திருச்சி அ.தி.மு.க. உட்கட்சி மோதல் – பரபரப்பு பின்ணனி !

0 82

திருச்சியில் அ.தி.மு.க. கட்சிகளுக்குள் மோதல் உருள போகும் தலைகள் பரபரப்பு பின்னணி !

 

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பதவி விலக்கோரி, அமைச்சரிடமே மனுக்கொடுத்த தினகரன் ஆதரவாளர்களும், அமைச்சர் ஆதரவாளர்களும் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் அமைச்சர் வெல்லமண்டி ஆதரவாளர் என்று வெளிப்படையாக தெரிந்தாலும் அவர்களை அடிக்க சொன்னது என்னவோ திருச்சி எம்.பி குமார் புது குண்டை தூக்கி போடுகிறார்கள் கட்சிகாரர்கள்.

 

திருச்சி மலைக்கோட்டையில் உள்ள அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயிலில், ரூபாய் ஒரு கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய மின் விளக்குகள் மற்றும் தொலைநோக்குக் கருவியினை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன்,எஸ்.வளர்மதி ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்கள்.

 

திருச்சி மாவட்ட ஆட்சியர் டாக்டர்.கே.எஸ்.பழனிச்சாமி தலைமையில் நடந்த இந்தக்கூட்டத்தில், எம்பி. குமார், இணை ஆணையர் கல்யாணி, மாநகராட்சி செயற்பொறியாளர் அமுதவள்ளி, முன்னாள் கவுன்சிலர்.ராஜா, ஐயப்பன், பூபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் .

27.04.2017 நம்ம திருச்சி இதழில் வெளியானது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இந்த கோயிலை சுற்றி புதிய வெள்ளை ஒளி மின் விளக்குகளை அமைக்க உத்தரவிட்டார். திருச்சி மாநகருக்கு அழகுக்கு அழகு சேர்ப்பதுடன், மாநகர சின்னமாக விளங்கும் மலைக்கோட்டையின் இயற்கை எழில் தோற்றம் இரவு நேரத்திலும் பக்தர்கள், பொதுமக்கள் அனைவரும் காணும் வகையில் 96 எல்.இ.டி. விளக்குகள்  புதியதாக அமைக்கும் பணி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் துறையின் மூலம் முடிக்கப்பட்டுள்ளது. அதோடு, மலைக்கோட்டியின் மேல் பகுதியில் இருந்து திருச்சி மாநகரின் அழகினை ரசிக்கும் வகையில் கோயில் 16 கால் மண்டபத்தில் மலையின் மேல் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது” என்றார்.

 

இப்படி அமைச்சர்கள் பேசிவிட்டு, மேடையில் இருந்து இறங்கியதும், கலெக்டர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கிளம்பினர். அப்போது வெல்லமண்டி நடராஜன், அங்கிருந்த பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கினார். அந்த கும்பலில் இருந்த திருச்சி அ.தி.மு.க தொண்டர் ராஜராஜ சோழன் ( இவர் சமீபத்தில் ஓ,பி.எஸ். கொடும்பாவி எரித்தவர்)  தலைமையில் வந்த அதிமுகவைச் சேர்ந்த தொண்டர்கள், திருச்சி மாநகர மாவட்டத்தின் நலனைக் கருத்தில் கொண்டு, ‘மாநகர் மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் பதவியை தானாகவே ராஜினாமா செய்ய வேண்டும்’என மனுக்கொடுத்ததோடு, அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு எதிராகவும், தினகரனுக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பினர்.

 

இதனை சற்றும் எதிர்பார்க்காத அமைச்சர் “ஷாக்”ஆனார், இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்து அங்கிருந்த அங்கிருந்த எம்.பி.குமார் தன் அருகில் இருந்த ஏர்போட் விஜியை பார்த்து அவனுங்கள அடிச்சு விரட்டுங்க என்று சத்தம் போட்டார். உடனே தினகரன் ஆதரவாளர்களுக்கும் கைகலப்பு ஆரம்பமானது. இருதரப்பும் தங்களுக்குள் மோதிக்கொண்டதால் அங்கிருந்த பொதுமக்கள் தெறித்து ஓடினார்கள். அ.தி.மு.க-வினர் தங்களுக்குள் மோதிக்கொள்ளும் சம்பவத்தைப் பார்த்து பதறிய போலீஸார், தினகரன் ஆதரவாளர்களை விரட்டி அடித்தனர். அடுத்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆட்களை கலைந்து செல்ல கேட்டபோது, எம்.பி.குமார் தரப்பினர், “பிரச்னை செய்ய வந்த கும்பலை கைது செய்யாமல், அவர்களை விரட்டி விட்ட காவல்துறையை கண்டிக்கிறோம்” என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள், அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை, பதவியிலிருந்து விலகக்கோரி கொடுத்த மனுவில், ‘ஒரு கட்சியின் துணைப் பொதுச்செயலாளரை பதவி நீக்கம் செய்யக் கோரிக்கை வைக்க ஒரு மாவட்ட செயலாளருக்கு உரிமை உள்ளது எனில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் பதவிக் கொடுத்து அழகு பார்த்த ஒரு அமைச்சர், மக்களுக்கும், தொண்டர்களின் உணர்வுகளுக்கு எதிராகச் செயல்படும்போது, அவரைப் பதவி விலகக் கோரும் உரிமை சாதாரண தொண்டருக்கு கிடையாதா..?’ என அந்த மனுவில் எழுதியிருந்தனர்.

 

உடனே வேறு வழியின்று தமிழ்நாட்டிலே முதல்முறையாக அ.தி.மு.க.வை சேர்ந்த இரு பிரிவினர் மோதலில் கைது செய்தது இதுவே முதல் முறை.என்கிறார்கள.  கைது செய்யப்பட்ட ராஜராஜன் கட்சியின் துணை பொதுசெயலாளர் தினகரன் மூலம் கட்சியில் சேர்ந்தவர் என்பதால் தலைமைக்கு உடனே தகவல் போனது. தன் ஆதரவாளர்களை அடித்து விரட்டியதில் குமார் பங்கு இருக்கிறது என்று தெரிந்தவுடன் தினகரன் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

 

தன் குடும்பத்தினரால் அரசியலுக்க அடையாளம் காட்டப்பட்ட எம்.பி.குமார் நமக்கு ஆதரவாக இல்லாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது நாள் வரை கட்சி நிகழ்ச்சிகளில் ஒதுங்கி இருந்ததும் தன் குடும்பத்தினர் ஒதுக்கி வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தவுடன் அமைச்சர் வெல்லமண்டியை அழைத்துக்கொண்டு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை பார்த்ததும் தினகரன் தலைமை அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

 

அமைச்சர் வெல்லமண்டியும் கொஞ்சம் அதிகமா நடந்து கொண்டமோ என்கிற சிந்தனையில் இருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!