அஜீத்தின் வேதாளமும் – சரத்குமாரின் ஏய் படமும் – ஓரே படமா ? அனல் பறக்கும் விவாதம் !

0 40

ajith-mass-Shooting-image sarathkumar-do-a-different-role-in-aai-second-part-27-12-13(ரெட்னு ஒரு சூர மொக்கை பார்த்து விட்டு வரும்போது எப்படி ஒரு எரிச்சல் தோன்றியதோ, அதை விட ஒரு மடங்கு அதிகமாகவே இப்போ எரிகிறது)

நான் ஒரு படத்தின் கதையை சொல்றேன். கவனமா படிங்க. பத்து வருடத்துக்கு முன்பு சரத்குமார் நமீதா (ஸ்ஸ்ஸ்ஆஆஆஆ) நடித்த ஏய்ன்னு ஒரு படம். வடிவேலு காமெடி கூட செமயா இருக்கும்.

பழனியில் சரத் டியுப் லைட் விற்பவராக வருவார். அவருடன் இணைந்து வடிவேலு தொழில் பண்ணுவார். அவருக்கு ஒரு தங்கச்சி, தங்கச்சிக்காக உயிரையே கொடுப்பார். தங்கச்சி கலெக்டருக்கு படிக்க வைக்க வேண்டுமென்பதற்காக சிரமப்பட்டு படிக்க வைப்பார்.

கோவமே படாமல் சிரித்த முகத்துடன் வடிவேலுவை இணையாக வைத்து காமெடி செய்து வருவார்.
தங்கச்சிக்கு பிரச்சனை கொடுப்பதால் வின்சென்ட் அசோகனை போட்டு பெரட்டி எடுத்து தான் பயங்கர பலசாலி என்பதை பார்வையாளர்களுக்கு நிரூபிப்பார். இடைவேளையில் நமீதா ஒரு உண்மையை கண்டுபிடிக்க சரத்துக்கு தங்கச்சியே கிடையாது, அவர் வளர்ப்பு தங்கச்சி என்று ட்விஸ்ட் வைப்பார்கள்.

இப்போ வேதாளம் படத்தின் கதை. அஜித் கொல்கத்தாவில் டாக்ஸி ஓட்டும் அப்பாவி, சூரி டாக்ஸியின் ஓனர். கோவமே வராத சாது, அப்பாவி, தங்கையான லட்சுமிமேனனை படிக்க வைக்க சிரமப்படும், தங்கை மேல் உயிரையே வைத்து இருக்கும் ஒரு அன்பு அண்ணன்.

ஒரு கெட்டவனை போலீஸில் காட்டி கொடுத்து விட்டு அதற்காக வில்லன்களிடம் சாக இருக்கும் போது எல்லாரையும் போட்டு பெரட்டி எடுத்து தான் பயங்கர பலசாலி என்பதை பார்வையாளர்களுக்கு நிரூபிப்பார். ஸ்ருதி அஜித் பயங்கர கொலைகாரன் என்பதை கண்டு பிடிக்க அஜித்துக்கு தங்கச்சியே கிடையாது, அவர் வளர்ப்பு தங்கச்சி என்று ட்விஸ்ட் வைப்பார்கள்.

ஏய் படத்தில் இடைவேளைக்கு பிறகு பெர்பார்மன்ஸில் பின்னி எடுத்து வில்லன்கள் கையால் சாவார் கலாபவன் மணி. அவரது தங்கையை தான் பழனியில் சரத் தன் தங்கையாக தத்தெடுத்து வளர்த்து வருவார்.
இந்த படத்தில் இடைவேளைக்கு பிறகு பெர்பார்மன்ஸில் பின்னி எடுத்து வில்லன்கள் கையால் சாவார் தம்பி ராமையா. அவரது மகளை தான் கொல்கத்தாவில் அஜித் தன் தங்கையாக தத்தெடுத்து வளர்த்து வருவார்.
இறுதியில் வில்லன்களை கொன்று படத்தை சுபமாக முடிக்கிறார்கள் சரத்தும் அஜித்தும்.

சாரி. கம்பேரிசன் கூடாதுல்ல. ஆனா அந்த படத்தை அப்பட்டமாக காப்பி அடித்தால் என்ன செய்வது.
படத்தின் ஆகச் சிறந்த எரிச்சல் சூரி. அவருக்கு ஒரு பர்சென்ட் கூட காமெடி வரவில்லை. மொத்த படத்தின் காமெடியை அவருக்கு கொடுத்து நம்மையும் சாகடிச்சியிருக்கிறார்கள்.

முதல் பாதி செம அறுவை. உக்காரவே முடியலை. இரண்டாம் பாதி கொஞ்சம் தேவலாம் முன்பாதியுடன் ஒப்பிடுகையில்.

ஒரே ஒரு காட்சி விளக்குகிறேன், இந்த இயக்குனர்கள் ரசிகர்களை எவ்வளவு மடையன் என்று நினைத்து காட்சிகளை அமைக்கிறார்கள் என தெரிந்து கொள்ளுங்கள்.

தம்பியை கொன்றவன் யாரென தெரியாத வில்லன், 3 ஐடி வல்லுனர்களை வைத்து ரெண்டு ஆப்பிள் மேக் கம்ப்யுட்டர்கள் , ஒரு புரொஜக்டர். ஒரு ஜிபிஆர்எஸ் ட்ராக்கர், ஒரு கம்ப்யுட்டர் ஆபீஸ் வைத்து சிரமப்பட்டு ஜப்பானுக்கெல்லாம் போன் செய்து அது அஜித் தான் என கண்டு பிடிக்கும் ஒரு தருணத்தில் வெறும் பட்டன் உள்ள செல்போனை வைத்துக் கொண்டு அதை கூட யூஸ் செய்யாமல் வில்லன் இடத்தை கண்டு பிடித்து வந்து அவர்களை கூண்டோடு கொலை செய்வார். . . . த்தா எங்களையெல்லாம் பார்த்தா எப்படிடா தெரியுது உங்களுக்கு.

அதை விட கொடுமை பத்து கிமீ தள்ளி யிருந்த ஸ்ருதி அடுத்த வினாடி அந்த கட்டிடத்தின் பதினைந்தாவது மாடியில் அஜித் செய்யும் கொலையை நேரில் பார்ப்பது.
ரெட்னு ஒரு சூர மொக்கை பார்த்து விட்டு வரும்போது எப்படி ஒரு எரிச்சல் தோன்றியதோ, அதை விட ஒரு மடங்கு அதிகமாகவே இப்போ எரிகிறது.

Courtesy: ஆரூர் மூனா

Leave A Reply

Your email address will not be published.