எம்.எல்.ஏவை விளாசிய விஜயகாந்த்- வெள்ள நிவாரணம் கொடுக்க போன இடத்தில் ஏற்பட்ட வில்லங்கம்

0 21

image
கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகளை பார்க்க சென்ற போது பண்ருட்டி எம்.எல்.ஏ. சிவக்கொழுந்துவை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சரமாரியாக அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமது வேனின் டிரைவரையும் விஜயகாந்த் கோபத்தில் உதைத்தது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்பட்டது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று பண்ருட்டி பெரியகாட்டுப்பாளையம், விசூர் ஆகிய இடங்களுக்கு சென்று வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் அப்பகுதி மக்களுக்கு அரிசி, வேஷ்டி, சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

அப்போது அங்கு மக்கள் கூட்ட அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து பிரச்சார வேனில் நின்றிருந்த விஜயகாந்த், வண்டியை வேகமாக எடுக்கச் சொல்லி கோபத்தில் டிரைவரை உதைத்துள்ளார்.

பின்னர் வேனில் தமக்கு பின்னால் நின்றிருந்த பண்ருட்டி எம்.எல்.ஏ. சிவக்கொழுந்தின் தலையில் ஓங்கி 4 முறை சரமாரியாக அடித்தார் விஜயகாந்த். தொகுதி முன்னிலையில் விஜயகாந்த் அப்பகுதி எம்.எல்.ஏ.வை அடித்ததால் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

பொதுவாக விஜயகாந்த் பொது இடங்களில் கோபப்பட்டு கட்சியினரை அடிப்பது வழக்கமாக ஒன்றுதான்; அதேபோல் பத்திரிகையாளர்களிடம் பாயக் கூடியவர்..

இந்த நிலையில் கோபத்தை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஒரு வார காலம் கோவையை அடுத்த ஈஷா யோகா மையத்துக்கு சென்று யோகா பயிற்சிகளை கற்றுக் கொண்டு நேற்றுதான் சென்னை திரும்பியிருந்தார் விஜயகாந்த்.

இந்நிலையில் மீண்டும் கோபத்துடன் எம்.எல்.ஏ.வை விஜயகாந்த் தாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.