ஆன்மீக கதை உங்களுக்காக…

0 22

ஒரு குருவிடம் சிறுவன் ஒருவன் கல்விகற்க சென்றான். சிஷ்யன் ஆனான். குரு உபதேசம் செய்யுமாறு கேட்டான்.சிறுவனாக இருந்ததால் கொஞ்சநாள்கழித்து செய்கிறேன் என்றார்

ஒருநாள் குருவிற்கு உடல்நிலை சரியில்லை. இறந்து விடுவோம் என்று நினைத்தார்.அவருக்கு தாகம் எடுத்தது.

சிஷ்யனைத் தண்ணீர் கொண்டுவர அனுப்பினார். அந்திமகாலம் நெருங்குவதை அறிந்த அவர்,ஒரு ஓலைச்சுவடியில் தன் உபதேசத்தை எழுதினார். சிறுவன்வராந்த்தால் அந்தவழிவந்த ஒரு கழைக்கூத்தாடி தம்பதிகளிடம் ஓலைச்சுவடியைத்தந்து,சிறுவனிடம் சேர்ப்பிக்குமாறு கூறினார். உயிரும் பிரிந்துவிட்டது

கழைக்கூத்தாடிகள் சிறுவனை த்தம் எடுபிடி ஆளாக வைத்துக்கொள்ள கருதி, “குரு உனக்கு உபதேச ஓலை கொடுத்து,இன்னும் பன்னிரண்டு வருடம் கழித்து தரச் சொன்னார்” என்றனர்

சிறுவன் பன்னிரண்டு வருடம்அவர்களுக்கு அடிமையாய் இருந்தான்.

கழைக்கூத்தாடி இறந்துவிட்டான். அவனது மனைவி க்கு சிறுவனை விட மனமில்லை. அவள்” என்மகன் மிகச்சிறுவனாக உள்ளான். இன்னும் பனிரண்டு வருடம் இருந்தால்தான் ஓலையைத்தருவேன்”என்றாள்.

எப்படியாவதுகுரு உபதேசம் பெறவேண்டும் என்ற ஆவலில் அவன் அங்கேயே இருந்தான்.

பனிரண்டுவருடம் கழிந்தபின்னும் அவள் ஓலை கொடுக்கவில்லை

ஒருநாள் பகவான் மாறுவேடத்தில் அவனிடம் வந்து,” இன்று அவள் கயிற்றில் வித்தை காட்டும்போது, ஓலை கீழே விழும். நீ எடுத்துக்கொண்டு ஓடி விடு”என்று சொல்லிசென்றுவிட்டார். அவர் கூறியபடியே நடந்தது. அவன்ஓலையை எடுத்துக்கொண்டு வெகுதூரம் ஓடினபிறகு பிரித்துப்பார்த்தான்.

” கிருஷ்ணாய நமஹ” என்று இருந்தது.

அந்த மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே நடந்தான் பசி, தாகம் ஒன்றும் அவனுக்குத்தெரியவில்லை பலநாள்கழிந்தன அன்று சிறுவனுக்கு ஏனோ பசிதெரிந்தது.

அவன் ஒருயாகசாலையில் உணவிடும் இடத்திற்கு வந்தான் அது தர்மர் செய்துகொண்டுஇருந்த”ராஜசூய யாகத்தின் சமையற்கட்டு! பீமன் இருந்தான். அனைவரும் சாப்பிட்டு முடித்து இருந்தனர்.

சிறுவனின் பசிகண்ட பீமன் சாதம் வடித்த கஞ்சியைக்கொடுத்தான். அவன் பசி தீர்ந்தது. அப்போது அங்கிருந்த பெரியமணி் பலத்த ஓசையுடன் ஒலிக்கத்தொடங்கியது.

தருமரிடம் ஸ்ரீகிருஷ்ணர்,

” அன்னதானத்தால் ஸ்ரீஹரி மகிழ்ச்சியடைந்தால்தான்

இந்தமணி ஒலிக்கும்.” என்றார்.

“தினமும் லட்சக்கணக்கானோர் உண்கின்றனர். இன்றும் போஜனம் முடிந்தது. இப்பொழுது எப்படி” என்று வியந்த தருமர் கிருஷ்ணருடன் அங்கு வந்தான். சிஷ்யன்(இப்போது முதியவன்)கிருஷ்ணனைப்பார்த்தான். அவனது கண்களுக்கு, சங்கு சக்ர,கதாதாரியாக,காட்சிஅளித்தார் கண்ணன்.

குருஉபதேசமும் கிருஷ்ணதரிசனமும்கிடைக்கப்பெற்ற அவனின் மகிழ்ச்சிக்கு எல்லை ஏது!!!

”குருவின்வழியே சென்றால் 

தெய்வதரிசனம்நிச்சயம்”

Leave A Reply

Your email address will not be published.