sports

jefferywinneke 07/07/2016

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் அரசு விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கு 3– ம் கட்ட தேர்வு நடைபெற உள்ளது என கலெக்டர் பழனிசாமி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் பழனிசாமி விடுத்து உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது. விளையாட்டு விடுதிகள் விளையாட்டு மேம்பாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் மூலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி மற்றும் தங்குமிட […]

tomscratch20042007 26/12/2015

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்தவர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தினர். அதன்படி மதுரையில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் ராஜா, நிர்வாகி துரை மற்றும் ஜல்லிக்கட்டு பேரவையை சேர்ந்த சீனிவாசன் ஆகியோர் மதுரை அண்ணாநகரில் உள்ள ஒரு செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் செல்போன் டவரில் இருந்து […]

tomscratch20042007 18/12/2015

டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்ற ஊழலில்  மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு தொடர்பு இருப்பதாக ஆம் ஆத்மி குற்றம் சுமத்தி வரும் நிலையில், இன்று மேலும், அவருக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக  அருண் ஜெட்லிக்கு 5 கேள்விகளை ஆம் ஆத்மி முன்வைத்துள்ளது. இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆஸ்தோஷ்   கூறியதாவது:-  டெல்லி பெரஷோ கோட்லா மைதானத்தில் உள்ள கார்பரேட் பாக்ஸை துணை குத்தகைகக்கு ”21 பர்ஸ்ட் […]

angusam 16/12/2015

2016-ல் இந்தியாவில் நடைபெறுகிற டி20 உலகக்கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகர்களாக மைக் ஹஸ்ஸியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீதரனும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஆஸ்திரேலிய அணி இதுவரை டி20 உலகக்கோப்பையை வெல்லவில்லை. இதுவரை நடந்த 5 போட்டிகளை இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், இலங்கை ஆகிய அணிகளே வென்றுள்ளன. இதனால் முன்னாள் வீரர் மைக் ஹஸ்ஸி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீராம் ஆகிய இருவரும் டி20 உலகக்கோப்பைப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். தென் […]

tomscratch20042007 09/12/2015

பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதி வரை நடைபெற இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடருக்கு இந்திய அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கும் பட்சத்தில், இந்த மாதம் 24ஆம் தேதி முதல் 2016ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி வரையில் போட்டிகள் நடைபெறும் என்று  பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, 3 ஒருநாள் போட்டிகள், மற்றும் இரண்டு […]