விவசாயமே இல்லாத நாட்டில் சக்கரையின் விலை ! விவசாயம் செய்யும் இந்தியாவில் சக்கரை விலை ? யார் ஏமாற்றுகிறார்கள் ?

0 25

சக்கரை  (3)இன்று சவுதி அரேபியாவில் நான் வேலை பார்க்கும் யான்பு என்கிற இடத்தில் எதேச்சையாக சூப்பர் மார்க்கெட் செல்ல நேர்ந்தது.. வழக்கமாக எந்த நேரமும் மக்கள் கூட்டத்தோடு பரபரப்பாகவும் சுருசுருப்பாகவும் இயங்கும் பாண்டா மார்க்கெட் இன்றும் தன்னுடைய நிலையிலிருந்து மாறாமல் இருந்தது..

அங்கு சர்க்கரை ( சீனி ) அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் வழக்கமாக இருக்கும் கூட்டத்தை விட கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது.. சர்க்கரை என்ன விலை என்பதை அறிவதற்காக அருகில் சென்றேன் 10 கிலோ சர்க்கரையின் விலை 16 ரியால் என அறிந்து ஒருகனம் ஆச்சர்யமும்.! மருகனம் ஆத்திரமும் அடைந்தேன்.!!!

சக்கரை  (2)ஆறுகள் இல்லைய, குளங்கள் இல்லை, மாதம் மும்மாரி மழை பெய்வதில்லை, கரும்பு விவசாயம் நான் பார்த்தவரை எங்கும் இல்லை, வருடத்தில் மொத்தத்தில் அரை மணி நேரம் மழை பெய்வதே அபூர்வமான விடயம்..

இருப்பினும் 16 ரியாலுக்கு அதாவது இந்திய ரூபாயின் கணக்கில் 272 ரூபாய்.. ஒரு கிலோ சர்க்கரையின் விலை 27 ரூபாய்.!!! விவசாயமே இல்லாத நாட்டில் சர்க்கரையை இறக்குமதி செய்து இந்த விலைக்கு தரமுடிகிரதே என ஒரு கணம் ஆச்சர்யப் பட்டாலும்.!!!

விவசாய நாடாக இருந்து.. அதிலும் கரும்பு விவசாயத்தில் உலகின் முன்னணி நாடாக இருக்கும் அன்னை இந்தியாவில்.. கடைகளுக்கு ஏற்றார்போல 40 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை சர்க்கரை விற்பனை செய்ய படுவதை அறிந்து வேதனை படாமல் வேறேன்ன செய்வது…

வரி வரி வரியென மக்களின் வயிற்றிலடித்து வயிறு வளர்க்கும் அரசாங்கமாகிப் போனதா இந்திய அரசாங்கம்.???

Vaikoram Lingam

https://web.facebook.com/vaikoram.lingam

Leave A Reply

Your email address will not be published.