சுறுசுறுப்பாக வலம் வரும் ஸ்டாலின் – பதிலடி கொடுக்க தயாராகும் அதிமுக

0 10

சுறுப்பாக விடியல் மீட்பு பயணத்தில் வலம் வரும் ஸ்டாலின் – பதிலடி கொடுக்க தயாராகும் அதிமுக

2016 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதற்கு அச்சாரமாக அனைத்து கட்சிகளும் இப்போது கோதாவில் இறங்கிவிட்டார்கள். அதில் முதன்முதலாக  திமுக பொருளாளர் ஸ்டாலின்  தமிழகத்தின் பலபகுதிகளிலும் பேரணி பொதுக்கூட்டங்கள் நடத்தினார். இதில் கடைசியாக கடந்த நான்கு நாட்களாக `நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் எனும் பெயரில் கன்னியக்குமரியில் பயணம் தொடக்கியுள்ளார். கன்னியாக்குமாரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆட்டோவில் போவது, ஸ்கூட்டரில் போவது, டீக்கடையில் உட்கார்ந்து டீக்குடிப்பது. மக்களிடம் பேசுவது, விவசாயிகள், தொழிலாளர்கள் என பல தரப்பட்டவர்களையும் சந்தித்து வருகின்றார் ஸ்டலின்.

எந்தளவுக்கு அவர் மக்களிடம் செல்கிறாரோ அந்தளவு சமூக வலைதளங்களான பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்டவற்றில் இப்போதைக்கு ஸ்டாலின் தான் ஹாட் டிஸ்கசன். எப்படியோ தான் பேசப்படுகிறோம் என சந்தோசத்தில் இருக்கிறது திமுக கூடாரம்.

image

இப்படியிருக்க பதிலடி கொடுக்கும்  அதிரடி பிரச்சாரத்தை அதிமுக கையில் எடுத்துள்ளது. கடந்த சிலநாட்களாக கன்னியாகுமாரியில் ஒட்டப்பட்டுள்ள ஒரு போஸ்டர்தான் பெரும் பேச்சை கிளப்பியுள்ளது. அந்த போஸ்டரில் அதிமுகவுக்கு முடிவும் இல்லை. திமுகவுக்கு விடிவும் இல்லை. இதுதான் நமக்கு நாமே  என்று வாசகம் அடங்கியுள்ளது.

மேலும் முன்னால் அமைச்சரும் மாவட்ட அதிமுக செயலாளருமான  தளவாய் சுந்தரம், ஸ்டாலின் வருகையால் கன்னியாகுமரியில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. லோக் ஆயுக்தா வேண்டும். ஊழலை ஒழிப்பேன்  தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்கிறார் ஸ்டாலின், ஆனால் ஊழல்வாதிகளையும், சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பவர்களையும் தனது அருகில் அவர் வைத்துள்ளார். தமிழக அரசியல் வரலாற்றில் ஊழலுக்காக டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஒரே  ஆட்சி  திமுக தலைமையிலான  ஆட்சி மட்டும்தான் என்றுள்ளார்.

 kanniyakumari admk posterதமிழகம் முழுவதும் மு.க.ஸ்டாலின் போகும் இடங்களுக்கு அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில்சம்பத் உள்ளிட்ட பேச்சாளர்களை வைத்து பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் திமுக முடியட்டும். தமிழகம் விடியட்டும் என்ற கோஷத்தை  அதிமுக முன்னெடுக்க உள்ளதாக சொல்கிறார்கள் அதிமுகவினர்.

போதாகுறைக்கு மத்திய அமைச்சர் பொ.ராதாகிருஷ்ணன் ஸ்டாலின் பிரச்சாரத்தால் தமிழகத்தில் எந்த அரசியல் மாற்றமும் வந்துவிடாது என்று அறிக்கைவிட்டுள்ளார்.

“ஸ்டாலின் பிரச்சாரத்தால் அதிமுகவின் கூடாரமே கதி கலங்கியுள்ளது. ஸ்டாலின் வருகையின்போது பொதுமக்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். சாலையோர கடையில் டீ குடித்த ஸ்டாலினை செல்லப் பிள்ளையாகவே பார்க்கிறார்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு தக்க பதிலடி கொடுக்க திமுக தொடங்கிவிட்டது என்கிறார்கள்.

ஸ்டாலின் பயணம் புதிய பரபரப்பை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.