ஐடி ரெய்டு எப்படி நடத்தப்படுகிறது?

0 18

வரி அதிகாரிகள், சோதனைக்கு முன் தங்கள் அடையாள அட்டையை சம்பந்தப்பட்டவர்களிடம் காண்பித்து தங்களை அறிமுகம் செய்து கொள்வார்கள். வந்திருப்பவர்களிடம் சோதனைக்கான உரிய ஆவணம் (வாரண்ட்) உள்ளதா என்பதையும் சோதனைக்கு ஆளானவர்கள் உறுதி செய்து கொள்ளலாம். அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், வருமான வரி துறைக்கு தொடர்பு கொண்டு விசாரிக்க உரிமை உண்டு.சோதனைக்கு உட்பட்ட நபர்கள் தங்களுக்கான உணவு மற்றும் மருத்துவ சேவைகள் பெற உரிமை உண்டு. மேலும், சோதனை நடக்கும் இடத்தில் இருக்கவும், ஆவணங்கள் குறித்த விளக்கம் தரவும் அனுமதிப்படுவர். பள்ளி செல்லும் குழந்தைகளை அவர்களது பாடப்புத்தகங்கள் பைகளை சோதனைக்குப்பின் பள்ளிக்கு அனுப்ப உரிமை உள்ளது. பெண்களிடம், பெண் அதிகாரிகள்தான் சோதனை செய்வார்கள்.

வருமானவரித்துறை சட்டப்பிரிவு 132, உட்பிரிவு 1ன் படி, முதன்மை கமிஷனர் அந்தஸ்துக்கு இணையான அதிகாரியின் உத்தரவின் பேரில், வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளுவார்கள்.

உத்தரவிடுவது யார்?

வீடு, அலுவலகம், வாகனம் போன்ற எதை வேண்டுமானாலும் சோதனையிட அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. சோதனை முடியும் காலம் வரை தொலைபேசி, மொபைல் என அனைத்து தொலைத்தொடர்பு சாதனங்களையும் துண்டித்த பின்னரே சோதனையை தொடங்குவார்கள்.

பறிமுதல் கூடாது
ஏன்
?

பொதுவாக நகைகள், ரொக்கம், பத்திரங்கள், விலையுயர்ந்த பெயிண்டிங் போன்றவை கணக்கில் காட்டப்பட்டுள்ளதா என்று சரி பார்ப்பார்கள். பின்னர் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் பறிமுதல் செய்யப்படும். காட்டப்படாத நகைகளில் 250 கிராம் திருமணமான பெண்ணுக்கும் 150 கிராம் திருமணமாகாத பெண்ணுக்கும், 100 கிராம் ஆணுக்கும் வைத்திருக்க அனுமதி உள்ளது. பாதுகாப்பு பெட்டகம் அல்லது அறையின் சாவி இல்லை என்று உறுதி செய்யப்பட்டால் அதனை உடைக்கும் அதிகாரமும் வருமான வரி அதிகாரிகளுக்கு உண்டு. அசையாச் சொத்துக்கள், வியாபாரப் பொருட்கள், கணக்கில் உள்ள சொத்துக்கள், நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்ய முடியாது.

ஐடி ரெய்டுக்கு உதவும் 360 டிகிரி

வருமானவரி துறை, இப்போது நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பல்வேறு வகைகளில் விவரங்கள் சேகரிக்கிறது. உதாரணமாக, ‘360 டிகிரி விவரம் சேகரித்தல்’ என்ற புதிய பாணியில், அனைத்து செலவுகள், முதலீடுகள் ஆகியவை சேகரிக்கப்படுகிறது. வரித் தாக்கல் செய்யப்பட்ட விவரங்களுடன் அவை ஒப்பிடப்படுகிறது. கணக்கில் காட்டப்படாத சொத்துக் கள் அளவுக்குமீறி இருக்கும்போது, உடனுக்குடன் அதுகுறித்த தகவல்கள் சேகரிக்கப்படுகிறது.

சில ஆண்டுகளுக்குமுன், வருமான வரிச் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தின் காரணமாக, ‘வருமான வரி சோதனை ஏன் நடத்தபடுகிறது?’ என்ற விவரத்தை கோர்ட்டுகளுக்குகூட சொல்ல வேண்டியதில்லை. சந்தேகத்திற்கு வாய்ப்பு இருந்தால், உடனடியாக சோதனை செய்ய வருமான வரித்துறை அதிகாரிகள், அதிகாரம் பெற்றிருக்கிறார்கள். வருமான வரித்துறைக்கு வரும் தகவல்கள், பெரும்பாலும் வதந்திகள் மற்றும் மூன்றாம் நபர்கள் தரும் விவரங்கள் மூலமாகவே கிடைக்கின்றன.

துல்லியமாக தகவல்கள் அளிப்பவர்களுக்கு, குறிப்பிட்ட தொகை வருமான வரித்துறையினரால் பரிசாகவும் வழங்கப்படுகிறது. தகவல் அளிப்பவரின் விவரம் ரகசியமாக வைக்கப்படுகிறது.தற்போதுள்ள சூழ்நிலையில், கணக்கில் காட்டப்படாத பணம், சொத்துக்கள்  ஆபத்துதான். தகவல் தெரியும் பட்சத்தில், வருமான வரித்துறை எப்போது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்கலாம்.தொழிலை விரிவுபடுத்த நினைப்போர், தற்போது அறிவித்திருக்கும் குறைந்த வரியை செலுத்தி, தங்களிடம் இருக்கும் சொத்து, ரொக்கம் போன்றவற்றை கணக்கில் காட்டிவிட்டால், இனி வரும் இரவும், பகலும் நிம்மதியே!

Leave A Reply

Your email address will not be published.