Police

johnhatton61986 04/09/2016

பூதப்பாண்டி அருகே போலீசார் வாகன சோதனை நடத்தியபோது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த வாலிபர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால், இந்த விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. இதுகுறித்த விவரம் வருமாறு:– விபத்து அழகியபாண்டியபுரம் மேல்கரையை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் வீரமணி என்கிற சங்கர் (வயது 22). இவர் திட்டுவிளையில் ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார். இவருடன் மேல்கரையை சேர்ந்த விஜயன் மகன் விக்னேஷ் (20) என்பவரும் வேலை பார்த்து […]

johnhatton61986 04/09/2016

திருப்பூரில் தனியார் பள்ளி வேன் மோதி படுகாயமடைந்த 1–ம் வகுப்பு மாணவிக்கு கோவை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– பள்ளி மாணவி திருப்பூர் பலவஞ்சிபாளையம் மூகாம்பிகைநகரை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் வீடுகளில் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார். இவருடைய 2–வது மகள் லட்சுமி (வயது 6). இவள் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1–ம் வகுப்பு படித்து வருகிறாள். மாணவி லட்சுமி தினமும் […]

johnhatton61986 04/09/2016

திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி, தனியார் கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு லாரி நேற்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை, கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த முருகன் ஓட்டினார். அவருடன் வைரமுத்து என்பவர் பயணம் செய்தார். திண்டுக்கல் அருகே நான்குவழிச்சாலையில், கல்லாத்துப்பட்டி பிரிவு என்னுமிடத்தில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவரை உடைத்து கொண்டு மறுபக்கம் சென்று, சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் […]

johnhatton61986 04/09/2016

ஓய்வு பெற்ற ஆசிரியரை ஏமாற்றி ஏ.டி.எம்.மில் ரூ.20 ஆயிரம் கொள்ளையடித்தவரை போலீசார் கைது செய்தனர். கோபி சீதாலட்சுமிபுரத்தை சேர்ந்தவர் குருசாமி (வயது 70). ஓய்வு பெற்ற ஆசிரியர். சம்பவத்தன்று இவர் கோபி புதுப்பாளையத்தில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். கார்டுடன் சென்றார். அப்போது ஏ.டி.எம். மையத்துக்குள் இருந்த ஒருவர் குருசாமியிடம் தான் பணம் எடுத்து தருவதாக கூறினார். இதை நம்பிய குருசாமி ஏ.டி.எம். கார்டை அவரிடம் கொடுத்து ரூ.20 ஆயிரம் எடுக்குமாறு […]

johnhatton61986 04/09/2016

மது கொடுத்தால் தான் இறங்கி வருவேன் என அடம் பிடித்து சென்னிமலை அருகே 120 அடி உயர செல்போன் கோபுரத்தின் உச்சியில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது. சரசரவென… ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள வெப்பிலியை சேர்ந்தவர் கந்தன் (வயது 40). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சுமதி (35). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கந்தனுக்கு குடிப்பழக்கம் உண்டு. நேற்று பகல் 10.30 மணி அளவில் மது […]

johnhatton61986 01/09/2016

விருத்தாசலத்தில் இளைஞர் ஒருவர் கேலி, கிண்டல் செய்ததால் அவமானம் தாங்கமுடியாமல் செவிலியர் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து, பெண்ணின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– செவிலியர் விருத்தாசலம் ஏனாதிமேடு பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இளம்பெண், செவிலியராக ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இவர் தினமும் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு சைக்கிளில் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில், நேற்று இரவு […]

johnhatton61986 01/09/2016

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 5 போலி டாக்டர்களை போலீசார் கைது செய்தனர். போலி டாக்டர் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ஆர்.கே.பேட்டையில் கலெக்டர் உத்தரவின்பேரில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர். மோகனன், துணை இயக்குனர் தயாளன் ஆகியோர் தலைமையிலான 2 தனிப்படையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஆர்.கே.பேட்டையில் விஜயகுமார் (வயது 54) என்பவர் பி.எஸ்.சி. படித்துவிட்டு டாக்டர் தொழில் செய்தது தெரியவந்தது. அவரை ஆர்.கே.பேட்டை போலீசில் அவர்கள் ஒப்படைத்தனர். போலீசார் விஜயகுமாரை கைது செய்து […]

johnhatton61986 01/09/2016

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாண்டகப்பாடியை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 65). அதே பகுதியில் வசித்து வருபவர் அசோதை (50). இந்நிலையில் நேற்று கலியமூர்த்தி குடிபோதையில் வந்து அசோதையிடம் தகாத வார்த்தைகளை கூறி தகராறு செய்துள்ளார். இதுகுறித்து அசோதை வி.களத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலியமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

johnhatton61986 01/09/2016

திருவொற்றியூர் மாணிக்கம் நகர் 4–வது தெருவில் வசித்து வந்தவர் ஆனந்த்(வயது 40). பெயிண்டர். இவருடைய மனைவி தேவி. இவர்களுக்கு விக்னேஷ்(11), கார்த்திக்(8) என 2 மகன்கள் இருந்தனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மூத்த மகன் விக்னேஷ் ரெயிலில் அடிபட்டு இறந்து விட்டான். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ஆனந்த், தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவாராம். இதனால் கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டு மனைவி கோபித்து கொண்டு ஆந்திராவில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். […]

johnhatton61986 31/08/2016

கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் சிலர் தொடர்ந்து கஞ்சா விற்று வருவதாகவும், குறிப்பாக பாலகிருஷ்ணாபுரம் ஏரிக்கரையில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகவும் சிப்காட் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து பைபாஸ் சாலையில் உள்ள கரிமேடு பகுதியில் சப்–இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், ராஜேந்திரன்  ஆகியோர் தலைமையில் சிப்காட் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சாவை மொத்தமாக வைத்து பெண்கள் உள்பட சிலர் பிரித்துக்கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்து  விசாரித்தனர்.  போலீஸ் விசாரணையில் அவர்கள் கரிமேடு பகுதியை […]

johnhatton61986 31/08/2016

ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் திருட்டு போன 18 மோட்டார் சைக்கிள்களை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்தனர். மோட்டார் சைக்கிள்கள் திருட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் பல இடங்களில் வீடுகள் மற்றும் கடைகள் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களை திருடிய ஆசாமிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் ஓசூர் அந்திவாடி சோதனைச்சாவடி […]

johnhatton61986 31/08/2016

பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் நேற்று காலை 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தம் அருகே இறந்து கிடந்தார். இதை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவமனை புறக்காவல் நிலையத்திற்கும், பெரம்பலூர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் பெரம்பலூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார் அங்குவிரைந்து வந்து அவர் உடலை கைப்பற்றி பிரேத கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர், அவர் சிகிச்சை பெறுவதற்காக […]

johnhatton61986 30/08/2016

பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மைய நூலகம் அருகில் நேற்று முன்தினம் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரி பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது ரோட்டில் 2 மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றார்கள். இதைக்கண்ட பஸ் டிரைவர் அன்பழகன், அவர்களை எச்சரிக்கை செய்து உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த 2 மாணவர்களும் பஸ்சை பின் தொடர்ந்து சென்று தெற்கு பை–பாஸ் ரோடு அருகே சென்ற போது பஸ் மீது சரமாரியாக கற்களை எடுத்து வீசினார்கள். இதில் பஸ்சின் பின்பக்க […]

johnhatton61986 30/08/2016

பேரளம் போலீசார் கீரனூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிளை வழிமறித்து சோதனை செய்தனர். மோட்டார் சைக்கிளில் கத்தி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வழுவூர் பகுதியை சேர்ந்த மகேஷ் (வயது36), ராஜசேகரன் (28) என்பதும், இவர்கள் கத்தியுடன் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

johnhatton61986 30/08/2016

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பட்டப்பகலில் பணத்துடன் வந்த வாலிபரை காரில் கடத்திச் சென்று ரூ. 5½ லட்சத்தை பறித்து சென்ற கும்பலை போலீசார் தேடிவருகின்றனர். வாலிபர் கடத்தல் ராமநாதபுரம் பசும்பொன்நகரை சேர்ந்த அழகுமலை என்பவருடைய மகன் மங்களநாதன்(வயது 38). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் அங்கிருந்து சொந்த ஊருக்கு வந்து வேலை தேடிவந்தாராம். இந்த நிலையில் மங்களநாதன் தான் வைத்திருந்த சுமோ காரை விற்பனை செய்து ரூ.3 லட்சத்து 30 ஆயிரமும், சரக்கு வாகனத்தை அடமானம் […]