திருச்சியில் புகார் கொடுத்த மாணவர்களை குற்றவாளியாக்கிய கல்லூரி நிர்வாகம்

0 22

திருச்சியில் புகார் கொடுத்த மாணவர்களை குற்றவாளியாக்கிய கல்லூரி நிர்வாகம்.

 

திருச்சியில்  பாரம்பரியமிக்க கல்லூரி ஒன்றில் சில நாட்களுக்கு முன்பு  விஷுவல் கம்யூனிகேஷன் துறைத் தலைவரின் மீது மாணவர்கள் பலர் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். இப்புகாரில் துறை தலைவர் தங்களை மன ரீதியாக துன்புறுத்துவதாகவும், எக்ஸாம் எழுத விடாமல் அலைகழிப்பதாகவும், அவர் வகுப்பிற்குள் விடாமல் வெளியிலேயே நிற்க விடுவதாகவும் என பல்வேறு புகார்களை அதில் முன் வைத்திருந்தனர்.

இதுதொடர்பாக  மாணவர்களிடம் விசாரித்த கல்லூரி துணை முதல்வரும், கல்லூரி செயலாளரும் கலந்தாலோசித்து விட்டு மாணவர்களை சமாதானபடுத்துவது போல் ஆரம்பித்து, ஒருக்கட்டத்தில் கல்லூரியை விட்டு டிஸ்மிஸ் பண்ணிடுவதாக மிரட்ட ஆரம்பித்துவிட்டாராம்.

பின்னர் அந்த 10 மாணவர்களையும் முதல்வரை சந்திக்க சொல்லி உத்தரவிட்டாராம், இது தொடர்பக்க விசாரித்த கல்லூரி முதல்வர் மாணவர்கள் அனைவரிடமும் தங்கள் மீது தான் தப்பு என்று மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக்கொண்டாராம்…

மேலும் அதே துறையை சார்ந்த மாணவர்கள் நம்மிடம் பேசுகையில் துறைத்தலைவர் தனக்கு ஒரு மாணவனை பிடிக்கவில்லை என்றால் அவனை கடைசி வரைக்கும் பழி வாங்கும் விதமாக தேர்வு எழுதவிடாமல் செய்வது, வகுப்பறைக்குள் உள்ளே அனுமதிக்காமல் வெளியையே நிற்க வைப்பது, என வருகை பதிவேட்டில் வகுப்புக்கு மாணவன் வந்தாலும் வரவில்லை என பதிவிடுவது, அவருடைய வகுப்பு நேரங்களில் மட்டுமல்லாது மற்ற வகுப்பு ஆசிரியர்களிடமும் கூறி ஆப்சென்ட் போடுவது என செய்து வருகிறார்.

இதுப்போன்று சமீபத்தில் ஒரு மாணவனுக்கு தேர்வு எழுத வருகை பதிவேடு, மற்றும் அனைத்து பாடங்களிலும் தகுதியான மதிப்பெண் இருந்தும் அந்த மாணவனுக்கு தேர்வு எழுதவிடாமல் செய்து விட்டாராம், ஒருக்கட்டத்தில் அந்த மாணவன் கல்லூரி துணை முதல்வரிடம் கூறுகையில் அவர் எந்தவித விசாரணையும் செய்யாமல், அடுத்த வருடம் எழுதிக்கொள்ளலாம் என்று அலட்சியமாக சொல்லிட்டாராம்.. அதனால அந்த மாணவன் கல்லூரியை விட்டு போவதற்கு முடிவுக்கு வந்துட்டாராம்… இதில் மாணவர்கள் புகார் தெரிவித்த துறைத்தலைவர் மீது எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லையாம்.

ஆனால் தொடர்ச்சியாக விஷுவல் கம்யூனிகேஷன் துறையில் மட்டும் தொடர்ச்சியாக மாணவர்கள் கல்லூரியை விட்டு நீக்கிக்கொண்டே இருக்கிறார்களாம்.

கல்லூரிக்கு படிக்க போகும் மாணவர்களில் எல்லோருமே வசதி மிக்கவர்களாக இருப்பார்கள் என்று கூறிட முடியாது, அதில் பலர் குடும்பங்கள் ஒருவேளை சாப்பிட்டிற்கு கூட வழியில்லாமல் தான் இருந்து வருகிறது, இருந்தாலும் என் மகன் படிச்சி பெரிய ஆள் ஆகணும்னு கஷ்டப்பட்டு படிக்க வைக்கிற பெற்றோர்களும் இருந்துகொண்டே தான் இருக்கின்றனர்.

அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் வரும் மாணவர்களை ஆசிரியர் முதலில் நண்பனாக பார்த்தால் தான் அவனுடைய நிலைமை நம்மால் அறிய முடியும், இதுப்போன்று பல மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இச்சிறு வயதிலேயே வர அவர்கள் தற்கொலை போன்ற தவறான முடிவுகளுக்கும் கல்லூரி நிர்வாகம் காரணமாக மாறிவிடுகிறது என்பதை நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டும் .  

Leave A Reply

Your email address will not be published.