ஐடி ரெய்டு மத்தியில் ஆள்பவர் கைகாட்டுவதால் நடக்கும் சோதனையா?

0 116

பொதுவாக, வரியை குறைக்க, வரி திட்டமிடல், வரி தவிர்த்தல், வரி ஏய்ப்பு என்று மூன்று வகையாக பிரிக்கலாம். இவற்றில் வரி திட்டமிடல் மற்றும் வரி தவிர்த்தல் ஆகியவை தவறு என்று நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக, வரி வட்டி அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், வரி ஏய்ப்பு, சோதனைக்கு உட்படுத்தப்படும்.
இந்த சோதனையின் மூலம் கணக்கில் காட்டப்படாத வருமானமும்,சொத்துக்களும் எப்படி சேர்ந்துள்ளது என்பதை கண்டுபிடிப்பார்கள். பிரபலங்களின் இடங்களில், வருமான வரி சோதனை நடக்கும்போதெல்லாம் பொதுவாகவே ஒரு குற்றச்சாட்டு எழும். மத்தியில் ஆள்பவர்கள் கை காட்டும் இடங்களில் சோதனை நடக்கிறது என்பார்கள்.
ஆனால், உண்மை நிலை என்னவென்றால், வெறும் புரளி தகவலை வைத்து ரெய்டு நடப்பதில்லை. உரிய ஆவணங்கள், பின்னணி விவரங்கள் பற்றி தீவிரமாக புலனாய்வு செய்த பின்னர்தான், வருமானவரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!