போலிஸ் அடிப்பதை தைரியமாக வீடியோ எடுத்த கல்லூரி மாணவி !

0 25

போலிஸ் அடிப்பதை தைரியமாக வீடியோ எடுத்த கல்லூரி மாணவியை பாராட்டிய போலிஸ் அதிகாரிகள் !

 

பெரம்பலூரில் இருந்து  துறையூர் செல்லும்  சாலையில் உள்ள அருணாரை பெட்ரோல் பங்கு ரோட்டில் 28.09.2019 மதியம்  எஸ்ஐக்கள் மணிகண்டன், அருண்குமார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த பக்கம் வந்த டாரஸ் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை போட முயன்றனர்.

அப்போது லாரியை நிறுத்தாமல் ஓட்டினார். இதன் சப் இன்ஸ்பெக்டர்கள் இருவரும் டூவீலரில் விரட்டிக் கொண்டு வந்தனர். ஓரு கட்டத்தில் அதே பகுதியில் உள்ள கேகே நகர் பகுதிக்குள் மணல் லாரியை திருப்பிய டிரைவர் வழியில்லாததால் லாரியை நிறுத்தி விட்டு ஓட்டம் பிடிக்க அதற்குள் அங்கு வந்த எஸ்ஐகள் இருவரும் டிரைவரை மடக்கி தாக்க ஆரம்பித்தனர்.

 

அங்குள்ள வீட்டில் இருந்த தனலட்சுமி கல்லூரியில் எம்எஸ்சி முதலாம் ஆண்டு படிக்கும் தாரணி என்ற மாணவி இந்த சம்பவங்களை செல்போனில் வீடியோவாக எடுக்க தொடங்கினார். சில நிமிடங்களில் சுதாரித்துக் கொண்ட எஸ்ஐக்கள் மணிகண்டன் மற்றும் அருண்குமார் மாணவி தாரணியிடம் இருந்த செல்போனை பறித்தனர்.

 

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தாரணி இது குறித்து தனது பெற்றோருக்கும் அக்கம்பக்கத்தினரிடம் கூறினார்.  பெற்றோர் உடனடியாக திரும்ப வந்து போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இனி இவ்வாறு செய்யமாட்டேன் என தாரணி எழுதி கொடுத்தால் போனை திருப்பி தருவதாக எஸ்ஐக்கள் கூறினர்.

 

இதனைப் பார்த்துக்கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் RTI சீனிவாசன் உடனடியா

க எஸ்பி,  மற்றும் திருச்சி மத்திய மண்டல ஐஜி உள்ளிட்டோருக்கு தகவல் அளித்தார்.

பெரம்பலூர் உயர் அதிகாரிகள் வருவதற்குள் எஸ்ஐக்கள் இருவரும் தாரணியின் செல்போனில் இருந்த வீடியோக்களை அழித்து விட்டனர். இதற்கு இடையில்  சமூக ஆர்வலர் RTI சீனிவாசன் புகாரின் அப்படையில் எஸ்.பி. நிஷா பார்த்திபன் உத்தரவின் பெயரில்  அடிப்படையில் டிஎஸ்பி ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் அழகேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவி தாரணியிடம் விசாரணை நடத்தினர்.   

 

மாணவியின் வாக்குமூலத்தை செல்போனில் பதிவு செய்து தைரியமாக வீடியோ எடுத்த மாணவியை பாராட்டிவிட்டு  செல்போன் திரும்ப கொடுத்து விட்டு சென்றார். 

சமூக ஆர்வலர் RTI சீனிவாசன்.

இதை அடுத்து திருட்டுத்தனமாக மணல் எடுத்து வந்த லாரியையும் பறிமுதல் செய்தனர்.  லாரி டிரைவர் கன்னியாக்குமரி மாவட்டத்தை சேர்ந்தவர். சுனில்குமார் என்பரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

 

டிரைவரை போலிசார் தாக்கிய சம்பவத்தை தைரியமாக வீடியோ எடுத்த அந்த மாணவியை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பாராட்டினார்கள். உயர் அதிகாரிகள்  பெரம்பலூர் எஸ்.பி, மற்றும் மத்திய மண்டல ஐஜி ஆகியோர் பாராட்டினார்கள்.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.