Modi

angusam 17/11/2017

ஆட்சியைக் கலைச்சிடுவேன்!… எடப்பாடி மற்றும் தினகரனை மிரட்டிய மோடி!…. சசிகலா குடும்பத்தை குறிவைத்து வருமான வரித்துறை நடத்திய மெகா ரெய்டு தமிழகத்தை அரசியலில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் பெருத்த அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.   பொதுவாக, ஒரு ரெய்டு நடந்து அங்கு வருமானத்திற்கு புறம்பாக சேர்க்கப்பட்ட பணமோ, சொத்து சம்பந்தமான ஆவணங்களோ கைப்பற்றப்பட்டால் அந்த நடவடிக்கைக்கு அரசியல் களத்திலிருந்து மட்டுமல்லாமல் அனைத்து தளங்களிலிருந்தும் வரவேற்பு கிடைக்கும். ஆனால், மன்னார்குடி மாஃபியாவான சசிகலா குடும்பம் ஜெ.ஆட்சிக்காலத்தில் தமிழகம் முழுக்க சொத்துக்களை […]

angusam 09/11/2016

 நாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். எனினும், இந்த நடவடிக்கையால் மக்கள் பீதியடையத் தேவையில்லை. மேற்கண்ட நோட்டுகளை இன்னும் 50 நாள்களுக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்றும், இன்னும் இரு வாரங்களுக்குள் அந்த நோட்டுகளை வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும் மாற்றிக் கொள்ளலாம் […]

johnhatton61986 31/07/2016

நாட்டின் முன்னேற்றத்திற்கான புதிய தொழில் நுட்பங்கள் சீரான வளர்ச்சி அடைவதற்கு ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவையே ஒரே வழி என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று கூறியுள்ளார். அகில இந்திய வானொலியில் பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் மன் கி பாத் நிகழ்ச்சி வழியே பொது மக்களிடம் பேசுவார்.  அவர் இன்று பேசும்பொழுது, நாட்டில் பல்வேறு வகையான பிரச்னைகளுக்கு மலிவான மற்றும் எளிமையான தீர்வு காண்பதற்காக புதிய கண்டுபிடிப்புகளுக்கான எண்ணற்ற மையங்களை அமைப்பது எனது அரசின் நோக்கம். […]

johnhatton61986 27/07/2016

ரஜினி கபாலி பட சாதனையை விட சில காலம் முன்பு மிகவும் பிரபலமாக பேசப்பட்ட விஷயம், அவர் டுவிட்டரில் இணைந்தது பற்றி தான். ரஜினி டுவிட்டரில் இணைந்ததும் நொடி நொடிக்கு பாலோவர்ஸ் ஏறிக்கொண்டே இருந்தது. இந்நிலையில் ரஜினி டுவிட்டரில் மொத்தம் 19 பேரை தான் பின்தொடர்கிறார். அதில் பலவகை செய்தி இணையதளங்களை பாலோ செய்யும் ரஜினி ஒரே ஒரு அரசியல் பிரபலத்தை மட்டும் பின்தொடர்கிறார். அவர் வேறு யாரும் இல்லை அரசியல் தலைவர் பிரதமர் மோடியை தான் […]

angusam 22/01/2016

கடந்த 2014-ம் ஆண்டு  பொது தேர்தலின் போது,  பொதுக்கூட்ட மேடை ஒன்றை பிரதமர் மோடி துடைப்பத்தால் பெருக்குவது போன்ற படம் சமூக வலைத்தளங்களில் உலாவியது. கடந்த  1988-ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பில் சாதாரண தொண்டராக நரேந்திர மோடி இருந்த போது, இத்தகைய பணியில் அவர் ஈடுபட்டது போல, அந்த படத்தின் கீழ் விளக்கமளிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் இருப்பது மோடியா அல்லது சித்து வேலையா? என்று அகமதாபாத்தை சேர்ந்த ஒருவர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் […]

tomscratch20042007 22/12/2015

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் செய்தது போல் தேசிய கீதத்தில் மாற்றம் செய்யவேண்டும் என மோடிக்கு சுப்பிரமணிய சுவாமி கடிதம் எழுதியுள்ளார். கடந்த மாதம் சுப்பிரமணிய சுவாமி மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் “இந்தியாவின் தேசிய கீதமாக ஜன கண மன இருக்க வேண்டுமா அல்லது வந்தே மாதரம் இருக்கவேண்டுமா என்பது பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. இதனை அடுத்து அரசியல் நிர்ணய சபை தலைவரான ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி, […]

tomscratch20042007 06/12/2015

டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்திக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: பிடிஐ டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்திக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: பிடிஐ பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தொழிலாளர் நலன் தொடர்பான சட்டங்களை திட்டமிட்டு பலவீனப் படுத்துவதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி […]

tomscratch20042007 03/12/2015

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உடனடி நிவாரண நிதியாக ரூ. 1000 கோடி உடனடியாக நிதிவழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார். கனமழை மற்றும் வெள்ளத்தினால் சென்னை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தில் சிக்கி உள்ள மக்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவத்தின் முப்படையும், தமிழக காவல்படை மற்றும் தீயணைப்பு படை தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் வெள்ளச்சேதத்தை பார்வையிட பிரதமர் மோடி, தனி விமானம் […]

angusam 14/11/2015

தன் சொந்த ஆட்சியை நடத்துவதற்குத்தான் மோடி, வளர்ச்சி பற்றி பேசுகிறார் என மன்மோகன் சிங் சாடினார். நாட்டின் முதல் பிரதமர் நேருஜியின் 125–வது பிறந்த தினம் ஓராண்டு காலமாக கொண்டாடப்பட்டு வந்தது. இதன் நிறைவு விழா, டெல்லியில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டுபேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங், பிரதமர் மோடி வளர்ச்சிபற்றி பேசுகிறார். அவர் தனது சொந்தக்கடையை (சொந்த ஆட்சியை) நடத்துவதற்காகத்தான் இப்படி பேசுகிறார். நாட்டில் வளர்ச்சி இருக்கவா செய்கிறது? தாழ்த்தப்பட்ட […]

angusam 12/09/2015

மத்திய அரசின் புதிய திட்டத்தில் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 மாவட்டங்களில் திருச்சி மாவட்டம் முதன்மை பெற்றுள்ளது. அதன் ஒருபகுதியாக திருச்சியில் இன்று மாநகராட்சி ஆணையர், திருச்சி மாநகரமேயர், துணை மேயர் ஆகியோரின் தலைமையில் மக்களுடன் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திட்டத்தை செயல்படுத்தும் தனியார் டாடா நிறுவனத்தின் அதிகாரிகள் தங்களுடைய திட்டம் குறித்து அனைவருக்கும் விரிவாக விளக்கி கூறினார்கள். திருச்சி ஸ்மார்ட் நகரமாக மாற்ற இத்திட்டத்திற்காக […]