wpid-nadikar-sangam-election.jpg.jpeg”தென்னிந்திய நடிகர் சங்கப் பெயரை ”தமிழ்நாடு நடிகர் சங்கம்” என மாற்றுங்கள்!” – ரஜினிகாந்த்

இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், முதல் வேலையாக தென்னிந்திய நடிகர்கள் சங்கம் என்பதை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்றுங்கள் என்று ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

நடிகர் சங்கத் தேர்தலில் காலையிலேயே வாக்களித்த ரஜினிகாந்த், நடிகர் சங்கத்தினருக்கு சில அறிவுரைகளை வழங்கினார்.

அதில்,

அனைவருக்கும் வணக்கம். நடிகர்கள் ஒரே குடும்பம், ஒரே இனம், ஒரே ஜாதி… தேர்தலில் யார் வென்றாலும் தோற்றாலும் நமக்குள் ஒற்றுமை முக்கியம். அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

கடந்த சில தினங்களாக சில வாக்குவாதங்கள் நடந்துவிட்டன. சரி, நடந்தது நடந்துவிட்டது. அதுக்காக நமக்குள் ஒற்றுமை இல்லை என ஊடகங்கள் நினைத்துவிடக் கூடாது.

ஒரு போட்டி வந்துவிட்டது. வெரிகுட். யாரு ஜெயிச்சாலும் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.wpid-nadikar-sangam-election-1.jpg.jpeg

யாரு ஜெயிச்சாலும் அவர்களுக்கு இரண்டு வேண்டுகோள்.

முதல் வேண்டுகோள், யாரு ஜெயிச்சி வந்தாலும் முதலில் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் என்ற பேரை எடுத்துவிட்டு, தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என்று மாற்றிவிடுங்கள்.

அடுத்து, இந்தத் தேர்தலில் நல்லா சிந்திச்சு, ஆயிரம் முறை யோசிச்சி வாக்குறுதிகள் கொடுத்திருப்பீர்கள். ஜெயிச்சி வந்தவங்க, உயிரே போனாலும் சரி அந்த வாக்குறுதிகளை நிறைவேத்தனும். அப்டி நிறைவேத்த முடியாமபப் போனா உடனே ராஜினாமா செஞ்சிடுங்க. அது உங்க மனசுக்கும் நிம்மதி. உங்களுக்கும் நற்பெயரைக் கொடுக்கும். நல்ல எடுத்துக் காட்டாகவும் இருப்பீங்க என்றார்.

: கமல் ஹாசன்

தேர்தலுக்குப் பிறகு தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். தவறுகளை திருத்திக் கொள்ள கால அவகாசம் இருக்கிறது என்று கமல் ஹாசன் கூறியுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. பல முன்னணி நடிகர்களும் காலை முதலே தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

wpid-nadikar-sangam.jpg.jpegவாக்குப் பதிவு செய்ய வந்த நடிகர் கமல் ஹாசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

”தென்னிந்திய நடிகர் சங்கம் மிகவும் பரம்பரியமானது. தென்னிந்திய நடிகர் சங்கம் இந்திய நடிகர் சங்கமாக மாற வேண்டும். இனத்தால், மதத்தால், மொழியால் பிளவுப்படுத்தக் கூடாது. இந்தியாவின் எந்த மூலைக்கு சென்றாலும், நடிகர்களுக்கென்று ஒரு கட்டிடம் இருக்க வேண்டும். தென்னிந்திய நடிகர் சங்கம் என் மூத்த கலைஞர்களால் கட்டப்பட்டது. அந்த இடத்தில் மீண்டும் கட்டிடம் வரும். தேர்தலுக்குப் பிறகு தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். தவறுகளை திருத்திக் கொள்ள கால அவகாசம் இருக்கிறது” என்றார் கமல் ஹாசன்

ரஜினிக்கும், கமலுக்கு கவுண்ட் குடுத்த கவுண்டமணி அய்யா நடிகர் சங்கமும் இருந்தாவே போதும் என்று கவுண்டமணி கவுண்டு குடுத்து எல்லோரையும் சிரிக்க வைத்தார்.