உலகை உலுக்கிய பிஞ்சு உயிர் !

0 20

child1பார்க்கும்போதே நம் நெஞ்சை பதற வைத்து கண்களை கடலாக்கிவிடும் இந்தப் புகைப்படம்  ஒரு பிஞ்சுக் குழந்தைக்குக் கூட இந்த உலகத்தில் வாழ இடமில் லையா?’என்ற கேள்வியை நம் இதயத்தில் ஈட்டியாய் பாய்ச்சி பயங்கரவாதத்தின் கோரமுகத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

உலக நாடுகளையே பீதியடைய வைக்கும் ஐ.எஸ். அதி’ தீவிரவாத இயக்கமானது சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா போன்ற நாடுகளில் போர் தொடுத்து அப்பாவி மக்களை ஈவு இரக்கமில்லாமல் கொன்று குவித்து வருகிறது. அதுமட்டுமல்ல, இளம் பெண்களை கடத்தி பாலியல் சித்திரவதைகளை செய் கிறது. இளம்பெண்களை வியாபார பொரு ளாக்கி கொடுமைப்படுத்திக் கொண்டிருக் கிறது என்று  அவர்களிடமிருந்து தப்பி வந்த  ஈராக்கின் யாஜிதி இனத்தின் 18 வயது இளம்பெண் ஜினான், “டேஷஸ் ஸ்லேவ்’’என்ற புத்தகத்தை எழுதி ஐ.எஸ். தீவிரவாதிகளை அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்தக் கொடூரன்களிடமிருந்து உயிர் தப்பிக்க, பல்லாயிரக்கணக்கான சிரியா மக்கள் அண்டை நாடான துருக்கி வழியாக ஐரோப் பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்று பதுங்கி வருகிறார்கள். அப்படித்தான், துருக்கியி லிருந்து க்ரீஸ் நாட்டின் மோஸ் தீவுக்கு கள்ளத்தோணிகளில் 23 அகதிகள்  பாதுகாப்பற்ற நிலையில் பயணித்துக்கொண்டி ருந்தார்கள். ஆனால், கடல் அலையின் தீவிர(வாத)த் தால்  திடீரென்று துருக்கியின் பொத்ரும் நகருக்கு அருகே சென்றுகொண்டிருந்த தோணி  கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 9 பேர் மட்டுமே உயி ருடன் காப்பாற்றப்பட்டார்கள். நடுக்கடலில் பலியான மீதமுள்ள 14 பேரில் 5 பேர் குழந்தைகள். அந்த விபத்தில் பலியான அய்லான் குர்தி என்னும் மூன்று வயது பிஞ்சுக்குழந்தையின் சடலம்தான் கரையில் ஒதுங்கி உலகத்தை உலுக்கிவிட்டது. அகதிகளாக வருவோரை ஐரோப்பிய நாடுகள் புறக்கணித்துவரும் நிலையில், இந்தக் கொடூர நிகழ்வு  நடந்திருப்பது உலகம் முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது.

இதுகுறித்து,  கல்வியாளரும் சமூக ஆர்வலரு மான  எச். பீர் முகம்மது நம்மிடம், “””ஐ.எஸ். தீவிர வாத அமைப்பு சிரியாவை குறிவைத்து இன அழிப்பு செய்வதால்தான் ஏராளமான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்கிறார்கள். செய்யாத பாவத்திற்கும், குற்றத்திற்கும் தண்டனை அனுபவிக்கும் துயர நிலைக்கு இன்றைய சிரியாவின் ஒவ்வொரு குழந்தையும் மாறிக்கொண்டிருக்கிறது. கொஞ்சமும் நீதியோ அல்லது கருணையோ இல்லா மல் எல்லோரையும் அவர்கள் கொன்று குவிக் கிறார்கள். பாரம்பரிய கலை மற்றும் கலாசார சின்னங்களை அழிக்கிறார்கள். ஐ.எஸ். அமைப்பினர் சிரியாவிற்குள் நுழைந்த கடந்த ஓராண்டில் ஏராள மான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஐ.நா சபையும், அரபு நாடுகளும் இதில் தலையிட்டு இந்த போரை மேலும் தொடர விடாமல் தடுக்கவேண்டும்” என்கிறார் வேதனையுடன்.child3
உலகை உலுக்கிய இந்த புகைப்படம்  சமூக வலைத்தளங்களில் கடல் அலையைப்போல பரவிக்கொண்டிருக்க… ஒடிசாவின் பூரி கடற்கரையில் புகழ்பெற்ற ஓவியரால், வரையப்பட்ட மணலில் புதைந்து கிடக்கும் சிறுவனின் ஓவியம்  பலரையும் “உச்’ கொட்டவைத்துவிட்டது. இப்படி, குழந்தையின் மரணத்துக்கு சர்வதேச அரங்கில்  நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்  உலக புகழ்பெற்ற பல்வேறு ஓவியர்கள் மற்றும் சிற்ப கலைஞர்கள் அக்குழந்தையின் ஓவியத்தை வரைந்து உலகறிய செய்துகொண்டிருக்கிறார்கள்.

வியட்நாம் போரில், குண்டுவீச்சின்போது தீக் காயங்களுடன் உயிர்தப்பித்து ஓடிவந்த சிறுமியின் புகைப்படம், உலகையே உலுக்கி 19 வருடங்களாக நடைபெற்ற வியட்நாம் போரை முடிவுக்கு கொண்டு வந்தது. இப்போது, இந்தப் புகைப்படம், ஊடகங் கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு உலக மனசாட்சிகளை உசுப்பி தீவிரவாதத்துக்கும் யுத்தங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்குமா? என்ற விவாதம் உலகம் முழுக்க தீவிரமாகிக்கொண்டி ருப்பதோடு… ஐரோப்பிய நாடுகளின் இதயத்தில் ஈரம் கசிய வைத்திருக்கிறது.

இதுவரை, அகதிகள் வருகையை கரப்பான் பூச்சிகளை விரட்டுவதைப்போல விரட்டிக்கொண்டி ருந்தன  ஐரோப்பிய நாடுகள். அதற்குக் காரணம்,   நிறைய அகதிகள் வந்துவிட்டால் என்ன செய்வது? எப்படி சமாளிப்பது? என்ற தயக்கம்.  மதப்பிரச் சினைகள் ஏற்படுமோ என்ற பதட்டம் இருந்தது. ஆனால்,  குழந்தையின் படம் வெளி யான பிறகு, நிலைமை மாறி “வெல் கம்’’அட்டையுடன் வரவேற்கத் தொடங்கிவிட்டார்கள் ஐரோப்பிய மக்கள்.  ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் சுமார் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பேரணி ஒன்றை நடத்தி அனைவரையும் ஆச்சரியப் படுத்தியுள்ளனர். இந்த பேரணியில் “”அகதிகள் வரவேற்கப்படுகிறார்கள்” என்பது போன்ற வாசகங்களை பொது மக்கள் ஏந்தி சென்றனர்.  இப்படி, மனிதாபிமானம் கொண்ட மக்கள் மனதில் ஏற்பட்ட தாக்கம் ஐரோப்பிய நாட்டு அரசின் இதயத்தை திறக்க ஆரம்பித்துவிட்டது.

தஞ்சம்புக வரும் அகதிகளை அனுமதிக்காமல்  பூட்டப்பட்டிருந்த ஜெர்மனியின் கதவுகள் திறக்கப்பட்டி ருக்கின்றன.  அகதிகளின் வாழ்வாதா ரத்துக்காக 74 ஆயிரத்து 336 கோடி ரூபாய் நிதியுதவி செய்வதாக உறுயளித் திருக்கிறது ஜெர்மனி. அதுமட்டுமல்ல, இந்த ஆண்டிற்குள் 8 லட்சத்துக்கு மேற்பட்ட அகதிகள் வருவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறார்கள்.

மேலும்,  ஹங்கேரியில்  சிக்கித் தவித்துக்கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான அகதிகள் ஆஸ்திரியா நாட்டின் எல்லையான நிக்கல்டோர்ப்புக்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு தொண்டு நிறுவனங்       களின் சார்பாக அவர்களுக்கு உணவு, உடை, காலணிகள் என அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியா  நாட்டு பிரதமர் டோனி அபோட் “”அகதிகளை அனுமதிக்க முடிவு செய்திருக்கிறோம். குறிப்பாக குழந்தைகள், பெண்கள், சிறுபான்மை மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்”’’என்று மனம் நெகிழ்ந்து பேசியிருக்கிறார். இங்கிலாந்தும் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது   குறித்து யோசித்து வருகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவ ரான போப் பிரான்சிஸ் “”ஐரோப்பாவில் உள்ள ஒவ்வொரு திருச்சபையும் ஓர் அகதி குடும்பத்துக்கு அடைக்கலம் தரவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். அனைத்து நிலைகளிலும் மாற்றங்கள் தெரிகின்றன.

ஐ.எஸ். தீவிரவாதிகளிடமிருந்து உயிர் தப்பி ஓடிவந்த அகதிகளை ஏற்காமல் இருந்த பல்வேறு நாடுகள் அடைக்கலம் கொடுக்க வைத்தது சிறுவனின் ஒரே  ஒரு புகைப்படம்தான். உலகை உலுக்கிய குழந்தையின் மரணத்தை… உலுக்க வைத்தது நான்காவது தூண் என்று சொல்லப்படும் ஊடகங்களே!

இலங்கை ராணுவத்தின் கொடூரத் தாக்கு தலின்போது எத்தனையோ பிஞ்சுகள் தமிழீழத்தில் கொடூரமாகச் சிதைக்கப்பட்டன. அப்போது இந்த ஊடகங்களும் உலக நாடுகளும் அசைவற்று மவுன சாட்சிகளாக நின்றதை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

நன்றி – நக்கீரன்

Leave A Reply

Your email address will not be published.