image

மதுரை விமான நிலையத்தில் வைத்து நடிகர் சிவகார்த்திகேயன் மீது கமல் ரசிகர்கள் என ஒரு கும்பல் தாக்க முயன்றதாலும், லேசான தாக்குதல் நடத்தியதால்  பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் சிவகார்த்திகேயனை மதுரை விமான நிலையத்தில் இன்று காலையில் கமல் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று தொலைக்காட்சி ஒன்றில் குஷ்புவிற்கு பேட்டியளித்தபோது, எனக்கு ரஜினி பிடிக்கும், ரஜினிதான் ரோல் மாடல் என்றும் ரஜினியைப் பார்த்துதான் சினிமாவிற்கு வந்தேன் என்றும் கூறினார். இத்தனைக்கும் கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படமான காக்கிச் சட்டை என்ற பெயரில் நடித்தவர் சிவகார்த்திகேயன்.

இதனால் கமல் ரசிகர்கள் ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது. கமல் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை டுவிட்டரில் விளாசி தள்ளி கொண்டிருந்தனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் சிவந்தி ஆதித்தனார் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், நடிகை ஹன்சிகா உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

sivakarthikeyan 1முன்னதாக, இந்த விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் கமல்ஹாசன் மதுரை விமான நிலையம் வந்தார். கமல்ஹாசனை வரவேற்க அவரது ரசிகர்கள் அங்கு குவிந்திருந்தனர். அவர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட நடிகர் கமல் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். தொடர்ந்து சில மணி நேரம் கழித்து சிவகார்த்தியன் மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்துள்ளார். விமானத்தில் இருந்து இறங்கி வெளியே வந்த சிவகார்த்திகேயனை கமல் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு அடிக்கப் பாய்ந்தனர். இந்த தாக்குதலில் இருந்து தப்பித்து ஒருவழியாக வெளியேறினார் அவர். இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான் என்னவோ சிவகார்த்திகேயனுடன் பாதுகாவலர்களும் உடன் வந்தனர். அவர்கள் கமல் ரசிகர்களைத் தடுத்து சிவகார்த்திகேயனை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதுகுறித்த வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது

sivakarthikeyan actor

பலரும் ட்விட்டர் தளத்தில் தாக்கியவர்களின் செயலைக் கண்டித்து தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள். #WeSupportSivakarthikeyan என்ற பெயரில் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.

விரைவில் கமல் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரது தரப்பிலும் இருந்து என்ன நடந்தது என்று தெளிவுபடுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சம்பவம் திரையுலக வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.