அழைப்பு தடைபட்டால் – இழப்பீடு

0 6

செல்லிடப்பேசி அழைப்பு தடைபட்டால் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள்இ வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு அளிக்க வேண்டும் என்று தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) உத்தரவிட்டுள்ளது.

a-consumer-watchdog-organization-in-canada-is-using-the-large-number-of-_625_403778_0_14040115_500
செல்லிடப்பேசியில் வாடிக்கையாளர்கள் பேசிக் கொண்டே இருக்கும்போது திடீரென்று அழைப்பு தடைபடும் பிரச்னை சமீப காலமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில்இ செல்லிடப்பேசி அழைப்பு தடைபட்டால் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள்இ வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு அளிக்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை டிராய் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
ஒரு முறை அழைப்பு தடைபட்டால் அதற்காக வாடிக்கையாளருக்கு ஒரு ரூபாய் இழப்பீட்டை சம்பந்தப்பட்ட நிறுவனம் அளிக்க வேண்டும். எனினும்இ ஒரு நாளில் ஏற்படும் 3 அழைப்புத் தடைளுக்கு மட்டுமே இழப்பீடு கிடைக்கும் என்று டிராய் தெரிவித்துள்ளது.
வரும் ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரவுள்ள இந்தப் புதிய விதிமுறையின்படிஇ செல்லிடப்பேசி அழைப்பு தடைபட்ட நான்கு மணிநேரத்துக்குள் அந்த அழைப்பை விடுத்த வாடிக்கையாளருக்கு அது குறித்தும்இ அவரது கணக்கில் வரவு வைக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை குறித்தும் சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் குறுந்தகவல் அனுப்பியாக வேண்டும்.
இந்தப் புதிய விதிமுறையானது வாடிக்கையாளர்களுக்கு ஓரளவுக்கு நிவாரணம் அளிப்பதோடு தொலைததொடர்பு நிறுவனங்கள் தங்கள் சேவையின் தரத்தை ஊக்குவிக்கவும் வழிவகுக்கும்.

Watching something on a cellphone
Watching something on a cellphone

மத்திய அமைச்சர் வரவேற்பு: டிராயின் இந்த உத்தரவை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்த உத்தரவை வரவேற்கிறோம். இந்த விவகாரத்தில் நுகர்வோரின் கவலைகளைத் தீர்ப்பதில் இது முக்கிய பங்காற்றும் என்று நம்புகிறோம். செல்லிடப்பேசி அழைப்பு தடைபடும் விவகாரத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.
இந்நிலையில்இ செல்லிடப்பேசி அழைப்பு தடைபட்டால் அதற்கு இழப்பீடு அளிக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை காரணமாக தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு நாள்தோறும் சுமார் ரூ.150 கோடி செலவு பிடிக்க வாய்ப்புள்ளதாக இந்திய செல்லிடப்பேசி சேவை நிறுவனங்கள் சங்கம் (சிஓஏஐ) மதிப்பிட்டுள்ளது.
விதிமுறையில் குறைபாடுகள்: இதனிடையேஇ செல்லிடப்பேசி அழைப்பு தடைபடும் பிரச்னைக்கு டிராய் வகுத்துள்ள புதிய விதிமுறைகளில் குறைபாடுகள் இருப்பதாக தொலைத்தொடர்பு நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர். இதனால் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் பணப்பயன் பெரிதாக இருக்காது என்பதோடுஇ இந்த உத்தரவை அமல்படுத்துவதும் பெரிய சவாலாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தவிரஇ தங்களுக்கு அளிக்கப்பட்ட தொலைத்தொடர்புச் சேவை உரிமங்களின்படி இந்த விதிமுறையை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சந்தேகம் எழுப்பியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.