படித்த திருச்சி கல்லூரிக்கு 1கோடி வழங்கிய முன்னாள் மாணவர்கள் !

0 26
படித்த கல்லூரிக்கு 1கோடி வழங்கிய முன்னாள்  மாணவர்கள்.
தாங்கள் படித்த கல்லூரிக்கு அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் 1கோடி வழங்கி உள்ளார்கள்.
திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லுரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் வருடாந்திர சந்திப்பு மார்ச் 18-ம் தேதி அன்று சென்னையில் நடந்தது.
இந்நிகழ்ச்சியுல் புதிதாக பொறுப்பேற்றுள்ள என்.ஐ.டியின் இயக்குநர் மினி ஷாஜி தாமஸ் கலந்துகொண்டார்.
முன்னாள் மாணவர்கள் சார்பில் இயக்குநருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. டீமலும் முன்னால் மாணவர் சங்கத்தின் மூலம், தற்போது என்.ஐ.டியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, தொழில்நுட்ப ஆலோசனை வழங்கவும், கல்வியாளர்களை அழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்தவும், மற்றும் மாணவர்களுக்கு வழிகாட்டவும், முடிவெடுக்கப்பட்டது.
28.04.2017 நம்ம திருச்சி வார இதழில் வெளியானது.

 

 இக்கூட்டத்தில் 1980-ம் ஆண்டு என்.ஐ.டியில் படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில் 1கோடி வழங்கப்பட்டது.
 இத்தொகை வழங்கிய முன்னாள் மாணவர்கள்,உலகளவில் சிறந்த கல்வியாளா்களை அழைத்து விரிவுரையாற்றவும் மற்றும் நோபல் பரிசு பெற்றவர்களை அழைத்து சிறப்புரையாற்றி மாணவர்களை ஊக்கப்படுத்தவும் செலவிடப்பட வழங்குகிறோம் எனச் சொல்ல அரங்கம் அதிர்ந்தது. மேலும் 1981-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சார்பாக இணையதள ஆய்வுக்கூடமும், 1990ஆம் ஆண்டு மாணர்கள் சார்பாக மாணவர்கள் திறமை ஊக்குவிப்பு மையமும் துவங்கி வைக்கப்பட்டது.
முன்னால் என்.ஐ.டி மாணவர் சங்கத்தின் தலைவர் திரு.கிருஷ்ணசாய் அவர்கள் 2018 டிசம்பர் மாதம் உலகளாவிய அளவில் தேசிய தொழில்நுட்ப கழகத்தில் கல்வி பயின்றவர்களின் சந்திப்பு சென்னையில் நடைபெறும் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சுமார் 1500 முன்னால் மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
உலகில் பல நாடுகளில் பரவியுள்ள திருச்சி என்.ஐ.டி முன்னாள் மாணவர்கள், கலந்து  கொள்ளும் அந்த நிகழ்ச்சி மிகவும் ஆவளுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
எவ்வளவு உயரத்துக்கு போனாலும் மாமு மச்சி என பழகும் மாணவர்கள் மீண்டும்
அந்த நிகழ்ச்சி மிகவும் முக்கியதுவம் வாய்ந்தது.

Leave A Reply

Your email address will not be published.