திருச்சி பிரபல பள்ளி ஆசிரியர் மாணவர் ஆன அதிர்ச்சி !

0 18

திருச்சி பிரபல பள்ளி ஆசிரியர் மாணவர் ஆன அதிர்ச்சி !

 

திருச்சி மாநகரின் இதயப்பகுதியில் இருக்கும் அந்த ஆங்கில வழி பள்ளியில் மாணவிகளுக்கு சீட்டு கிடைப்பதே பெரும்பாடு. அங்கே படிக்க வைப்பதையே கௌரமாக காட்டிக்கொள்வார்கள். திருச்சியின் பெரிய பெரிய அரசியல்வாதிகள் தங்கள் குழந்தைகளுக்கு அட்மிஷன் சீட்டு வாங்க படாதபாடு படுவார்கள்.

 

அந்த பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கணித பாடம் எடுக்க இந்த வருடம் ஒரு ஆசிரியர் வந்திருக்கிறார்கள். காலாண்டு தேர்வு முடிவுகள் வெளி வந்தவுடன் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் அதிர்ச்சியடைந்து விட்டனர். காரணம் அவர் வகுப்பு எடுத்த மாணவர்கள் அனைவரும் அந்த பாடத்தில் தேர்ச்சியடையவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவர்களிடம் கேட்க மாணவர்கள் அனைவரும் அந்த புதிதாக வந்த ஆசிரியர் கணக்கு பாடம் சரியா நடத்த தெரியவில்லை என்று குற்றம் சாட்டினார்கள்.

 

இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரை முற்றுகை ஈட்டு இது நல்ல பள்ளிக்கூடம்,  சிறந்த மாணவர்களை உருவாக்கும் பள்ளிக்கூடம் என்று நினைத்து இங்கே வந்து சேர்த்தால் இப்படி நடத்த தெரியாத ஆசிரியர்களை வைத்து பள்ளி நடத்தினால் எப்படி என்று ஆளாளுக்கு வரிந்துகட்ட அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியர் அவசர அவசரமாக வேறு ஒரு புதிய ஆசிரியரை நியமித்து பெற்றோர்களை சமாதனப்படுத்தினார்.

 

சரியாக பாடம் நடத்த தெரியாத ஆசிரியருக்கு பள்ளியில் வேறு ஒரு அலுவலக பணி கொடுத்து விட்டு மாலை நேரங்களில் அந்த ஏரியாவில் பள்ளி மாணவர்களுக்கு டியூசன் எடுக்கும் ஒரு வாத்தியாரிடம் அந்த பள்ளி ஆசிரியர் மாணவியாக சேர்ந்து தினமும் கணக்கு கற்றுக்கொண்டிருக்கிறாராம்.

 

அதெப்பட்டி ஒரு பள்ளிக்கு ஆசிரியராக பணிக்கு சேர்ந்தவர். தற்போது மாணவியாக சேர்ந்து பாடம் கற்றுக்கொண்டுயிருப்பது படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தில் விளையாடலாமா என்கிற குரல் அந்ந பள்ளியின் நாலா பக்கம் சுவர்களில் கேட்கிறது.

 

 

Leave A Reply

Your email address will not be published.