சமூக சேவை என்பது சேவையல்ல கடமை !

0 44

உலகம் முழுவதும் மார்ச் 21ஆம் தேதி சா்வதேச சமூக சேவகா்கள் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சமூகசேவையில் சிறந்த பணியை மேற்கொள்ளும் நபா்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுவார்கள். மேலும் அவா்களுடைய களப்பணியை பற்றியும் அதன் அனுபவங்களை பற்றியும் கருத்து பரிமாற்றங்கள் நடைபெறும். இந்த வருடமும் சா்வதேச சமூக சேவகா்கள் நாள் கொண்டாடப்பட்டது. திருச்சியில் நடைபெற்ற இந்த விழாவில் சுதந்திர போராட்ட வீரா் தோழா் நல்லக்கண்ணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும் இவ்விழாவில் முதலாளித்துவம் குறும்படத்தின் இயக்குநா் மணிவண்ணன் மற்றும் கக்கூஸ் என்ற இரு குறும்படத்தின் இயக்குநா் திவ்யபாரதி உள்ளிட்டோர் தங்ளது படைப்புகளை திரையிட்டனா். தொடர்ந்து விழாவில் பேசிய தோழர் திவ்யபாரதி சமூக சேவை என்ற வார்ததையே தவறு என்றும், ஒவ்வொரு மனிதனும் இந்த சமூகத்தில் பல நன்மைகளை பெற்று கொண்டும், அனுபவித்து கொண்டும் வாழும்போது நாம் இந்த சமூகத்திற்க்கு திருப்பி செய்ய வேண்டியது நம்முடைய கடமை அதை சமூக சேவை என்று கூறக்கூடாது என்றும், சேவையை பற்றி பேசுவதைவிட சமூக நீதியை பற்றி பேச வேண்டும் என்று தன்னுடைய கோரிக்கையை முன் வைத்தார்.

தொடர்ந்து தோழர் நல்லக்கண்ணு பேசுகையில் பொதுப்பணித்துறை எப்படி செயல்பட வேண்டும். அவற்றின் பங்கு இந்த சமூகத்தில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரும் இயற்கையை ஒன்றி வாழ வேண்டும், இயற்கைக்கு எதிராக வாழக்கூடிய ஒரே இனம் மனித இனம் மட்டும் தான். எனவே இயற்கையை நாம் காப்பாற்றியனால் தான் அது நம்மை காப்பாற்றும் என்று பேசினார்.

இந்த விழாவில் திருச்சி தண்ணீா் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் வினோத் சேசனுக்கு இந்த ஆண்டின் சிறந்த சமூக சேவகா் என்ற விருது வழங்கி கவுரவித்தனா். இவ்விழாவில் திருச்சி புனித சிலுவை கல்லுரி சமூக பணித்துறை போராசிரியா் ஸ்டீபன், சமூக சேவா்களின் ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளா் சாகுல் உள்ளிட்ட சமூக ஆா்வலா்களும், பல்வேறு அமைப்புகளை சோ்ந்தவா்களும் பங்கேற்றனா்.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!