இடைத்தேர்தலில் காங்கிரஸ் – பாஜக நேரடிப் போட்டி?

0

இடைத்தேர்தலில் காங்கிரஸ் – பாஜக நேரடிப் போட்டி?
பாஜக தலைவர் அமித்ஷா தமிழக பாஜக நிர்வாகிகளோடு இடைத்தேர்தல் குறித்து காணொலிக் காட்சியில் அவசர ஆலோசனை

4 bismi svs

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக பீட்டர் அல்போன்ஸ் அல்லது குமரி அனந்தன், அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ.மாணிக்கராஜ் மகன் விஜயகுமார் அல்லது திரைப்பட இயக்குநர் நாஞ்சில் அன்பழகன் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதிமுகவின் சார்பில் வக்கீல் மனோஜ்பாண்டியனும் சீட் கேட்டு வருகிறார்.
நாங்குநேரி தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதால், அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடவும் வாய்ப்பு கேட்கிறது. முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இருவரும் நாங்குநேரியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
திசையன்விளை அருகே ஆனைக்குடி கிராமத்தில் ஆகஸ்ட் 30 அன்று நடைபெற்ற வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டத்தில் பனங்காட்டுப்படை கட்சியின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் போட்டியிடுவார் என்று பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட்ராஜா அறிவித்துள்ளார். பனங்காட்டுப்படை கட்சியின் வேட்பாளரை போட்டியிலிருந்து விலகிக்கொள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
நாம் தமிழர் கட்சியின் நாங்குநேரி தொகுதி வேட்பாளராக கார்வண்ணன் அல்லது லொபின் இருவரில் ஒருவரை அறிவிக்க வாய்ப்புள்ளது. புதுமுகங்கள் சிலரும் முயற்சித்து வருகின்றனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியும் தன்னுடைய வேட்பாளரை நாங்குநேரியில் களமிறக்க உள்ளது. களக்காடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளது.
திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி, பனங்காட்டுப்படை கட்சி என இப்போதே ஐந்து முனைப் போட்டிக்குத் தயாராக உள்ளது நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.