அடுத்த 6 மாதங்களில் 12 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்!

0 377

அடுத்த 6 மாதங்களில் 12 லட்சம் குழந்தைகள்

உயிரிழக்கும் அபாயம்!

 

கரோனாவின் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் அடுத்த 6 மாதங்களில் ஐந்து வயதிற்குட்பட்ட 12 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கக்கூடும் என்ற அதிர்ச்சித் தகவலை ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான் யுனிசெப் வெளியிட்டுள்ளது.

 

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளும்பெர்க் பொது சுகாதார பள்ளி அமைப்பின் ஆய்வாளர்கள் அண்மையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். கரோனா தடுப்பு நடவடிக்கையாக தெற்காசியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், வழக்கமான சுகாதார சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டள்ளதாகவும், குழந்தை பிறப்பு, சிசு பாதுகாப்பு, நோய்த் தடுப்பு, குடும்பக் கட்டுப்பாடு ஆகியவற்றில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

 

பல நாடுகளில் குழந்தைகளுக்கு பள்ளிகள் மூலமாகத்தான் உணவு கிடைத்துவந்த நிலையில், தற்போது அவை மூடப்பட்டுள்ளதால் முறையாக உணவின்றி  தவிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து கிடைக்காமல் குழந்தைகள் பெரும் அபாயத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த 6 மாதங்களில் ஐந்து வயதிற்குட்பட்ட 12 லட்சம் குழந்தைகள் வழக்கத்தைவிட கூடுதலாக உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியாவில் மட்டும் 3 லட்சம் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், பிரேசில், பாகிஸ்தான், நைஜீரியா, மாலி, சோமாலி ஆகிய நாடுகளில் உயிரிழப்பு அதிகளவில் இருக்கும் எனவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாக யுனிசெப் சுட்டிக் காட்டியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.