சிறுமியைக் குதறிய காமக்கொடூரர்கள் ! அப்பா முதல்… ஐ.பி.எஸ். அதிகாரிகள் வரை..!

0 26

p3.கேரளாவில் சூர்யநெல்லியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி, செல்வாக்குமிக்க அரசியல்வாதிகள் உட்பட பலராலும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் சில ஆண்டுகளுக்குமுன், நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைப்போன்ற ஒரு கொடூரம் தற்போது சிவகங்கையில் நடந்துள்ளது. தன்னைப் பெற்ற அப்பா முதல் ஐ.பி.எஸ். அதிகாரிகள் வரை பலராலும் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார், 8-ம் வகுப்பு மாணவி ஒருவர்.

சிவகங்கையைச் சேர்ந்த முத்துப்பாண்டி, முன்னாள் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர். இவருடைய மகள் திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த ஜூன் மாதம், சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார் திவ்யா. அதில், “எனது அப்பா, அண்ணன், அண்ணனின் நண்பர்கள், அப்பாவின் நண்பர்கள் ஆகியோர் பலவந்தமாக என்னுடன் உடலுறவு கொண்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகார் அளித்தார். அதையடுத்து, மகளிர் காவல் துறையினர் அப்பா முத்துப்பாண்டி, அண்ணன் கார்த்திக் ஆகியோரை கைதுசெய்தனர். திவ்யாவிடம் மாஜிஸ்ட்ரேட் வாக்குமூலமும் பெறப்பட்டது. அதன் பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில், ‘திவ்யாவை ஐ.பி.எஸ் அதிகாரிகளும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு ஒன்றை வழக்கறிஞர் வின்சென்ட் தாக்கல் செய்தார்.p3a

வழக்கறிஞர் வின்சென்ட்டிடம் பேசினோம். “திவ்யாவின் அம்மா இறந்துவிட்டார். அப்பா வேறு திருமணம் செய்துகொண்டார். திவ்யா, தன் தாத்தா வீட்டில் வளர்ந்தார். திவ்யா, 8-ம் வகுப்பு படித்தபோது, பேத்தி என்றுகூட பார்க்காமல் திவ்யாவை கட்டாயப்படுத்தியும், மிரட்டியும் உடலுறவு கொண்டிருக்கிறார் தாத்தா. பிறகு, அப்பா வீட்டுக்கு வந்துவிட்டார் திவ்யா. அப்பாவும் குடிபோதையில் தன் மகளை பாலியல் ரீதியாக சீரழித்து உள்ளார். தொடர்ச்சியாகப் பல முறை மிரட்டி மகளுடன் உடலுறவு கொண்டுள்ளார். உடன்பிறந்த அண்ணனும் திவ்யாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அண்ணனுடைய நண்பர்களும் திவ்யாவுடன் உடலுறவு கொண்டுள்ளனர். அப்பா தனது நண்பரான கண்டக்டர் ஒருவரை அழைத்துவந்து, திவ்யாவுடன் உறவுவைக்கச் சொல்லியுள்ளார். ஒரு கட்டத்தில், இந்தக் கொடுமைகளைத் தாங்க முடியாமல், தன் பாட்டி (அப்பாவின் அம்மா) வீட்டுக்குச் சென்றுள்ளார்.
பாட்டி வீட்டுக்கு அருகே இருந்த வழக்கறிஞர் ஒருவர், திவ்யாவுக்கு அடைக்கலம் கொடுப்பதாகச் சொல்லி, தன் வீட்டுக்குக் கூட்டிப்போய் திவ்யாவுடன் பலவந்தமாக உடலுறவு கொண்டு அதைப் போட்டோவும் எடுத்துள்ளார்.

p3bஎங்குமே தனக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்து, தனது பாட்டியுடன் சிவகங்கை நகர் காவல் ​நிலையத்துக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த எஸ்.ஐ. ஷங்கர் என்பவர், ‘எல்லோரையும் கைதுசெய்துவிடலாம். நான் சொல்வதைக் கேள்’ என்று சொல்லிவிட்டு, திவ்யாவை மதுரைக்கு அழைத்துச்சென்று பிரபலமான நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கவைத்துள்ளார். குளிர்பானத்தில் மயக்க மருந்தைக் கலந்துகொடுத்து உடலுறவு கொண்டுள்ளார். அதன்பிறகு, எஸ்.ஐ. ஷங்கர் பல முறை இந்தப் பெண்ணுடன் உடலுறவு கொண்டுள்ளார். மேலும், சிவகங்கை  காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்த சிவக்குமாரும் திவ்யாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் இந்தப் பெண்ணை விருந்தாக்கியுள்ளார் இன்ஸ்பெக்டர் சிவக்குமார். தற்போது தென்மண்டலத்தில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், மதுரை மண்டலத்தில் இருந்து மாற்றலாகிய ஐ.பி.எஸ் ஒருவர் என அந்தச் சிறுமியை அனுபவித்துள்ளனர். இந்தக் கொடுமைகள் எல்லாமே அந்த நட்சத்திர ஹோட்டலில்தான் நடந்துள்ளது. இந்தப் பெண்ணுக்கு இரு முறை கருக்கலைப்பும் நடந்துள்ளது.

போலீஸ் உயர் அதிகாரிகளும் சம்பந்தப்பட்டு இருப்பதால், சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என மனுத்தாக்கல் செய்துள்ளோம். அந்தப் பெண்ணுக்கு நீதியும், இழப்பீடும் வேண்டும் எனக் கேட்டுள்ளோம். இதுகுறித்து முழு விசாரணை அறிக்கையை அளிக்குமாறு நீதிபதி கேட்டுள்ளார். அந்தப் பெண்ணின் வீடியோ வாக்குமூலமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

தமிழக அரசின் உள்துறை செயலாளரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளது உயர் நீதிமன்றம். அதைத்தொடர்ந்து எஸ்.ஐ ஷங்கர், தனியார் பள்ளி ஆசிரியர் சுரேஷ்குமார், அரவிந்த், செந்தில் உட்பட சிலர் கைதுசெய்யப்பட்டு உள்ளனர். மதுரை ஐ.ஜி அலுவலகத்தில் பணியாற்றிவரும் ஆய்வாளர் சிவக்குமாரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மனித உருவில் நடமாடும் இந்த மிருகங்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்!

நன்றி –  விகடன் 

Leave A Reply

Your email address will not be published.