திருச்சி புனித வளனார் பள்ளி மாணவர்களின் சாகச சாதனை…. தொடர வாழ்த்துகள்.

0 26

DSC_4035இந்திய தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமம் (SGFI) சார்பில் மாநில அளவிலான சாய்வாங்டோ போட்டிகள் நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.

இதில் அனைத்து மாவட்ட பள்ளிகளை சேர்ந்த 14, 17, மற்றும் 19வயதிற்க்குட்பட்ட மாணவர்கள் 250க்கு மேற்பட்டோர் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திருநாவுக்கரசு போட்டிகளை துவக்கி வைத்தார்.

இப்போட்டியில் திருச்சியில் உள்ள புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி சேர்ந்த 10ம்வகுப்பு மாணவன்  ஸ்ரீதர் மற்றும் 9ம்வகுப்பு மாணவன் கிஷோர் ஆகியோர் முதல் இடத்தை பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் டிசம்பர் மாதம் பஞ்சாப்பில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இதே போல் இந்திய தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமம் (SGFI) சார்பில் வேலூர்  மாவட்டம் ஆற்காட்டில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டிகள் நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்ட பள்ளிகளை  சேர்ந்த 14, 17, மற்றும் 19வயதிற்க்குட்பட்ட மாணவர்கள் 250க்கு மேற்பட்டோர் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.

வேலூர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளார் மணி போட்டிகளை துவக்கி வைத்தார். இப்போட்டியில் திருச்சியில் உள்ள புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன் ஆதவன் கலந்து கொண்டு முதல் இடத்தை பெற்று தேசிய அளவில் நடைபெற உள்ள ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் அருட்தந்தை. சைமன்ராஜ் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் சகாயராஜ், பாண்டியன் பரத், குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினார்.

திருச்சியிலிருந்து இந்திய அளவிளான போட்டிகளுக்கு தேர்வாகியிருக்கும் திருச்சி மாணவர்களின் இவர்களின் சாதனை தொடர  அங்குசம் சார்பில்  வாழ்த்துவோம்.

Leave A Reply

Your email address will not be published.