நயன்தாரா குற்றச்சாட்டு ! தர்பார் திரைப்படத்திற்கு மலிவு விளம்பரமா ? – ஏன் ?

0 23

நயன்தாரா குற்றச்சாட்டு ! தர்பார் திரைப்படத்திற்கு மலிவு விளம்பரமா ? – ஏன் ?

 

முருகதாஸ் இயக்கத்தில் கஜினி படத்தில் நடித்தது தான்செய்த மிகப்பெரிய தவறு என்று நயன்தாரா கூறியுள்ளார். கஜினிபடம் 2008ஆம் ஆண்டு வெளிவந்தது. அதன்பிறகு நயன்தாரா 30 படங்களுக்குமேல்  நடித்துவிட்டார். ஒரு பாடலுக்குகூட சில படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ளார். ரஜினி நடித்த சிவாஜிபடத்தில் கூட நயனின் ஆட்டத்தை பார்க்கலாம். அப்படியிருக்க, கஜினி படம் வெளியாகி பத்து ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்ட நிலையில்,  அந்தப் படத்தில் நடித்ததைப் பற்றி கருத்துக்கூற இப்போது என்ன அவசியம் வந்தது? அதுவும் (நயன் கூற்றுப்படி) தன்னை நம்பவைத்து கழுத்தறுத்த முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறபோது?

 

இந்தப் பேட்டியைப் படித்ததும், முருகதாஸ்க்கும் நயனுக்கும் மீண்டும் லடாய் ஆரம்பித்து விட்டதோ… தர்பார் படத்திலும் நயன் ஏமாற்றப்படுகிறாரோ… அதனால்தான் கொதித்துவிட்டாரோ… நயனை தர்பார் படத்தில் எப்படி பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை அவசியம் தர்பார் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவலும் இயல்பாக மனதுக்குள் எழுகிறது.

 

எந்த கோணத்தில் இருந்து  யோசித்துப் பார்த்தாலும் ரஜினி நடிக்கும் தர்பார் படத்துக்கு படக்குழுவினர் நயன்தாராவை வைத்து மலிவான விளம்பரத்தை தேடிக்கொண்டனர் என்கிற முடிவுக்கே வரமுடிகிறது

 

 

– துரைநாகராஜ்.

Leave A Reply

Your email address will not be published.