பைக் ரேஸிங் கதிகலங்கும் திருச்சி ??

0 57

ரேஸிங் சிட்டியாகிறதா திருச்சி???

 

இரு சக்கர வாகன பந்தய நகரமாக மாறி வருகிறது திருச்சி. சென்னையில் பரவலாக நடந்து வரும் மோட்டார் வாகன பந்தய கலாச்சாரம் அடுத்து கோவை, அடுத்து மதுரை தற்பொழுது திருச்சியில் அதிகமாக நடைபெற துவங்கி உள்ளது.

ஏற்கனவே ரூட்டு தல கலாச்சாரம் சத்திரம் பேருந்து நிலையத்தில் பயணிகளை பயமுறுத்தியது. கூட்டமாக அதிவேகமாக பைக்கில் மின்னல் வேகத்தில் வளைந்து நெளிந்து (zig zag) ஒட்டுகின்றனர்.இதில் சாதாரண வாகன ஓட்டிகள் பயந்தும், சிலர் விபத்திலும் சிக்குகின்றனர்.

திருச்சியில் ஆங்காங்கே பந்தயம் நடந்தாலும் கே கே நகர்,lic காலனி மன்னார்புரம் சாலையில் அதிகமா பைக் ரேஸிங் நடந்து வருகிறது. இரவு நேரங்களில் இன்னும் அதிகமான ரேஸ் நடைபெறுகிறது. பெரும்பாலான இரவு விபத்துகளுக்கு காரணம் இந்த பைரேஸ் ஓடுபவர்கள் தான் காரணம் என்கிறார்கள் பொதுமக்கள்.  இந்த பைக்ரேஸில் பெரும்பாலும் பள்ளியில் உயர்நிலை படிக்கும் மாணவர்களும், கல்லூரியில் படிக்கும் மாணவர்ளே பங்கேற்கிறார்கள். என்பது குறிப்பிடதக்கது.

திருச்சியில் நடைபெறும் பெரும்பாலான சங்கிலி பறிப்பு சம்பவங்களுக்கு பின்புலத்தில் இந்த பைக்ரேஸ் இருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இது குறித்து கறார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.

ஏற்கனவே ஹெல்மெட் விஷயத்தில் போக்குவரத்துக்கு காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது அதே போல மோட்டார் பந்தயத்திலும் நடவடிக்கை எடுத்தால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்

குண்டூர்
இளையா

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!