krishnagiri

johnhatton61986 31/08/2016

சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் பீமன் (வயது 24). லாரி டிரைவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (21). கிளீனர். நேற்று முன்தினம் இவர்கள் 2 பேரும் சரக்கு லாரியில் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். லாரியை பீமன் ஓட்ட, மணிகண்டன் அருகில் அமர்ந்திருந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே புலியரசிமேடு என்னும் இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் லாரி திரும்ப முயன்றது. அப்போது முன்னால் சென்ற லாரி மீது பீமன் ஓட்டிச் சென்ற லாரி எதிர்பாராதவிதமாக […]

johnhatton61986 27/08/2016

கிருஷ்ணகிரி அருகே வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இளம்பெண் பர்கூர் அருகே உள்ள ஜெகதேவியைச் சேர்ந்தவர் செந்தில், ஆட்டோ டிரைவர். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சந்தியா (வயது 26) என்பவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் […]

jefferywinneke 11/07/2016

ராணுவத்தில் தமிழகப் பிரிவுக்கு 2 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. இதில், சேரும் இளைஞர்களுக்கு மாத ஊதியமாக ரூ.35 ஆயிரம் வரை கிடைக்கும் என தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி, அந்தமான்-நிக்கோபார் மாநிலங்களுக்கான ராணுவ ஆள்சேர்ப்புப் பிரிவின் துணை இயக்குநர் ஜெனரல் எஸ்.என்.தால்வி தெரிவித்தார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களுக்கான ஆள் சேர்ப்பு முகாம் திருவண்ணாமலையில் ஆகஸ்ட் 19 முதல் 31 வரையில் முகாம் நடைபெறுகிறது. பெரம்பலூர், அரியலூர், […]

johnhatton61986 05/07/2016

ஓசூர் அருகே சாலையை கடக்க முயன்ற யானை மீது அரசு பஸ் மோதியது. இதில் படுகாயம் அடைந்த யானை உயிருக்கு போராடி வருகிறது. யானைகள் அட்டகாசம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கானலட்டி, ஏ.செட்டிப்பள்ளி, போடூர்பள்ளம், சானமாவு காடுகளில் யானைகள் உள்ளன. இந்த யானைகள் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் கானலட்டி வனப்பகுதியில் ஒரு ஆண் யானையும், ஒரு பெண் யானையும் இருந்தன. இந்த […]

tomscratch20042007 30/06/2016

யுனைட்டட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 2016 – 2017-ஆம் ஆண்டுக்கான 100 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Probationary Officer (PO) காலியிடங்கள்: 100 தகுதி: 01.06.2016 தேதியின்படி ஏதாவதொரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 21 – 30க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.23,700 – 42020 தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் […]

angusam 16/12/2015

இந்தியாவில், மேற்கு தொடர்ச்சி மலையில், கர்நாடகா மாநில பகுதியில், அதிகளவு சந்தன மரங்கள் உள்ளன. விலை உயர்ந்த, மதிப்பு கூட்டப்பட்டதாக கருதப்படும் சந்தன மரங்களின் வளர்ப்பினை ஊக்கப்படுத்திட, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திருச்சி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வேலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைப் பகுதிகளில், வனத்துறையின் மூலம் சந்தனக்காடு வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளன. நடப்பாண்டு சந்தனக்காடு வளர்ப்பு திட்டத்தில், […]

tomscratch20042007 19/11/2015

கிருஷ்ணகிரியில் போலி ஐ.பி.எஸ்., அதிகாரி மற்றும் அவருக்கு உதவிய ஏட்டை, போலீசார் கைது செய்தனர்.  கிருஷ்ணகிரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், பையனப்பள்ளி டோல்கேட் அருகே, எஸ்.பி., திருநாவுக்கரசு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக பல்சர் பைக்கில் வந்த, இருவர் சாலையோரம் நின்று டீ குடித்துகொண்டிருந்தனர். இதில், ஒருவர் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அணியும் சீருடையில் இருந்ததால், சந்தேகமடைந்த, எஸ்.பி., திருநாவுக்கரசு, அவர்களிடம் விசாரணை நடத்தினார். ‘ஐ.பி.எஸ்., தேர்வு பெற்று, நேஷனல் […]