேவை மையங்கள் மூலமாக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தமிழகம் முழுவதும் இ-சேவை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. தலைமைச் செயலகத்தில் ஒரு இ-சேவை மையமும், தமிழகத்தில் உள்ள மொத்தம் 264 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் தலா ஒரு இ-சேவை மையமும், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் ஒரு இ-சேவை மையமும், […]

angusam 14/11/2015

முகநூலில் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்ததாக ஊட்டி வழக்கறிஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்த தேனாடு கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவர் ஊட்டியில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் மீது அ.தி.மு.க. நகர செயலாளர் தேவராஜ் ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், ஊட்டியை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீதரன் தனது முகநூல் பக்கத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை இழிவுப்படுத்தும் நோக்கத்தில் படம் மற்றும் செய்தி வெளியிட்டு விமர்சித்துள்ளார். […]