karthi

johnhatton61986 11/08/2016

விஷால், வரலட்சுமி இருவரும் காதலிக்கிறார்கள் என்று செய்திகள் மட்டும் வந்துகொண்டிருக்கிறது. ஆனால் இதுகுறித்து விஷால், வரலட்சுமி இதுவரை பேசியதே இல்லை. இந்நிலையில் ஒரு பேட்டியில் விஷால், வரலட்சுமி என்னுடைய பள்ளித்தோழி. எங்கள் திருமணம் நடிகர் சங்க கட்டடத்தில் தான் நடக்கும். கார்த்தியிடம் டேட்டுக்கு இப்போதே சொல்லி விட்டேன் என்று விஷால் கூறியிருப்பதாக ஒரு முன்னணி தளத்தில் கூறியுள்ளனர்.

johnhatton61986 08/07/2016

சிறுத்தை சிவா-அஜீத்தின் புதிய படத்தில் காஜல் அகர்வாலை நாயகியாக ஒப்பந்தம் செய்திருப்பதாக, புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.  ‘பழனி’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான காஜல் தற்போது கோலிவுட்டின் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார். விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஷால் என கோலிவுட்டின் முன்னணி நாயகர்களுடன் நடித்தாலும் காஜல் இதுவரை அஜித்துக்கு ஜோடியாக நடித்ததில்லை. காஜலின் மனக்குறை தீருவதற்கான நேரம் தற்போது நெருங்கி வந்துள்ளது. ஆமாம் தல 57 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் […]

johnhatton61986 29/06/2016

கார்த்தி, ஸ்ரீதிவ்யா, நயன்தாரா நடிப்பில் 60 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் படம் ‘காஷ்மோரா’. சமீபத்தில் இப்படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து தீபாவளிக்கு தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் இப்படத்தை வெளியிடப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது. காஷ்மோராவுடன் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால் போட்ட பட்ஜெட்டை எடுக்க முடியுமா? என்ற யோசனையில் உள்ளது. மெட்ராஸ், கொம்பன், தோழா போன்ற படங்களின் தொடர் வெற்றியின் காரணமாக இந்த படம் பெரும் எதிர்ப்பார்ப்பை கார்த்திக்கு ஏற்ப்படுத்தியுள்ளது.

johnhatton61986 29/06/2016

சென்னை: இந்த வருட தீபாவளி ரேஸில் விக்ரம் பிரபு, ஜீவா, தனுஷ், கார்த்தியுடன் சேர்ந்து நடிகர் விஜய்யும் குதிக்கப் போவதாகக் கூறப்படுகிறது. வழக்கமாக தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு பெரிய நடிகர்கள் மற்றும் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாவது வழக்கம். கடந்த வருட தீபாவளிக்கு அஜீத் நடிப்பில் ‘வேதாளம்’, கமல்ஹாசன் நடிப்பில் ‘தூங்காவனம்’ என இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகி மோதிக் கொண்டன. இந்நிலையில் இந்த வருட தீபாவளிக்கு ‘காஷ்மோரா’, ‘திருநாள்’, ‘வீர சிவாஜி’, ‘கொடி’ […]

angusam 26/03/2016

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு திரையுலகமும் இணைந்து எடுத்துள்ள படம் தான் தோழா. நாகர்ஜுனா, கார்த்தி, தமன்னா, பிரகாஷ்ராஜ், விவேக் என நட்சத்திர பட்டாளங்களுடன் 1000 திரையரங்குகளில்  உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம் தோழா.   கதைக்களம் ஒரு பிரஞ்ச் படத்தின் இன்ஸ்பிரேஷனில் எடுத்த படம் தோழா, இதை டைட்டில் கார்டில் போடுவதிலேயே படக்குழுவினர்களின் நேர்மை தெரிகின்றது. தான் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம், இந்தியாவின் டாப் மோஸ்ட் பணக்காரர் நாகர்ஜுனா. ஆனால், உடம்பில் தலை […]

angusam 27/01/2016

தனது அண்ணன் சூர்யாவால் தனது தூக்கத்தை தான் அடிக்கடி தொலைத்து வருவதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவக்குமாரின் மகன்களான சூர்யாவும். சூர்யாவைத் தொடர்ந்து அவரது தம்பி கார்த்தியும் நடிக்க வந்து தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். இந்நிலையில் சூர்யாவால் தான் அடிக்கடி தனது தூக்கத்தை தொலைப்பதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து கூறியுள்ள கார்த்தி, ‘சூர்யா ஒவ்வொரு முறையும் தனது அர்ப்பணிப்புத் தன்மையால் தனது உருவத்தையே மாற்றி […]

angusam 05/12/2015

நடிகர்கள் விஷால், கார்த்தி ஆகியோர் புதிய ‘வாட்ஸ்-அப் குரூப்’பை உருவாக்கி உணவு, துணிமணிகள் சேகரித்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கினார்கள். நடிகர்கள் உதவி சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் வழங்கும் பணியில் நடிகர், நடிகைகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக ராஜபாளையத்தில் ‘மருது’ படப்பிடிப்பில் இருந்த விஷாலும் ஐதராபாத்தில் ‘தோழா’ படப்பிடிப்பில் இருந்த கார்த்தியும் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பி ‘ரெஸ்க்யூ சென்னை குரூப்’ என்ற பெயரில் புதிய ‘வாட்ஸ்-அப்’ குரூப்பை உருவாக்கினர். இந்த குரூப்பில் […]

angusam 16/11/2015

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடன் நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் நேரில் சந்தித்து பேசி நன்றி தெரிவித்தனர். நடிகர் சங்கத்திற்கு கடந்த அக்டோபர் 18ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் சரத்குமார் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான அணியும் மோதின. இதில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. விஷால் பொதுச்செயலாளராகவும், கார்த்தி பொருளாளராகவும், பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் துணைத்தலைவர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற உடனேயே முதல்வர் ஜெயலலிதாவிற்கு […]