ஆண் விபச்சாரர்கள் – ஆகவே இந்த உண்மையைச் சொல்ல முடியவில்லை!”

0 18

ஆண் விபச்சாரர்கள் – ஆகவே இந்த உண்மையைச் சொல்ல முடியவில்லை!”

 

சமூக செயற்பாட்டாளரான நண்பர் ஒருவர் கூறியது:

 

“அந்த ஊரில் வசதி மிக்க பெண்களில் சிலர், (ஆண்) விபசாரர்களை அணுகுகிறார்கள். உற்சாகமாக நாட்களை கழிக்கிறார்கள்.

 

ஒரு கட்டத்தில் நெருக்கமான சம்பவங்களை தங்களது செல்போனில் ஆண் விபசாரர்கள் பதிகிறார்கள். அதைக் காட்டி, அந்த பெண்களை மிரட்டி பணம் பறிப்பதோடு, “புதிய பெண்களை எங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்” என நிர்பந்தம் செய்கிறார்கள். அந்த பெண்களும் அப்படியே செய்கிறார்கள்.

 

புதிய பெண்களில் சிலரை துன்புறுத்தி பலாத்காரம் செய்கிறார்கள் விபசாரகர்கள்.

 

விசயம் வெளியே வருகிறது. விபசாரகர்களில் சிலர் கைது செய்யப்படுகிறார்கள்.

 

பாதிக்கப்பட்ட அப்பாவிப் பெண்களோடு, ‘அந்த சில’ பெண்களும் பரிதாபத்துக்கு உரியவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள்.

 

அந்த விபசாரர்கள் கைது செய்யப்பட வேண்டியவர்களே… தண்டிக்கப்பட வேண்டியவர்களே. அதே போல அவர்களை நாடிய ‘அந்த சில’ பெண்கள் மீதும் தவறு இருக்கிறது. தங்களது சுயநலத்துக்காக அப்பாவிப் பெண்கள் பலரை, விபசாரர்களுக்கு (ஏமாற்றி) தாரை வார்த்திருக்கிறார்கள்.

 

இதை வெளிப்படுத்தினால்தான் ‘அந்த சில’ பெண்கள் போல திட்டமிடும் வேறு சில பெண்களும் எச்சரிக்கையாக இருப்பார்கள். அவர்களால் வேறு பல அப்பாவிப் பெண்கள் பாதிக்கப்படாமல் இருப்பார்கள்.

 

ஆனால் இந்த உண்மையை ஏற்கும் பக்குவம் நம்மில் பெரும்பாலானோருக்கு கிடையாது. என்னை குற்றம் சொல்வார்கள். ஆணாதிக்கவாதி… பரபரப்புக்காக சொல்கிறான் என்பார்கள். ஏன், மனநோயாளி என்று கூட சொல்வார்கள்.

 

ஆகவே இந்த உண்மையைச் சொல்ல முடியவில்லை!”

 

– டி.வி.எஸ். சோமு

Leave A Reply

Your email address will not be published.