700 படங்கள் முடங்கிடக்கும் நிலையில் – பல படங்களின் 2ஆம் பாகத்தில் ஆர்வம்

0 281

believe-it-or-not-enthiran-2s-budget-is-rs-250-crores_776தமிழ் படங்கள் தயாரிப்பு எண்ணிக்கை வருடத்துக்கு வருடம் அதிகரிக்கிறது. தற்போது ஆண்டுக்கு 300 படங்கள் வெளியாகின்றன. இவற்றில் சில படங்கள் தவிர மற்றவை பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளன. புதுமுக நடிகர்களின் 700 படங்கள் தியேட்டர்கள் கிடைக்காமல் முடங்கிக்கிடக்கின்றன.

சில பிரபல டைரக்டர்களும் தயாரிப்பாளர்களும் சினிமா தொழிலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்கள். இந்த நிலையில், அவர்களின் பார்வை தற்போது வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை எடுப்பதில் திரும்பி இருக்கிறது.

இந்த இரண்டாம் பாக தொடர்ச்சிக்கு முதலில் வித்திட்டவர் எம்.ஜி.ஆர். ‘உலகம் சுற்றும் வாலிபன்’ வெளியானபோது படத்தின் இறுதியில் இரண்டாம் பாகமாக கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ வெளிவரும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.hqdefault

ஆனால் சில காரணங்களால் அந்த படம் தயாராகவில்லை. இப்போது, இரண்டாம் பாகம் படங்கள் உருவாகி வருகின்றன. ஜெமினிகணேசனின் ‘நான் அவனில்லை’ படம் மீண்டும் தயாரிக்கப்பட்டு அதன் இரண்டாம் பாகமும் வெளிவந்தது.

ரஜினிகாந்தின் ‘பில்லா’ படம் அஜித்குமார் நடிக்க தயாராகி வசூல் குவித்தது. அர்ஜுனின் ‘ஜெய்ந்த்,’ சத்யராஜின் ‘அமைதிப்படை’ படங்களும் இரண்டாம் பாகமாக வெளிவந்தன. லாரன்ஸ், தனது ‘காஞ்சனா’ படம் வெற்றிபெற்றதால் அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி வெளியிட்டார்.

அதுவும் வசூலில் சக்கைப்போடு போட்டது. இதனால் மூன்றாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கமல்ஹாசன், ’விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி திரைக்கு கொண்டுவர தயாராக வைத்துள்ளார்.

t0000344

சுந்தர்.சி ‘அரண்மனை’ பேய் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். சூர்யாவின் ‘சிங்கம்’ படத்தின் இரண்டு பாகங்களும் வசூலை அள்ளின. இதனால் அதன் மூன்றாம் பாகம் தயாராகி வருகிறது. தமிழ், தெலுங்கில் வந்து வசூல் சாதனை நிகழ்த்திய ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகி வருகிறது.

கார்த்திக் நடித்து வெற்றி பெற்ற அமரன் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி வருகிறது. ஏற்கனவே வெற்றி பெற்ற மேலும் பல படங்களின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் முயற்சிகளும் நடக்கின்றன.

இந்த பட்டியலில் எந்திரன், இந்தியன், பாட்ஷா, தளபதி, மன்மதன், முந்தானை முடிச்சு, சீவலப்பேரி பாண்டி, மாரி ஆகிய படங்கள் உள்ளன. எந்திரன் 2-ம் பாகம் படவேலைகளை டைரக்டர் ஷங்கர் தொடங்கியுள்ளார். இதில் ரஜினிகாந்துடன் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.Manmadhan_B

அவருடன் பேச்சு நடத்த ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல இருக்கிறார். ‘கபாலி’ படம் முடிந்ததும் ‘எந்திரன்-2’ படப்பிடிப்பு தொடங்குகிறது.

‘இந்தியன்’ படத்தில் கமல்ஹாசன் இரு வேடங்களில் வந்தார். இந்த படம் தமிழகத்தில் பட்டி தொட்டியெங்கும் கலக்கியது.

இதில் ஊழலை எதிர்த்து போராடும் அவருடைய வயதான இந்தியன் தாத்தா கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இதன் இரண்டாம் பாகத்தை தயாரிப்பது குறித்து டைரக்டர் ஷங்கருடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கூறினார்.

ரஜினிகாந்தின் திரையுலக வாழ்க்கையில் முத்திரை படமாக ‘பாட்ஷா’ அமைந்தது. இதன் இரண்டாம் பாகம் வரவேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இப்படத்தின் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணாவும் இரண்டாம் பாகம் கதையை தயார் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. ‘மன்மதன்’ சிம்புவுக்கு வெற்றிப்படமாக அமைந்தது.Batcha_B

‘முந்தானை முடிச்சு’ படம் பாக்யராஜ், ஊர்வசி ஜோடியாக நடித்து 1983-ல் வெளிவந்து வரவேற்பு பெற்றது. ‘சீவலப்பேரி பாண்டி’ நெப்போலியன் நடிப்பில் வந்து வசூல் குவித்தது. வெற்றி பெற்ற மேலும் பல படங்களின் இரண்டாம் பாகங்களை உருவாக்கும் முயற்சிகளும் நடக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.